20130418 நிஃப்டியின் அலசல்


நாம் முன்னர் பார்த்துள்ள ஹெட் & ஷோல்டர் அமைப்பின்படி 5200 வரை கீழே செல்லக்கூடிய ஒரு அமைப்பாக இருக்கிறதென்று எழுதியிருந்தேன்.

20130418 NIFTY 1 Daily

நெக்லைன் உடைந்தபிறகு, ஏப்ரல் 3 அன்று நெக்லைனை ஒரு ரீடெஸ்ட் செய்த பிறகு, 5477 வரை வந்தது இன்டெக்ஸ்.

— x x — x x — x x —

ஜனவரி 29, ’13 ஹையைப் பார்த்தால் அது 6111.80 என்ற லெவலிலே இருக்கிறது. இந்த 6111.80 டோ 5477.20 வரையிலான இறக்கம் 634.60 புள்ளிகளாகும். இந்த இறக்கத்தின் Fibonacci retracements லைன்கள் கீழேயிருக்கும் மற்றொரு சார்ட்டில் வரைந்து பார்த்தால்,

 38.2% retracement = 5720

50.0% retracement = 5795

61.8% retracement = 5870

என்ற லெவல்களிலிருப்பதைப் பாருங்கள்.  ஆக, தற்சமயம் 5870 லெவல்கள் ஒரு ரெஸிஸ்டென்சாக அமைய ஒரு வாய்ப்பிருக்கிறது.

20130418 NIFTY 2 Fib levels

இதே சார்ட்டிலேயே DTL என்று குறிப்பிட்டு, ஒரு கோட்டினை சுட்டிக்காட்டியுள்ளேன். இது ஜனவரி மற்றும் மார்ச் “ஹை” விலைகளை இணைத்து வரையப்பட்டுள்ள ஒரு டௌண்ட்ரெண்ட் லைன். இந்த லைனும் ஒரு ரெஸிஸ்டென்சாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். இது சாய்வாக இருப்பதால், ஒரு 5820-5840 லெவல்களை இந்த DTL லைன் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, நிஃப்டியின் தற்போதைய ஏற்றமானது ஒரு ரெஸிஸ்டென்ஸ் லெவல்களுக்கு மிக அருகிலிருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

— x x — x x — x x —

மூன்றாவதாக உள்ள இந்த வார வரைபடத்தைப் பாருங்கள்.

படம் 3: நிஃப்டி வார வரைபடம். அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்

படம் 3: நிஃப்டி வார வரைபடம். அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்

அதிலே, 2009 மார்ச் “லோ”வையும், (ஜெனிஃபர் லோபஸ் – Jennifer Lopez – “ஜே லோ” இல்லைங்க! J) 2011 மார்ச் லோ”வையும் (கட்டம் கட்டி ஹைலைட் செய்யபட்டுள்ள இடங்கள்) சேர்த்து ஒரு லைன் வரைந்து, அதனை அதே திசையிலேயே மேலே நோக்கி நீட்டி வரைந்தால், அந்த அப்ட்ரெண்ட் லைன், ஜனவரி 2012-இலும், ஏப்ரல் 2013-இலும் (அட! போன வாரந்தாங்க!) சப்போர்ட்டாக இருந்திருக்கிறது. இந்த சப்போர்ட் தொடருமா? காளைகள் வலிமை பெறுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

DLF-I: 34EMA ரெஸிஸ்டென்ஸ் & 200 EMA&SMA சப்போர்ட்


ஹலோ!
முன்குறிப்பு: நான் முந்தைய பதிவிலே சொன்னது போல, kaalaiyumkaradiyum@googlegroups.com-இல் எனது பதிவுகளைத் துவங்கியுள்ளேன். நீங்களும் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இணைந்துகொள்ளுங்கள்! இனிமேல் இந்த blog-இல் நான் எழுதுவது குறைந்துவிடும். நன்றி!

DLF-I-இல் 34 EMA R-ஆகவும், 200 MA-க்களின் band ஒரு சப்போர்ட்டாகவும் இருப்பதைப் பாருங்கள்.

சிகப்பு நிற வட்டத்துக்குள், விலை லோயர் லோ உருவாக்குகிறது. ஆனால், அதற்கு நேர்கீழே RSI-யானது ஒரு ஹையர் ஹை உருவாக்கி, பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் காட்டுகிறது.

அங்கு ஹைலைட் செய்துள்ள இடத்தில் RSI டபுள் டாப் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த டாப்-ஐ உடைத்து RSI மேலே சென்றால், அப்போது ‘BUY’.
அக்டோபர், நவம்பர் 2012-இல் 200 MA-க்களின் band கீழாக உடைபட்டாலும், அப்போது நல்ல சப்போர்ட்டாக இருந்தது. இப்போதும் இந்த band சப்போர்ட்டாக இருக்குமா? “History repeats itself” என்று சொல்கிறார்களே, அதுபோல சரித்திரம் மறுபடியும் நடக்குமா?

