MSE-யில் எனது “கேண்டில்ஸ்டிக் சார்ட்” பயிற்சி வகுப்பு 12 நவம்பர், 2011


ஹலோ,

ஆடிக் காற்றிலே பறந்து, ஐப்பசி மழையிலே நனைந்து அல்லாடிக் கொண்டிருக்கும் (:-)) நான், ரொம்ப நாட்களாக உங்களைச் சந்திக்க முடியாமல் போனதற்கு மிக்க வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேறொன்றுமில்லை; மேலே குறிப்பிடப்படப் பட்டுள்ள பயிற்சி வகுப்புக்கான தொகுப்புகளை (பவர் பாயிண்ட் மற்றும் GIF ஃபார்மட் அனிமேஷன்) உருவாக்குவதற்கான முயற்சியால்தான் இந்தப் பக்கம் வர முடியாமல் போனது.

சென்ற சனிக்கிழமையன்று மிகவும் நல்ல முறையில் இந்த வகுப்பினை நடத்தி முடித்துள்ளேன்.

இது கட்டணப் பயிற்சி வகுப்பாதலால், என்னால் அந்த ஃபைல்கள் அனைத்தையும் இங்கே கொடுக்க முடியாத நிலையிலிருக்கிறேன். ஒரு சில முக்கியமான ஸ்லைட்கள்:

படம் 1: இந்த டௌண்ட்ரெண்டில் எந்த பேட்டர்ன் (ஹேமர்-ஆ? இன்வெர்ட்டெட் ஹேமர்-ஆ?) அதிகமான புல்லிஷ் ஆதிக்கத்தில் உள்ளது?

படம் 2: இந்த அப்ட்ரெண்டில் உருவாகியிருக்கும் ஷூட்டிங் ஸ்டார் அல்லது hanging man பேட்டர்னில் எது அதிகமான கரடியின் ஆதிக்கத்தில் உள்ளது? மறுபடியும் இது கேண்டில்ஸ்டிக் சைக்காலஜி-தாங்க!

படம் 3: கேண்டில்ஸ்டிக் சார்ட் அனாலிசிஸ் - மூன்று முக்கிய அம்சங்கள்

படம் 4: 5 டெய்லி கேண்டில்கள் சேர்ந்து ஒரு வீக்லி கேண்டில் உருவாகிறது.

படம் 5: ஒரு பேட்டர்ன் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் தேவைப்படும் மூன்று முக்கிய அம்சங்கள்!

படம் 6: பேயரிஷ் (bearish reversal) ரிவர்ஸல் பேட்டர்ன் அமைய வேண்டிய விதம்

படம் 7: Bullish reversal - புல்லிஷ் ரிவர்ஸல் பேட்டர்ன் அமைந்து, டவுன்ட்ரெண்ட் முடிந்து ஒரு பக்கவாட்டு மார்க்கெட்டும் அமையலாம். அல்லது மேலேயும் செல்லலாம். ஆகக்கூடி டவுன்ட்ரெண்ட் நிறுத்தப்படுகிறதென்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதெல்லாம் சப்ஜெக்ட் மேட்டருங்க!

 

கீழேயிருக்கும் இரண்டு படங்களும் GIF அனிமேஷன் ஃபைல்கள். அதனால, இந்தப் படங்களின் மேலே “கிளிக்” செய்யுங்க! உங்களோட இன்டெர்நெட் பிரவுசர் (ஃபயர்ஃபாக்ஸ் அல்லது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் முதலானவை) தானாகவே இந்த அனிமேஷன் வீடியோ-வை play செய்யும். என்ஜாய்! ஜாலியா ஒரு கமெண்ட் போட்டு வையுங்க!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

FORTIS GIF file - You may download and "open with Quick time"

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் கட்டணப் பயிற்சி வகுப்பு 12 நவம்பர் 2011


MSE Institute of Capital Markets

of

Madras Stock Exchange Limited

 is conducting one-day programme  

on

An introduction to Candlestick charts

by

Mr. Babu Kothandaraman

Investment Consultant

Date:  Saturday, the 12th November, 2011

Time:  10.00 a.m. to 04.00 p.m.

