ரீல் 4: EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்


ஹலோ!

டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…… என்ற தலைப்பினை ஈஸி TA என்று மாற்றி விட்டேன். உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை!

இன்றைய ஸ்டாக் LT

முதலில் மாத வரைபடத்தைப் பார்த்தால், ஒரு ஹெட் & ஷோல்டர் (HnS) தெரிகிறது. அதன் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு, மறுபடியும் விலை மேலேயேறி வந்து அந்த நெக்லைன் சப்போர்ட்டில் ரீ-டெஸ்ட் நடத்தியுள்ளது. முந்தைய நெக்லைன் சப்போர்ட், இப்போது ரெஸிஸ்டன்ஸாக மாறியுள்ளதால், விலை மறுபடியும் கீழேயிறங்குகிறது.

இதிலே கவனிக்க வேண்டியவை: 2009 ஏப்ரல் – 2010 நவம்பர் வரை ஒரு அப்ட்ரெண்ட்; மே 2009 – செப்டம்பர் 2011 வரை ஒரு HnS அமைப்பு உருவாகியுள்ளது. 2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் 1020 என்ற லெவலில் இந்த HnS அமைப்பின் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு விலை கீழேயிறங்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு இறங்கிய இறக்கத்தின் போது, அதிகமாகும் வால்யூம் அளவும் இந்த அமைப்பின் வலிமையைக் காட்டுகிறது.

சரி! 1020 என்ற லெவலில் நெக்லைன் உடைபட்டுள்ளதென்பதனை நோட் செஞ்சிக்கோங்க! ஓகே-வா? இப்போது எவ்ளோ தூரம் (எத்தனை புள்ளிகள் வரை) கீழேயிறங்கும் என்பதனைக் கணக்கிடலாம்!

இந்த அமைப்பின் தலைப் பகுதியின் ஹை 1475. அதற்கு நேர்கீழேயிருக்கும் நெக்லைனின் மதிப்பு 985. எனவே, இந்த அமைப்பின் நெக்லைன் உடைபட்டால், 1475 – 985 = 490 புள்ளிகள் வரை கீழேயிறங்க (உடைபட்ட இடத்திலிருந்து) வாய்ப்புள்ள அமைப்பிது. (அதாவது தலைப்பகுதியின் ஹை – அதற்கு நேர் கீழுள்ள நெக்லைனின் அளவு)

சோ, டார்கெட் = 1020 – 490 = 530 என்ற அளவு வரை LT ஸ்டாக் இறங்க வாய்ப்புள்ளது.

ரிஸ்க் = (ரைட் ஷோல்டரின் ஹை 1245) – 1020 = 225 புள்ளிகள்.

RR ரேஷியோ (ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்று சொல்வார்கள். அதாவது நாமெடுக்கும் ரிஸ்க்குக்குத் தகுந்த ஆதாயம் கிடைக்கிறதாவென்று பார்க்கும் ஒரு கணக்கு) = 225 : 490 => 1 : 2.17

அதாவது நாமெடுக்கும் ஒவ்வொரு ரூபாய் ரிஸ்க்குக்கும் 2.17 ரூபாய் ஆதாயமிருக்கும் டிரேட் இது.

படம் 1: LT - மாத வரைபடத்தில் தெரியும் ஹெட் & ஷோல்டரும், ரீ-டெஸ்டும்

படம் 1: LT – மாத வரைபடத்தில் தெரியும் ஹெட் & ஷோல்டரும், ரீ-டெஸ்டும்

ஓகே! 530 வரை இறங்குமென்றால், ஒரே நேர்க்கோட்டில், ஒரு சில மாதங்களில் இறங்கினாலும் இறங்கலாம். இல்லையென்றால், நமது பொறுமையை சோதித்து மேலும், கீழும் சென்றும் இறங்கலாம். அதுவும் இல்லையென்றால், இறங்காமல் மேலேயும் செல்லலாம்.

