டைவர்ஜென்ஸ் இருக்குதா? இல்லையா? – ரீல் 2


 

டைவர்ஜென்ஸ் இருக்குதா? இல்லையா? – ரீல் 1-இன் தொடர்ச்சி!

அதுக்குள்ளாற புதன்கிழமை வந்துடுச்சே! ஹையா…. ஜாலி..ஜாலி!

படம் 1

படம் 1

ஹலோ ஃபிரண்ட்ஸ்!

இந்த மிஸ்டரி சார்ட் எந்த ஸ்டாக்குன்னு பாக்கறதுக்கு முன்னாடி, இதை அனலைஸ் செஞ்சிடலாம்.

என்னோட கேள்வி!

இதுல டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு கேட்டிருந்தேன். ஆமாம்! கண்டிப்பா தெரியுது. விலையானது A, B & C ஆகிய இடங்கள்ள ஒரே சம லெவலில் இருக்கும்போது, இ&ஆ-க்கள் (RSI & MACD) லோயர் ஹைக்களை உருவாக்கி ஒரு டௌன்ட்ரெண்டில் செல்கிறது. அதுதான் அம்புக்குறிகளே போட்டுக் காட்டியிருக்கிறேனே!

விலை: ஒரே லெவல் & இ&ஆ-க்கள் ஒரு திசையில் செல்வது = கேட்டகரி (category) 2 வகை டைவர்ஜென்ஸ் இது. [ஆஹா! Category-யைத் தமிழ்ல எழுதும்போது தமிழ் எப்படி விளையாடுது பாருங்களேன்! அம்மாடியோவ்!)

எந்தக் category என்பது முக்கியமல்ல. ஆனால் இ&ஆ-க்கள் கீழ் நோக்கிச் செல்வதால், இது ஒரு நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்-ஆக எடுத்துக் கொள்கிறோம். அதாவது, விலையானது கீழே செல்வதற்கு வாய்ப்புகளிருக்கும் சிக்னலை இந்த சார்ட் தெரியப்படுத்துகிறது.

இது சிக்னல்தான். அப்படியானால் ஷார்ட் பொசிஷன் எடுக்க என்ன கன்ஃபார்மேஷன் வேண்டும்?

இப்போது RSI-யைப் பார்க்கவேண்டும்.

படம் 2: என்ட்ரி மற்றும் ஸ்டாப்லாஸ் விளக்கம்

படம் 2: என்ட்ரி மற்றும் ஸ்டாப்லாஸ் விளக்கம்

இது (e1) [e for entry] என்று குறிப்பிட்டுள்ள சமீபத்திய லோயர் லோ அளவினை உடைத்துக் கீழே செல்லும்போதோ அல்லது RSI-யில் வரைந்துள்ள கருநீலநிற அப்ட்ரெண்ட் லைனையோ (e2) உடைத்துக் கீழே செல்லும்போதோ அப்போது என்ன விலையிருக்கிறதோ, அந்த இடத்தில் ஷார்ட் செல்லலாம்.

ஸ்டாப்லாஸ்: RSI-யில் மேலே வரைந்திருக்கிறேனே, டௌன்ட்ரெண்ட் லைன், அதுதான் ஸ்டாப்லாஸ். RSI அதை உடைத்துக்கொண்டு (s1) மேலே செல்லும்போது ஷார்ட் பொசிஷனிலிருந்து நாம் வெளியே வந்து விட வேண்டும். அல்லது இன்னொரு இடத்துல கூட ஸ்டாப்லாஸ் வச்சிக்கலாம். அது எங்கன்னா, (s2)-ன்னு [s for stoploss] குறிச்சிருக்கிற RSI-யின் சமீபத்திய ஹையர் ஹை. இந்த s1, s2 எல்லாம் உங்க ரிஸ்க் எடுக்குற பர்ஸ் சைஸைப் பொறுத்து நீங்களே தீர்மானிச்சிக்கோணும்! ஆமா… இதான் நாட்டாமையோட தீர்ப்பு…!

ஆனா, இது ரொம்ப ரிஸ்க்கியான டிரேட். ஏன்னா, டார்கெட்டே தெரியாம, ரிஸ்க் மட்டுமே தெரிஞ்சி எடுக்குற ஒரு டிரேடா இருக்குது. அதாவது, ஆழம் தெரியாம காலை நாம் வைக்கிறோம்! ஜாக்கிரதை! (இதெல்லாம் ஒரு இன்ஃபார்மேஷன்தான்)

இதுவரைக்கும் பெரிய டைவெர்ஜென்ஸ் பார்த்து, அடுத்து என்ன நடக்கலாம் என்று ஒரு அலசல் அலசினோம். அடுத்து (நடந்து முடிந்த) சின்னச்சின்ன டைவர்ஜென்ஸ்களை அலசலாம்.