Venue:  Exchange Building, IV Floor, 30, Second Line Beach, Chennai-600001

Registration Fee:  Rs.827/- (inclusive of service tax)

Topics to be covered and the Registration Form are attached.  Participants may register by sending the registration form along with registration fee by means of cheque / pay order / demand draft drawn in favour of “Madras Stock Exchange Limited”, payable at Chennai.

Request confirmation of Participation: on or before 4th November 2011

Contact Details: P. Sampathkumar, Phone: 25228951/52/53

email: mse.investoredu@gmail.com

An introduction to Candlestick charts – 1 day course

1. What is Technical Analysis? (20 min)

 • Introduction to Dow theory
 • Trends, trend lines, Support & Resistance – A brief look

2. Different approaches to Technical Analysis (5 min)

Tools like Candlestick charts, P&F charts, Renko charts, Kagi charts, chart patterns, Elliott Wave, Gann theory, etc

3. What are candlestick charts? (1-1/2 hrs)

 • How the price action is seen as candlesticks; wicks.
 1. Bullish & Bearish closes with colour differences
 • Comparing the candlesticks and bar charts
 • Psychology behind the candlestick formations.
 • Candlestick formations (splits & additions like a daily candle broken into hourly or 15 min and vice versa)
 • Candlestick Pattern stages (where will be they more effective – from overall perspective)

4. Different types of candlestick formations (1-1/2 hrs)

 • Doji
 • Dragonfly Doji
 • Gravestone Doji
 • Hammer
 • Hanging man
 • Inverted Hammer
 • Shooting Star
 • Dark cloud cover
 • Piercing Pattern
 • Bullish Engulfing
 • Bearish Engulfing
 • Spinning top
 • Morning Star
 • Evening Star
 • Morning Doji Star
 • Evening Doji Star

5. Case study of various EOD charts:

There will be a live session of analyzing various charts with reference to the topics covered all along the duration of the course.

குறிப்பு: இங்கே இருக்கும் செய்திகள் யாவும் எனக்கு வந்த அழைப்பின் தமிழாக்கம்தான். ஏதேனும் பிழைகளிருந்தால் மன்னிக்கவும். இனி விஷயத்திற்குச் செல்வோம்.

முதலீட்டாளர்களே!

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-இன் MSE இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேபிடல் மார்க்கெட்ஸ் (MSE ICM) “கேண்டில்ஸ்டிக் சார்ட் – ஒரு அறிமுகம்” என்ற ஒரு நாள் கட்டணப் பயிற்சிக் கருத்தரங்கத்தை நடத்தவிருக்கிறது.

நாள்: 12 நவம்பர், 2011

இடம்: மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம், எண்-30, செகண்ட் லைன் பீச், சென்னை-600 001. (பீச் இரயில் நிலையம் & பர்மா பஜார் அருகில், தலைமைத் தபால் நிலையம் பின்புறம்)

நடத்துபவர்: பாபு கோதண்டராமன் (ஓ! அடியேன்தான் J)

கட்டணம்: ரூ. 827/- (சேவை வரிகள் உள்ளடங்கியது) ஒருவருக்கு. மதிய உணவும், தேநீரும் உள்ளடக்கம்.

பங்கு பெற விரும்புபவர்கள், செக்/ பே ஆர்டர்/ டிமாண்ட் டிராஃப்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை, Madras Stock Exchange Limited” என்ற பெயருக்கு, சென்னைக் கிளையில் மாற்றம் செய்யத் தக்கவாறு எடுத்து, இணைத்துள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கொடுத்துள்ள விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்.

Madras Stock Exchange Limited

No. 30, Second Line Beach,

Chennai – 600 001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 4 நவம்பர், 2011

மேலும் விபரங்ககளுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்: திரு. P. சம்பத் குமார், தொ.பே எண்கள்: 044-25228951 / 52 / 53; மின்னஞ்சல்: investoredu@mseindia.in