18 மாதங்களாக உருவான இந்த அமைப்பு, செப்டம்பர் 2011-இல் நெக்லைன் சப்போர்ட்டை உடைத்துக்கொண்டு கீழே இறங்கிய விலை, 650 வரை கீழே வந்து மறுபடியும் மேலேயேறி, 2012 டிசம்பர்-2013 ஜனவரியில் நெக்லைன் சப்போர்ட் கோட்டினை ரீ-டெஸ்ட் செய்துள்ளது. அந்த (முந்தைய சப்போர்ட்) லைன் தற்போது ரெஸிஸ்டன்ஸாக மாறி, மறுபடியும் விலையினைக் கீழே தள்ளுகிறது. (இதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸின் ப்யூடி!)

இதைத்தான் டெக்னிக்கல் அனாலிசிஸில் சொல்வார்கள், “மார்க்கெட் எப்போதுமிருக்கும்; சான்ஸ்கள் வந்து கொண்டேயிருக்கும். ஒன்றைத் தவறவிட்டால், அதனைத் துரத்தக்கூடாது; பொறுமையுடன் அடுத்த வாய்ப்புக்குக் காத்திருக்கணும்” என்று! செப்டம்பர் 2011-இல் தவற விட்டிருந்தால், ஜனவரி 2013-இல் ஷார்ட் பொசிஷன் எடுக்க அருமையான வாய்ப்பு. (ஸ்டாப்லாஸ் எது தெரியுமா? ரைட் ஷோல்டரின் ஹை-யான 1245-தான்)

சரி! அடுத்ததாக, இந்த ரீ-டெஸ்ட் நடக்குமிடத்தை வார வரைபடத்தில் கொஞ்சம் zoom போட்டுப் பார்க்கலாம். மாத வரைபடத்தில் பார்த்த ரீ-டெஸ்ட் நடந்த அதே இடத்தில் ஒரு சிறிய ஹெட் & ஷோல்டர் தெரிவதையும், அதன் நெக்லைன்(நீல நிறக் கோடு) 905 லெவலில் உடைபட்டு, விலை கீழேயிறங்கி, தற்போது மீண்டும் மேலே ஏறி நெக்லைன் ரீ-டெஸ்ட் நடைபெறுவதையும் பார்க்கலாம்  இது ரெஸிஸ்டன்ஸாக மாற வாய்ப்புள்ளதால், இங்கே ஷார்ட் சென்று (905-915 லெவலில்தான் போகவேண்டும். தற்போதைய 830 லெவல்களில் ஷார்ட் போகக்கூடாது. ஏன் தெரியுமா? ரிஸ்க் ரொம்ப அதிகம்)

படம் 2: LT வார வரைபடத்தில் இன்னுமொரு குட்டி HnS! அதுவும் மாத வரைபடத்தில் ரீ-டெஸ்ட் நடந்த இடத்திலேயே!

படம் 2: LT வார வரைபடத்தில் இன்னுமொரு குட்டி HnS! அதுவும் மாத வரைபடத்தில் ரீ-டெஸ்ட் நடந்த இடத்திலேயே!

ஏனென்றால், ஸ்டாப்லாஸ் 1090 (ரிஸ்க் = 1090 – 905 = 185 புள்ளிகள்)

ரிவார்ட் புள்ளிகள் தலையின் ஹை 1145 – அதற்கு நேர் கீழே இருக்கும் நெக்லைன் லெவல் 885 = 260 புள்ளிகள்.

சோ, இத டார்கெட் = 905 – 260 = 645 வரை கீழே செல்லும் வாய்ப்புள்ள அமைப்பிது.

(குறிப்பு: ரீ-டெஸ்ட் என்றால் என்னவென்று இப்போது புரிகிறதல்லவா? இதன் ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்னவென்றும் நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்களேன்!)

இந்த வார வரைபடத்தின் டார்கெட் முதலில் வருகிறதாவென்று பார்ப்போம். அதன் பிறகுதான், மாத வரைபடத்தில் பார்த்த 530 டார்கெட்டைப் பற்றி யோசிக்கவேண்டும். இங்கே நாம் எழுதிவிட்டதால் மட்டுமே அந்த டார்கெட்கள் எல்லாம் வரவேண்டுமென்ற அவசியமில்லையே! ஏனென்றால்,

மார்க்கெட்தான் மாஸ்டர்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: “என்னங்க சார்? EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்-னு ஹெடிங்க் போட்டுட்டு, 20 மார்க் கொஸ்டீன்னுக்கு ஆன்சர் எழுதி வச்சிருக்கீங்களே!”ன்னு கேக்குறீங்களா? என்ஜாய்!

