3இன்1 – 20110818 அன்றைய INFOSYS


ஸ்டாக்     நாள்     விலை    Buy                                Sell
INFY    18-08-2011    2354.10    2488-க்கு மேல்     2342.35-க்குக் கீழ்

படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளவும்!

-பாபு கோதண்டராமன்

படம்: 3 இன் 1 - 20110818 INFOSYS

3இன்1 பேட்டர்ன் – 20110808 JUBLFOOD


ரொம்ப ரிஸ்க்கான டிரேடுங்க! சும்மா ஒரு லுக்கு மட்டும் விட்டு வச்சுக்கோங்க, இந்த பேட்டர்ன் வொர்க் ஆகுதா, இல்லையான்னு!

20110707 JUBLFOOD கரடியின் கொடி பறக்குது என்ற தலைப்பில் ஒரு பேட்டர்ன் பார்த்தோம். அந்த பேட்டர்னின் சப்போர்ட் உடைபட ரொம்ப நாட்கள் எடுத்துக்கிட்டதால, அது ஒரு ‘இன்-வேலிட் (invalid)’ பேட்டர்னா போயிடிச்சி!

படம்: JUBLFOOD வார வரைபடம் - 3இன்1 அமைப்பு

 

 

3இன்1 -[4] 20110715 அட்டவணையின் மறு, மறு பார்வை! பேட்டர்ன்களின்


இதற்கு முந்தைய பதிவுகளெயெல்லாம் பார்க்க இங்கே “கிளிக்”கிடவும்.

அனைத்து விபரங்களும் படங்களிலேயே உள்ளன. HCC மட்டும் நான் இங்கே சேர்க்கவில்லை (ஒரிஜினல் லிஸ்ட்டில் இருந்தது). ஏனெனில், சென்ற 22/07 அன்றைய அலசலில் அது எந்தவொரு மூவ்மெண்ட்டும் இல்லாமல் இருப்பதால், அதனை நீக்கி விட்டோம்.

படம் 1: 3இன்1 CROMPTONGREAV மறுபார்வை

படம் 2: 3இன்1 HDIL மறுபார்வை

படம் 3: 3இன்1 KRBL மறுபார்வை

படம் 4: 3இன்1 M&M மறுபார்வை

படம் 5: SATYAMCOMP 3இன்1 - ஓ மை காட்!

படம் 6: 3இன்1 TITAN மறுபார்வை

3 இன் 1 – [3] 20110715 அட்டவணையின் மறுபார்வை


இது ஏதோ கிரேக்க மொழி என்று நினைப்பவர்களுக்கு சிறிது உதவி செய்வதற்காக, இங்கே முந்தைய மூன்று பதிவுகளின் இணைப்புகள் உள்ளன. இவைகளைப் படித்துப் பார்த்து விட்டு இந்தப் பதிவை படித்தீர்களேயானால், கொஞ்சம் நன்றாகப் புரியும். (கோபம் வேண்டாம், ok?)

  1. குச்சி வரைபடம் அறிமுகம் (OHLC Bar Charts)
  2. 3இன்1 வரைபடப் புதிருக்கான விடை 
  3.  20110715 3இன்1 அட்டவணை

இந்த அட்டவணையிலிருக்கும் பங்குகளில்தான், என்னென்ன நடந்திருக்கு என்று சார்ட்டுகளைப் பார்க்கலாம்.

3இன்1 என்று மட்டுமல்லாமல், TITAN வேறொரு பேட்டர்னிலும் மிக சுவாரஸ்யமான நிலையில் உள்ளது. அதனாலதான் அதைக் கடைசியில கொடுத்திருக்கேன். சஸ்பென்ஸ்! 🙂

-பாபு கோதண்டராமன்

 

படம் 1: 3 இன் 1 15/07 எ.கா.-இன் 22/07 நிலை

படம் 2: 3 இன் 1 HCC

 

படம் 3: 3இன்1 HDIL

படம் 4: 3இன்1 KRBL

 

படம் 5: 3இன்1 M&M

 

படம் 6: 3இன்1 SATYAMCOMP

 

படம் 7: 3 இன் 1 TITAN

20110715: 3 இன் 1 பேட்டர்னில் உள்ள பங்குகளின் அட்டவணை


சென்ற பதிவில் கொடுத்துள்ள 3 இன் 1 வரைபட அமைப்பு புரிந்ததா? அதைப்பற்றி நீங்கள் எதுவும் கேள்வியே கேட்கவில்லையே. ஏதேனும் சந்தேகமிருந்தால் தயங்காமல் கேளுங்கள். கமெண்ட் பகுதியில் ஒரு வரி எழுதுங்கள்.