பார்க்கலாம்!
அன்புடன்,
பாபு கோதண்டராமன்

34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I

34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I

டைவர்ஜென்ஸ்: ஒரு மறுபார்வை! Divergence Revis(it)ed


டைவர்ஜென்ஸ் என்பதற்கு சரியான விளக்கம் இப்போதுதான் என்னால் கொடுக்கமுடிகிறது.

1. category 1: விலை ஒரு பக்கம் செல்லும்போது, இண்டிக்கேட்டர்களும் ஆசிலேட்டர்களும் (இ & ஆ-க்கள்) மறு பக்கம் செல்வது.

2. category 2: விலை எங்கேயும் செல்லாது (அதாவது ஒரே flat-ஆக இருக்கும்). ஆனால், இ & ஆ-க்கள் ஏதேனும் ஒரு திசையில் செல்லத் துவங்கும்.

இந்த இரண்டு category-களில் எது மிக நல்லது என்பதெல்லாம் நாம் நம்முடைய அனுபவத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

டெக்னிக்கல் அனாலிசிஸில் “எப்போது வாங்குவது? எப்போது விற்பது?”

ரொம்ப சிம்பிள்!

1. சப்போர்ட் அருகில் வாங்க வேண்டும்; ரெஸிஸ்டென்ஸ் அருகில் விற்க வேண்டும்.

2. அதேபோல, சப்போர்ட் உடைபட்டால் விற்க வேண்டும்; ரெஸிஸ்டென்ஸ் உடைபட்டால் வாங்க வேண்டும்.

3. இவற்றையெல்லாம் விட அதிமுக்கியம் என்னவென்றால், அப்ட்ரெண்டில் இருக்கும் பங்கை முதலில் வாங்கி, பின்னர் இலாபத்தில் விற்க வேண்டும். டௌன்ட்ரெண்டில் இருக்கும் பங்கை முதலில் விற்று பின்னர் விலை இறங்கும்போது வாங்கி இலாபம் பார்க்கவேண்டும்.

ஒரு சில கேள்விகள்

1. இப்போது அப்ட்ரெண்டில் இருக்கும் ஏதேனும் ஒரு சில பங்குகள் ஞாபகம் வருகிறதா? அதாவது, ஏதேனும் ITC, HINDUNILVR போன்று லைஃப்டைம் ஹை-க்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பங்குகளைப் பாருங்கள். இவைகளில் ஷார்ட் போகலாமா?  “வாங்கி விற்கவேண்டும்” என்ற நியதிப்படி எப்போதெல்லாம் correction நடந்து மேலே திரும்புகிறதோ அப்போது வாங்க வேண்டும். “ஷார்ட்” பொசிஷனே எடுக்கக்கூடாது.

2. அதேபோல HINDALCO போன்று லைஃப்டைம் லோ-க்களை பார்க்கும் பங்குளில் “லாங்” போகலாமா? கூடாது! விற்றுத்தான் வாங்க வேண்டும். “லாங்” பொசிஷன் எடுக்கவே கூடாது.

இந்த HINDALCO-I டெய்லி சார்ட் பாருங்கள்.

படம் 1: HINDALCO-I டெய்லி சார்ட்

படம் 1: HINDALCO-I டெய்லி சார்ட்

12/03/13 வரை மட்டுமே டெய்லி வியூ கொடுத்துள்ளேன்.

2/1/13-இல் உச்ச விலை 138.25.

அதிலிருந்து இறங்கி 4/3/13-இல் 94.65 வரை கீழே வந்துள்ளது.

அங்கிருந்து 7,8,11 மற்றும் 12 தேதிகளில் 102.50 என்ற உச்ச லெவலில் இருந்திருக்கிறது. இந்த ஏரியாவை ஒரு வட்டமிட்டு, shade அடித்து ஹைலைட் செய்திருக்கிறேன்.

இந்த இடத்தை நாம் இப்போது Hourly சார்ட்டில் பார்க்கலாம்.

மறுபடியும் ஒரு கேள்வி! (ஹலோ! கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். என்னைத் திருப்பி கேள்வி கேட்கக்கூடாது!… சும்மாதாங்க!)

ஏன் Hourly chart பார்க்கவேண்டும்?

ஏனென்றால், டெய்லி-யில் டௌன்ட்ரெண்ட்-ஆக இருப்பதால் இதை விற்றுத்தான் வாங்கவேண்டும். (அதாவது, ஃபர்ஸ்ட் ஷார்ட்; அப்புறம் கவர் யுவர் ஷார்ட்ஸ்).