A, B & C-ன்னு குறிப்பிட்டுள்ள இடங்கள்ள ஹைலைட் செஞ்சிருக்கேனே, lbw அப்பீல் செய்யும்போது, டி‌வி-யில ஸ்டம்ப்ஸ் to ஸ்டம்ப்ஸ் பிட்ச் மேப் ஷேடு அடிச்சி காண்பிப்பாங்களே, அந்த மாதிரிதான் 🙂

படம் 3: சின்னச் சின்ன டைவர்ஜென்சுகள்!

படம் 3: சின்னச் சின்ன டைவர்ஜென்சுகள்!

இதுல A-யில பாத்தீங்கன்னா, விலையானது ஒரு ஹை, அதற்கப்புறம் ஒரு ஹையர் ஹையா தெரியுது. அப்படியே நேர்கீழே பாத்தீங்கன்னா, RSI-யில ஹை, அப்புறம் ஒரு லோயர் ஹைன்னு ஒரு சின்னதா நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரியுது.

என்னங்க, நான் சொல்றது ஏதாச்சும் புரியுதான்னேன்?

ஏன்னா, B-யிலும் இதே மாதிரிதான் ஒரு சின்ன நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரியுது. C-யில ஒண்ணுமில்லை.  இதையே, இதற்கடுத்தக் குறைந்த டைம்ஃப்ரேமில் பார்த்தால், இன்னும் நல்லா தெரியுமோ என்னவோ?

சரிங்க! இத்தோட இந்த டைவர்ஜென்ஸ் பத்தின கேள்விக்கு நம்மோட அனாலிசிஸை முடிச்சிக்கலாம்.

(—-xxx—-)

இன்னமும் நான் இதோட பேரைச் சொல்றதுக்கு முடியல. ஏன்னா, கீழேயிருக்கிற படத்துல நான் ஒரு ட்ரையாங்கில் (triangle) {முக்கோணம்} வரைஞ்சிருக்கேன். இந்த R (R for ரெஸிஸ்டென்ஸ்)-ஐ உடைத்து மேலேயும் போகலாம். அல்லது S (S for சப்போர்ட்)-ஐ உடைத்துக் கீழேயும் போகலாம். ஆனால், இதிலே எதற்கான வாய்ப்பு அதிகமென்று கொஞ்சம் யோசிக்கலாம். நான் ஏன் யோசிக்கலாம்னு சொல்றேன்னா, நிஜமாலுமே இப்ப கொஞ்சம் யோசிக்கணுமுங்க!

படம் 4: ஒரு triangle!

படம் 4: ஒரு triangle!

இதுல என்னன்னா, ஒவ்வொரு தடவையும் மேலே போன விலை, ஒரு குறிப்பிட்ட லெவலில் மூணு தடவை முட்டி மோதி கீழே இறங்கி விட்டது. அப்படி ஒவ்வொரு தடவை கீழே வரும்போதும், ஹையர் லோக்களாக அமைந்துள்ளது. அதாவது முதல் தடவை கீழே இறங்கி வரும்போது ஒரு லோ உருவாகியது. இரண்டாம் முறை கீழே இறங்கும்போது அதற்குக் கொஞ்சம் மேலேயே நின்று மேலே திரும்பிவிட்டது. மூன்றாவது தடவை கீழே வரும்போதோ முதல் இரண்டு லோ லெவல்கள் வரையிலும் கீழேயிறங்காமல் அவற்றிற்கு மேலேயே நின்று, ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்குமா, இல்லையா என்ற நிலையில் இருக்கிறது.

ஏதோ ஒரு ரீசனுக்காகத்தான் விலை ஹையர் லோக்களை உருவாக்கி, கீழே செல்லாமலிருப்பதால், இந்த பேட்டர்ன் R-ஐ உடைத்து மேல் பக்கமாகச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

Triangle பேட்டர்ன்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே “கிளிக்”கிடுங்கள்!

உஸ்ஸ்… அப்பாடா! இப்பவே கண்ணக் கட்டுதே!

“என்னங்க இதெல்லாம் நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ? நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லிட்டு கீழே இறங்கும்னு சொன்னீங்க! அப்புறம் ட்ரையாங்கில்னு சொல்லிட்டு மேலேயும் போகலாம்னு சொல்றீங்களே“ன்னு கேக்காதீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இதே ட்ரையாங்கிலோட சப்போர்ட் லைன் உடைபட்டால் கீழே செல்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.

அதனாலதான் சொல்றாங்க, “டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது விஞ்ஞானம் அல்ல; அது ஒரு கலை” அப்டீன்னு!