20111014 L&T ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்னில் உள்ளது.


கீழே இருப்பது ஒரு மாத வரைபடம். இதிலே ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் உருவாகியிருப்பதைப் பாருங்கள். இது உருவாக ஒரு 28 கேண்டில்கள் (அதாவது மாதங்கள்) ஆகியுள்ளன. எனவே இங்கே நான் குறிப்பிட்டுள்ள டார்கெட் லெவல் அடைய நிறைய காலம் எடுத்துக்கொள்ளும் என்று புரிந்து கொள்ள வேண்டும். மேலும், ஸ்டாப் லாஸ் லெவலும் ரொம்ப ஜாஸ்திதாங்க.

படம்: L&T மாத வரைபடம். ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர்

இந்த மாதிரி பேட்டர்ன்லதான் HINDALCO, INFOSYS (சும்மா “கிளிக்” செய்து படியுங்க) சார்ட்டுக்களை நான் போட்டிருந்தேன். அவையிரண்டுமே HnS பேட்டர்னுக்குண்டான டார்கெட்டை அடைந்தன. எனவே, L&T-யை இந்த பேட்டர்ன் ஒரு குலுக்கு குலுக்கி, கீழே இறக்குதான்னு பார்க்கலாம்.

டார்கெட் சோன் : ஹெட் ஹை – நெக்லைன் : 2200-1500 = 700 புள்ளிகள்
டார்கெட் : நெக்லைன் 1500- டார்கெட் சோன் 700 = 800

அதாவது, நெக்லைன் 1500 லெவல்களில் கீழாக உடைபட்டுள்ளது. இந்த லெவலிளிருந்து, 700 புள்ளிகள் இறங்க வாய்ப்புள்ளதால், L&T 800 என்ற லெவலுக்கு வரும் என்று இந்த ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் சொல்கிறது.

இதற்கு ஸ்டாப் லாஸ்-ஆக ரைட் ஷோல்டரின் ஹை-யான 1875 லெவலை வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தியரிக்கு, என்னென்ன குறிப்புகள் வலிமை சேர்க்கின்றனவென்று பார்க்கலாம்.

1. 2009 லோ-விலிருந்து அமைந்துள்ள ஒரு அப்ட்ரெண்டின் உச்சத்தில் இந்த பேட்டர்ன் அமைந்துள்ளது.

2. இப்போது அமைந்துள்ள ஹெட்-டின் ஹை, 2007 Oct-Nov ஹை-யின் ரெஸிஸ்டன்ஸ் லெவலில் அமைந்து, கீழே திரும்பியுள்ளது.

இந்த தியரி எதனால் அடிபடுமென்று பார்க்கலாம்.

1. L&T என்ற பெயரே ஒரு வலிமையைக் குறிப்பதாக இருக்கிறது. “இது போயி ஒரு 700 பாயின்ட்டுகள் எறங்கி, 800 லெவலுக்கு வருகிறதாவது?” என்ற மனப்பான்மையில் சுக்குநூறாகிவிடுகிறது.

SL: 1875
And the 1500 NL breakdown levels might be a retest zone of the pattern.

Further more, the High of the Head is formed within the Resistance zone of the previous 2007 Oct-Nov peak.

2007 peak and this HnS also look like a double top pattern. However, this DT may not be a valid one as of now.

On this monthly chart, L&T is forming a 28 candle (aka month long) HnS formation. So, patience is a must to see if the target is achieved or not. (What the heck! Infosys did it; Hindalco did it. Why not L&T?)

Target zone: 2200-1500 = 700 points
Target: 1500-700 = 800
SL: 1875
And the 1500 NL breakdown levels might be a retest zone of the pattern.

Further more, the High of the Head is formed within the Resistance zone of the previous 2007 Oct-Nov peak.

2007 peak and this HnS also look like a double top pattern. However, this DT may not be a valid one as of now.