ஆதலால், டெய்லி-யை விட அடுத்த சிறிய டைம்ஃபிரேம்-ஆன Hourly சார்ட்டினைப் பார்த்து, அதிலே எங்கே “ஷார்ட்” என்ட்ரி எடுப்பதென்று தீர்மானிக்க வேண்டும். அதனால்தான் Hourly சார்ட் பார்க்கிறோம்.

கீழேயிருக்கும் படத்தைச் சும்மா ஒரு லுக் விடுங்கள்.

படம் 2: HINDALCO-I Hourly என்ன தெரிகிறது?

படம் 2: HINDALCO-I Hourly என்ன தெரிகிறது?

அந்த ஹைலைட் செய்திருக்குமிடத்தில் விலையானது 102.50 என்ற லெவல்களிலே நான்கு தடவைகள் முட்டி மோதியிருக்கிறது. அதற்கு நேர்கீழே இ & ஆ-க்கள் ஒவ்வொரு லெவலிலும் கீழே செல்ல ஆரம்பிக்கின்றன. இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க நாம் அந்த நான்கு  முறை உச்ச விலைகளுக்கு நேராகவும் செங்குத்துக் கோடுகள் (vertical lines) வரைந்து பார்க்கலாம்.

படம் 3: நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா? புரிகிறதா?

படம் 3: நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா? புரிகிறதா?

இப்போது தெளிவாகிறதா? இந்த நெகட்டிவ் டைவர்ஜென்சுக்குப் பிறகு விலையானது 13/3/13 அன்று gap down-இல் ஆரம்பித்து, 99-ஐ உடைத்தெறிந்து விட்டுக் கீழே சென்றபிறகு, 86.80 வரை இறங்கி வந்துள்ளது.

ரீடெஸ்ட் – கவனம்: நான் அடிக்கடி சொல்லியிருக்கின்றேன் “பங்குச்சந்தையில் ஒரு தடவை சான்ஸ் மிஸ் செய்தாலும், மீண்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான நிதானமும் அவசியம்” என்று.

அப்படி 13/3 அன்று 99-ஐ உடைத்துக் கீழே இறங்கினாலும், 15/3 அன்று அந்த லெவல் ரெஸிஸ்டென்ஸ்-ஆக மாறி ரீடெஸ்ட் நடந்துள்ளது. இப்போது சொல்லுங்கள். இறங்குமுகத்திலிருக்கும் ஹிண்டால்கோ-வை அப்போது, அந்த ரெஸிஸ்டென்ஸ் அருகில் வந்தபோது நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும்?

கஷ்டமான கேள்வியா? நான்தான் ஆரம்பத்திலேயே “எப்போது வாங்குவது? எப்போது விற்பது?” என்ற தலைப்பில் க்ளூ கொடுத்து விட்டேனே! அதுமட்டுமில்லாமல் மேலே இருக்கும் பத்தியிலும் இரண்டு பதங்களை Bold செய்துள்ளேனே! ஈஸிதானே? J

இந்த டிரேட்-இன் எச்சரிக்கைகள்

1) ஸ்டாப்லாஸ் எங்கே வைப்பது, டார்கெட் எவ்வளவு என்றெல்லாம் உறுதியாகக் கூற முடியாத ஒரு அனாலிசிஸ் இது.

2) அதைவிட முக்கியமானது என்னவென்றால், எந்த இடத்தில் ஷார்ட் பொசிஷன் எடுப்பது? சப்போஸ் 3 என்ற இடத்தில் எடுத்திருந்தால், மறுபடியும் 4 என்ற இடத்தில் விலை வரும்போது நமக்குக் குழப்பமாகவும், “நம்முடைய டிரேட் என்ன லாஸ் ஆகிவிட்டதோ?“ என்ற பய உணர்வும் நம்மைக் குழப்பிவிட்டிருக்கும்தானே?

3) 4 என்ற இடத்தில் எடுத்திருக்கலாமென்றால், நான்காவது முறையும் வருமென்று நிச்சயமாக நமக்கெப்படித் தெரியும்?

நான் இங்கே எழுதுவதெல்லாம் ஒரு இன்ஃபர்மேஷன்தான்: ஒரு சில ஐடியாக்கள்தான். கற்றுக்கொண்டு முடிவெடுப்பது உங்கள் கையில்தான். ஆக அனுபவம் அவசியம்.

அந்த அனுபவம் கிடைக்கும் வரையிலும், “பாருங்க, பாருங்க! பாத்துக்கிட்டேயிருங்க!” அதற்கப்புறம் “அனுபவி ராஜா! அனுபவி”தான்! J

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: இந்த வாரம் பூராவும் டைவர்ஜென்ஸ்-ஐ வைத்தே ஒட்டிவிட்டேன் போலிருக்கிறதே! அடுத்த வாரம் வேறேதாவது எழுத முயற்சிக்கிறேன்! 🙂