நம்ம மேலே போகும்னு சொல்றதுனால மேலே போகணும்னு ஒண்ணும் அவசியமில்லை; கீழேயிறங்கும்னு சொன்னதுனால அது கீழேயிறங்கணும்னு ஒண்ணும் அவசியமில்லை. Factu… factu…! கரெக்டு… கரெக்டு…!

நம்ம இதெல்லாம் அலசி ஆராய்ந்து, எந்த மாதிரி டிரேட் எடுக்கணும்னு முடிவெடுத்து, அதுல எவ்வளவு ரிஸ்க், அந்தளவு ரிஸ்க் எடுக்கும்போது எந்தளவு நமக்கு ரிவார்ட் கெடைக்கறதுக்கு சான்ஸ் இருக்குதுன்னு பாத்து, அந்த ரிஸ்க், ரிவார்ட் ரேஷியோவுக்கு நம்ம பர்ஸ், பாங்க் பேலன்ஸ் தாக்குப் பிடிக்குமான்னு நல்லா யோசிச்சி டிரேட் எடுக்கறதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். (உஸ்ஸ்… அப்பாடா….. எவ்ளோ பெரிய செண்டென்ஸ் எழுதியிருக்கேன்!)

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

ஓ! மை காட்! இது நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட்டுன்னு சொல்றதுக்கு மறந்துட்டேனே! நாளைக்கு நிஃப்டியோட டெய்லி சார்ட்டப் போட்டு ஒரு தாக்குத் தாக்கலாம். சரீங்களா!

படம் 5: நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட். இதுதாங்க அந்த சார்ட்

படம் 5: நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட். இதுதாங்க அந்த சார்ட்

டைவர்ஜென்ஸ் இருக்குதா? இல்லையா? – ரீல் 1


ஹலோ!

இந்தத் தலைப்பை, அப்படியே “மைனா” படத்தில் அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி, தனது கணவரிடம் போனில் கேட்பாரே, அதுபோல பேசிப் பார்க்கவும்! 🙂

கீழேயிருக்கும் படம் ஒரு mystery chart! இப்படி நான் எழுதியுள்ளதைப் பார்த்தவுடனேயே உங்களில் நிறைய பேருக்குச் சிரிப்பு வந்து விட்டிருக்கும். “என்ன சார்! இந்தச் சார்ட்டெல்லாம் ஜூஜ்ஜுபி மேட்டர் சார்!” என்கிறீர்களா? 🙂 That’s fine!

படத்தில் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா? இல்லையா?

படத்தில் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா? இல்லையா?

இந்தச் சார்ட்டில் நான் வேண்டுமென்றே அனைத்து எவிடென்சுகளையும் அழித்து விட்டேன். ஏனெனில் பெயர் தெரிந்துவிட்டால், பிறகு நமது மனம் பெயருக்குத் தகுந்த மாதிரி யோசிக்கத் தொடங்கிவிடும்.

ஆனால், உங்களுக்காக A, B & C என்று குறிப்பிட்டு, கொஞ்சம் shade கூட செய்து வைத்துள்ளேன். So, இந்த ஒரு சார்ட்டுக்கு நீங்கள் அனைவரும்தான் அனாலிசிஸ் செய்ய வேண்டும். எனக்கு எழுதி, எழுதி …. உம்……. bore அடித்துவிட்டது என்றெல்லாம் எழுத மாட்டேன். எனக்கு இன்னமும் நிறையவே இண்டரெஸ்ட் இருக்கிறது. 🙂 இன்னமும் நிறையவே எழுதி உங்களுக்கு boring-ஆக மாற்ற முயற்சிக்கிறேன்!

நீங்கள் செய்ய வேண்டியதென்ன?

a) ரொம்ப சிம்பிள்தான். இந்தச் சார்ட்டில் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா?

1. ஆம் எனில், எங்கு தெரிகிறது? என்ன மாதிரி category (category 1ஆ அல்லது 2ஆ)? +ve or -ve டைப்? எங்கெங்கு என்ன மாதிரி டிரேட் எடுக்கலாம்? அப்படி டிரேட் எடுப்பதற்கு என்ன சிக்னல் பார்க்க வேண்டும்?

2. இல்லை எனில், வேறென்ன தெரிகிறது?

b) இதைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததை, இதுவரையிலும் நான் டைவர்ஜென்ஸ் பற்றி எழுதி, நீங்கள் புரிந்து கொண்டதை “Comments section-இல்” எழுதவும்.

