பயிற்சி வகுப்பின் தாக்கம்!


ஹலோ!

உங்களுக்கெல்லாம் தெரியும் கடந்த ஞாயிறன்று (4/8/2013) என்னுடைய பயிற்சி வகுப்பு  நடந்து முடிந்ததென்று. ஒரு சில புதிய முதலீட்டாளர்களுக்கு இது கொஞ்சம் ஓவர்டோஸ் போலத்தானிருந்ததாம்.

ஒரு சில லாங் டெர்ம் முதலீட்டாளர்கள் 34EMA -வை வைத்து குறுகிய கால ஸ்விங்க் டிரேட் பொசிஷன்கள்  எடுக்கலாமேவென்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

ஒரு சில டேடிரேடர்கள் 3×5 EMA- எக்ஸெல் முறையை வைத்து இன்டெக்ஸ்-இல் பொசிஷன் டிரேட் எடுக்கலாமேவென்றும் நினைக்கிறார்களாம்.

எனக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நமது காளையும் கரடியும் வாசகர்களில் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு ஊக்கம் கொடுத்ததால்தான் (ஊக்கம் மட்டும்தாங்க! ஊக்க மருந்து இல்லீங்க!) இது வெற்றியடைய காரணமாக இருந்தது என்று சொல்லலாம்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

நண்பர் ஸ்ரீநிவாசன் DM அவர்களின் பாங்க் நிஃப்டி 34இ‌எம்‌ஏ ரிஜக்ஷன் ஷார்ட். சபாஷ்!

SriniDM பாங்க் நிஃப்டி 20130806 34EMA ரிஜக்ஷன் குறிப்புகள்

SriniDM பாங்க் நிஃப்டி 20130806 34EMA ரிஜக்ஷன் குறிப்புகள்

காளையும் கரடியும் பங்குச்சந்தைப் பயிற்சி வகுப்பு (34EMA ரிஜக்ஷன்)


ஹலோ!

ஒரு டே டிரேடர் என்றால், நாள் பூராவும் டிரேடிங் செய்துகொண்டேதான் இருக்கவேண்டுமா? நீண்ட நாளைய முதலீட்டாளர் என்றால் எப்போதாவது ஒரு சில தடவைகள்தான் பங்குகள் வாங்க வேண்டுமா?

இவர்கள் யாரும் பொசிஷன் டிரேடிங் செய்யலாமா?

கண்டிப்பாகச் செய்யலாம். கீழேயிருக்கும் SESAGOA Fut சார்ட்டினைப் பாருங்கள். இரண்டு SELL மற்றும் ஒரு BUY கண்டிஷன்கள் உருவாகி, இவை மூன்றிலும் பிராஃபிட்டும் (நல்லபடியாக) எடுக்கப்பட்டுள்ளது. இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டாவது SELL & பிராஃபிட் எடுத்தபிறகு, அடுத்த BUY வரும் வரை நாம் எதுவும் டிரேட் எடுக்கவில்லை. ஏனெனில், நமது சிஸ்டம் நம்மை எந்த டிரேடும் எடுக்கச் சொல்லவில்லை.

படம் 1: SESAGOA I-வில் SELL மற்றும் BUY வாய்ப்புகளும், சும்மா "கம்முன்னு" இருக்க வேண்டிய காலமும்

படம் 1: SESAGOA I-வில் SELL மற்றும் BUY வாய்ப்புகளும், சும்மா “கம்முன்னு” இருக்க வேண்டிய காலமும்

இதுபோல சிஸ்டத்தின் விதிமுறைகளின் படி டிரேட் எடுக்குமாறு விதிகள் கூறும்போது டிரேட் எடுப்பதும், மற்ற சமயங்களில் டிரேட் செய்யாமலிருப்பதும் ஒரு நல்ல டிரேடருக்குறிய சிறப்பம்சம்தானே!

அடுத்த படமான TATASTEEL-I-இல் பார்த்தால் அனைத்தும் SELL என்ட்ரிகள்தான்.  அதுவும் நான்காவது SELL-இன்போது ஸ்டாப்லாஸ் அடித்து, மறுபடியும் ஒரு டிரேட் நல்லபடியாக அமைந்துள்ளதைப் பார்க்கலாம்.

