#TC2013 டிரேடர்ஸ் கார்னிவல், Pune


ஹலோ!

நீங்கள் ஓரளவு டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்தவரா? பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் அல்லது ஸ்விங்க் (swing) டிரேடிங் செய்து கொண்டிருக்கின்றீர்களா? உங்களது டிரேட்களை மேலும் எப்படி மேம்படுத்துவதென்று எண்ணமிருக்கிறதா? அல்லது எப்படி வர்த்தகம் செய்வது என்றே தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கின்றீர்களா? புதிய ஸ்ட்ராடஜி மற்றும் எண்ணங்களைக் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா?

இதில் ஏதேனும் ஒரு கேள்விக்காவது “ஆம்” என்று நீங்கள் பதில் சொல்லியிருந்தால், உங்களுடைய காலண்டரில் ஆகஸ்ட் மாதம் 15, 16 & 17 தேதிகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். “எட்றா வண்டிய! விட்ரா புனேவுக்கு (Pune)” என்று உங்கள் பயண அட்டவனையைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

ஆமாம்! #TC2013 புனே நகரத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்/ரிசார்ட்டில் நடைபெற இருக்கிறது. #TC2013=டிரேடர்ஸ் கார்னிவல் (Traders Carnival) 2013.

நாம் நமது வாழ்க்கையிலே, பல்வேறு வகையான வகுப்புகளில் பங்கேற்றிருப்போம். அவையனைத்தும் ஒரு இரண்டு மணி நேரமோ, அல்லது அரை நாளோ, அல்லது காலை சென்று மாலையில் வீடு திரும்பி வருவதாகவே அமைந்திருக்கும்.

இந்த டிரேடர்ஸ் கார்னிவல் இதிலிருந்தெல்லாம் மாறுபட்டது. எப்படியெனில், இது residential program (ரெஸிடென்ஷியல் ப்ரோக்ராம்) எனப்பட்டு, இந்த மூன்று நாட்களும் பயிற்சி நடைபெறும் இடத்திலேயே தங்கி, பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி, நமக்கொரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் வகையிலே அமைக்கப் பெற்றிருக்கின்றது. பயிற்சியாளர்களைப் பற்றிச் சொல்வதென்றால், அவர்களெல்லாம் நம்மைப் போன்ற டிரேடர்கள்தான்; முதலீட்டாளர்கள்தான். அவர்களின் எண்ணங்களை, வெற்றி பெற்ற ஸ்ட்ராடஜிக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த #TC2013 இரண்டாவது முறையாக, அகில இந்திய அளவிலே நடைபெறும் நிகழ்ச்சியாகும். இதற்கு முன், முதல் முறையாக #TC2012 பெங்களூருவில் கடந்த 2012 அக்டோபரில் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. அதைப் பற்றிய செய்திகளுக்கு இங்கே கிளிக்கிடவும். சென்ற வருடத்தைய #TC2012-இல் அறிமுகப் படுத்தப்பட்ட 3x5EMA க்ராஸ்ஓவர் சிஸ்டம் மற்றும் 34EMA ரிஜக்ஷன் டிரேடிங் சிஸ்டம் முதலியன, கடந்த ஒரு வருடமாக நல்ல இலாபத்தை அளித்து வந்ததை பல்வேறு டிரேடர்களும் உணர்ந்துள்ளனர்.

#TC2013 நிகழ்ச்சி நிரல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இப்போது தெரிவதெல்லாம் ஆகஸ்ட் 15,16 தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்; 17-ஆந்தேதியன்று முன்பகல் நேரத்தில் கலந்துரையாடலுடன் முடிவடைவதாகத் தெரிகிறது.

பயிற்சிக் கட்டணம் எவ்வளவென்றும் தெரியவில்லை. ஆனால், கட்டணத்தில் இந்த மூன்று நாட்களுக்கான தங்குமிடமும் (5 நட்சத்திர ஹோட்டல்/ரிசார்ட்), உணவு மற்றும் சிற்றுண்டிகளும் அடக்கமாகுமென்று தெரிகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் தகவல்கள் கிடைக்கப் பெறும்போது மீண்டும் இதைப் பற்றி எழுதுகின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் DJ-வை நீங்கள்  J Dharmaraj<dharmarajj@gmail.com> அல்லது @ra1nb0w என்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்