இந்த அட்டவணையைப் பாருங்கள். ஜூலை 15 அன்றைய நாள் முடிவில், NSE Cash மார்க்கெட்டில் 3-இன்-1 அமைப்பில், ஒரு மில்லியன்-ஐ விட அதிக வால்யூமில் வர்த்தகம் நடந்த பங்குகள் இவை. இதில் “Buy Above” என்று “லாங்” டிரேடுக்கும், “Sell Below” என்று “ஷார்ட்” டிரேடுக்கும் விலை விபரம் கொடுத்துள்ளேன்.

Ticker 3-in-1 Close  Buy Above Sell Below Volume
HDIL 161.45 168.8 158.5 4284340
GTL 89.05 91.75 88.05 2311802
SATYAMCOMP 86.2 88.25 85.25 1915016
CROMPGREAV 242.9 249.05 239.15 1741053
HCC 33.45 34.6 32.5 1644129
TITAN 226.8 230.2 220.15 1319742
KRBL 30.6 33.85 30 1061016
M&M 721.15 724.8 700.1 1048866

இது WRB-யின் 3-இன்-1 ஹை (Buy above) மற்றும் 3-இன்-1 லோ (Sell below) விபரங்கள். இவை எந்தத் திசையில் உடை(உதை)படுகின்றனவோ, அந்தத் திசையில் டிரேட் அமைய வேண்டும். ஸ்டாப் லாஸ் அதற்கு எதிர்த் திசையில் உள்ள விலையாக இருக்க வேண்டும்.

அதாவது, “Buy above” விலை மேலே உடைபட்டு, 3 இன் 1 ஹை-யை விட மேலே முடிவடையும் நேரத்தில் “லாங்” போகவேண்டும். இந்த “லாங்” டிரேடிற்கு ஸ்டாப்லாஸ்-ஆக 3 இன் 1 லோ விலை (Sell below) இருக்கும்.

“Sell below” (3-இன்-1 லோ) விலை உடைபட்டு, விலை அதற்குக் கீழே முடிவடைந்தால், “ஷார்ட்” டிரேட் எடுக்க வேண்டும். இந்த “ஷார்ட்” டிரேடிற்கு ஸ்டாப்லாஸ்-ஆக 3 இன் 1 ஹை விலை (Buy above) இருக்கும்.

ஒரு சில வரைபடங்கள்:

படம்1: 20110715 3இன்1 CROMPGREAV

படம் 2: 20110715 3-இன்-1 HDIL

இந்த அமைப்பு புரியும் வரை டிரேட் எதுவும் எடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக பேப்பர் டிரேட் செய்து நன்கு பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். விலையின் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, இந்த அமைப்பினைப் பற்றி  நன்கு புரிந்து கொண்ட பின்னரே, டிரேட் செய்யவும். உங்களுக்கு வசதியாக ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்துக்கும்) அதிகமாக வர்த்தகம் (வால்யூம்) நடந்த பங்குகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.

படம் 3: 20110715 KRBL

எச்சரிக்கை: முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். வெற்றியில் முடியும் பேட்டர்ன்களும் உண்டு. முந்தைய எடுத்துக்காட்டில் உள்ளது போல “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!” என்று தோல்வியிலும் முடிவடையலாம். கவனம் அவசியம்! ஏதேனும் புரியவில்லை என்றால், தயங்காமல் கேட்கவும்!

20110715 3-இன்-1 M&M

– பாபு கோதண்டராமன்

20110715 3-இன்-1 SATAYAMCOMP


ஒன்றில் மூன்று வரைபடப் புதிருக்கான விளக்கம்!


புதிர் 1

“என்னது? புதிரா? எப்ப சார் போட்டீங்க?”ன்னு கேட்கிறீர்களா?

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், இந்தப் படத்தைப் போட்டு விட்டு ஏதாவது புரிகிறதாவென்று கேட்டிருந்தேன். அதற்குப் பிறகு,  OHLC Bar Charts – குச்சி வரைபட அறிமுகம் என்ற பதிவையும் எழுதியிருந்தேன். அதன் மூலம் இன்ஸைட் பார் – உள்ளடங்கிய பார், அவுட்சைட் பார், வைட் ரேஞ்ச் பார் (WRB), நேரோ ரேஞ்ச் பார் (NRB) முதலானவை கொஞ்சத்திற்கு கொஞ்சம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.