படம் 2: TATASTEEL-I-உம் 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும்

படம் 2: TATASTEEL-I-உம் 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும்

20130603 TATASTEEL RCOM TATAHONEY அலசல்கள்


TATAHONEY

இது 2005 மார்ச் வரையிலும் டிரேட் ஆகிக்கொண்டிருந்த ஒரு ஸ்டாக்; இப்போது டிரேட் ஆகவில்லை. இருந்தாலும் அதன் சார்ட்டை நான் இங்கே உதாரணமாகக் கொடுக்கக் காரணம் என்னவாக இருக்குமென்று யோசிக்கிறீர்களா? நான் கொஞ்ச நாட்களுக்கு முன் Speculator அவர்களின் 34EMA ரிஜக்ஷன் (Rejection) பற்றி ஒரு டிரேடிங் ஸ்ட்ராடஜியின் லிங்க் ஒன்றை கொடுத்திருந்தேன் அல்லவா? அதில் குறிப்பிட்டுள்ளபடி bullish rejection எடுத்துக்காட்டுக்காக ரொம்பப் பொருத்தமாக இருக்குமென்று தோன்றியதால்தான் இந்த பழைய சார்ட்டை இங்கே போடுகிறேன். என்ஜாய்!

BK 20130603 TATAHONEY 34EMA bul rej candidate

 

RCOM

இந்த வார வரைபடத்தில் இருப்பது ஒரு ஏறுமுகமான கொடி (bullish flag) அமைப்பாகும். மார்ச் கடைசி வாரத்திலிருந்து மே இரண்டாம் வாரம் வரை உயர்ந்து வந்த இந்தப்பங்கின் விலை ஒரு கொடிக்கம்பம் போல இருக்கிறது. பிறகு, ஒரு 20 புள்ளிகள் அளவிலேயே டிரேட் ஆகிக் கொண்டிருப்பது ஒரு கொடியைப் போல இருக்கிறது. கொடியைச் சுட்டிக்காட்ட நான் இரண்டு சிறிய இணைக்கோடுகளை வரைந்துள்ளேன். அதன் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு மேலே சென்றால், இப்போதைய கொடிக்கம்பம் அளவிற்கு (அதாவது சுமார் 70 புள்ளிகள் வரை) மேலும் உயர்ந்து, மேலே செல்லும் வாய்ப்புள்ள ஒரு புல்லிஷ் அமைப்பு. அதனால், 112-114 என்ற மேலேயிருக்கும் தடை நிலை, மிகுந்த வால்யூமுடன் உடைபட்டால் “லாங்” செல்லலாம். ஸ்டாப்லாஸ் என்பது கொடியின் கீழே வரைந்துள்ள கோடாகும். உடனடித் தடைநிலையாக 200MA @ 118 மற்றும் 200EMA @ 145 லெவல்கள் இருக்கின்றன.

BK 20130603 RCOM weekly flag

TATASTEEL

அடி மேல் அடிவாங்கிக் கொண்டிருக்கும் மெட்டல் செக்டாரில் இருக்கும் ஒரு பங்கிது. சார்ட்டில் RSI-யில் a, b, c என்று மூன்று லோக்களைக் குறித்துள்ளேன். C என்பது சமீபத்தைய RSI ஹையர் லோ. a-தான் RSI-யின் லோயர் லோ. ஆனால் விலையைப் பார்த்தால், a-விற்கு நேராக இருக்கும் லோவை விட c-க்கு நேராக இருக்கும் சமீபத்திய லோ மேலும் கீழேயிறங்கி, குறைவாக உள்ளது. அதாவது விலை குறைந்துள்ளது; ஆனால், RSI வலிமையாக இருந்து, மேலேயே உள்ளது. இது வலிமையைக் குறிக்கும் classic டைவர்ஜென்ஸ்..ரிஸ்க் எடுக்கலாமென்றிருப்பவர்கள் இந்த விலையில் லாங் பொசிஷன் எடுத்து, ஸ்டாப்லாஸ் ஆக சமீபத்திய லோ-வான 290-க்குக் கீழே வைத்துக்கொள்ளலாம்.

BK 20130603 TATASTEEL classic div

//