இதை மனதில் வைத்துக்கொண்டு படத்தை மறுபடியும் ஒருமுறை பாருங்கள். வைட் ரேஞ்ச் பார் (WRB) எது, இன்ஸைட் பார் எது, அவுட்சைட் பார் எது என்று உங்களால் கண்டு கொள்ள முடிகிறதா?

ஆஹா! “முதல் பார் நல்லா ஒரு WRB பேட்டர்ன்-ல இருந்து, அடுத்த மூன்று பார்களும் முதல் பார்-இன் “ஹை” மற்றும் “லோ”விற்குள்ளேயே உள்ளடங்கியுள்ளன. அந்த மூன்று பார்களுமே முதல் பாருக்கு ‘இன்ஸைட் பார்கள்’தான்” என்கிறீர்களா? சபாஷ்! சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். இதுதாங்க 3-in-1 பேட்டர்ன்; ஒன்றுக்குள் மூன்று.

புதிருக்கான விளக்கம்: 3-இன்-1 பேட்டர்ன்

இந்தப் படத்திலே, பாகங்களைக் குறித்துள்ளேன்.

3இன்1 ஹை: பார் 4-இன் ஹை-யை விட அடுத்த மூன்று பார்களின் ஹை கம்மியாக இருக்கும் அதை நேரத்தில்,

3இன்1 லோ: பார் 4-இன் லோ-வை விட அடுத்த மூன்று பார்களின் லோ அதிகமாக உள்ளது.

இதையே, பார்கள் 1,2 & 3 ஆகியவை பார்-4-ற்கு இன்ஸைட் பார்களாக அமைந்துள்ளன. இதனால், இந்த பேட்டர்ன் 3-இன்-1 (ஒன்றுக்குள் மூன்று) என்று அழைக்கப்படுகிறது.

சரி! இதைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டோம். அதனால, பைசா பிரயோஜனமுண்டா என்று கேட்கிறீர்களா? அதனாலதான் இதை எப்படி டிரேட் செய்யறது; ஸ்டாப் லாஸ் எங்கே வைக்கிறதுன்னு பார்ப்போம்.

ஐந்தாவதாக (பார் 1-ஐ  அடுத்து) வரும் பார் 3-இன்-1 ஹை-யை உடைத்து மேலே சென்று அதற்கு மேலேயே முடிவடைந்தால் (Close), அதுதான் டிரேட் பார்; அங்கே “லாங்” போகலாம். ஸ்டாப் லாஸ்-ஆக 3-இன்-1 லோ-வை வைத்துக் கொள்ள வேண்டும்.

சப்போஸ், ஐந்தாவதாக (பார் 1-ஐ  அடுத்து) வரும் பார் 3-இன்-1 லோ-வை உடைத்துக் கீழே சென்று அதற்கு கீழேயே முடிவடைந்தால் (Close), அதுதான் டிரேட் பார்; அங்கே “ஷார்ட்” போகலாம். ஸ்டாப் லாஸ்-ஆக 3-இன்-1 ஹை-யை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு டிரேட் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். இது மிகச் சமீபத்திய நிகழ்வுதான். 20110624 நிஃப்டி வரைபடத்தை போட்டுள்ளேன். விளக்கங்கள் உள்ளேயே!

வெற்றியடைந்த 3 இன் 1 அமைப்பு: 20110624 நிஃப்டி

இதே நிஃப்டி-யில், இந்த வெற்றிக்குப் பிறகு உருவான இன்னொரு 3 இன் 1 அமைப்பு, ஸ்டாப் லாஸ்-ஐ அடித்துத் தோல்வியடையும் அமைப்பாக மாறியது.

“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!” என்ற டயலாக்கை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டாப் லாஸ் இல்லாம டிரேட் செய்யக்கூடாது. ஸ்டாப் லாஸ் அடிச்சாச்சின்னா டிரேடிலிருந்து வெளியே வந்துடனும். ஸ்டாப் லாஸ் கிட்ட “போங்கு” ஆட்டமெல்லாம் ஆடக்கூடாது.

3இன்1 தோல்வியடைந்த அமைப்பு. டிசிப்ளின் ரொம்ப அவசியம்! இதுக்குத்தான் சொல்றது ஸ்டாப் லாஸ் இருக்கணும்னு!


– பாபு கோதண்டராமன்