தயவு செய்து என்ன ஸ்டாக் என்று மட்டும் பதில் எழுதி விடாதீர்கள். இது ஒரு சார்ட் மட்டும் பார்த்து, ஆராய்ச்சி செய்து, ஒரு முடிவெடுப்பதற்கான பயிற்சிதான். அது எந்த ஸ்டாக்-ஆக இருக்குமென்று யோசித்து நேரத்தை வீணாக்கும் பயிற்சியல்ல.

c) தயவு செய்து ஒரு முப்பது, நாற்பது பேராவது எழுதுவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது எனக்கு.

d) உங்களுக்கு திங்கள் & செவ்வாய் என்று இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். நான் எனது விளக்கத்தை புதன்கிழமையன்று எழுதுகிறேன்.

சும்மா ஜாலியா எழுதுங்க! யார் கரெக்ட், யார் தப்பபென்றல்லாம் இங்கே கிடையாது. சமீபத்திய பாட்டொன்று ஞாபகத்துக்கு வருகிறது!

“தப்பெல்லாம் தப்பேயில்லை…

     சரியெல்லாம் சரியேயில்லை…

தப்பை நீ சரியாய்ச் செய்தால்…

     தப்பு இல்லை! தப்பு இல்லை!….”

மார்கெட்டுல பணம் பண்றவங்க மட்டும்தான் கரெக்ட். இதுதான் நிஜம்! என்னங்க? நான் சொல்றது கரெக்ட்தானே?

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

DABUR I: டே டிரேடிங்கில் டைவர்ஜென்ஸ்(கள்)


ஹலோ!

Promises are made to be broken என்பதற்கேற்ப இங்கே மறுபடியும் ஒரு டைவர்ஜென்ஸ் பற்றிய ஒரு அலசல். கடந்த வாரம் டே டிரேடிங்கில் கவனித்து வந்த இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா விளக்கங்களும் சார்ட்டுகளிலேயே இருக்கின்றன்றன.

படம் 1: Hourly chart-இல் தெரியும் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம் 1: Hourly chart-இல் தெரியும் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம் 2: RSI சப்போர்ட் லெவல் உடைகிறது; short entry.

படம் 2: RSI சப்போர்ட் லெவல் உடைகிறது; short entry.

 

15 min சார்ட்டில் தெரியும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

15 min சார்ட்டில் தெரியும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

 

படம் 4: RSI ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு long entry.

படம் 4: RSI ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு long entry.

மேலே இருக்கும் கடைசிப் படத்தில், அன்றைய நாள் முடிவிலேயே  profit எடுத்துவிடலாமென்று எழுதியிருக்கிறேன். கண்ணில் தெரியும் இலாபத்தை அன்றே கணக்கில் கொண்டுவந்து விடலாமென்பதற்காகத்தான். ஒரு லாட்டிற்கு மேல் பொசிஷன் எடுப்பவர்கள், பாதி profit எடுத்துவிட்டு மீதியை வைத்திருக்கலாம். ஏனெனில், இது அப்ட்ரெண்டிலிருக்கும் ஸ்டாக். அப்படியே இருந்தாலும், 145 என்ற ரெஸிஸ்டன்ஸ் லெவலை, நான் உன்னிப்பாகக் கவனித்து வருவேன்!

மறுபடியும் ஒரு எச்சரிக்கை!

இங்கே நான் எழுதியிருப்பதைப் பார்த்தால், ஏதோ டே டிரேடிங்கில் மிகவும் ஈசியாகப் பணத்தை அள்ளி, மூட்டைக் கட்டி, எடுத்துப்போகலாமென்று நினைத்து விடாதீர்கள்! இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம்! ஜாக்கிரதை!

எனது எண்ணமெல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கும் டெக்னிக்கல் அனாலிசிசை தங்க்லீஷ்லேயும் எழுதி, அது நம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் சென்றடையட்டும் என்பதுதான்.

சரிங்க! வழக்கம் போல டைவர்ஜென்ஸ் பற்றிய ஏதேனும் சந்தேகங்களிருந்தால், தயங்காமல் கேளுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130322 NIFTY Negative Divergence நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்


ஹலோ

நேற்றைய பதிவிலே, நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் பற்றி சொல்கிறேன் என்றேனே, அதுதான் இப்போதைய பதிவு.

டைவர்ஜென்ஸ் (Divergence) என்றால் என்ன?

அதாவது, நமது சார்ட்டில் பங்குகளின் விலையானது OHLC மற்றும் வால்யூம் வைத்துக் குறிக்கப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையிலேயே மேலும் (CCI, MACD, OBV, RSI, STOC, etc, போன்ற) பற்பல இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் (இ & ஆ என்று சுருக்குகிறேனுங்க!) (Indicators & Oscillators) கணக்கிடப்படுகின்றன.

டெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த விலை மற்றும் இ & ஆ ஆகியவற்றின் போக்கை ஒப்பிடுவதே டைவர்ஜென்ஸ் எனப்படும் தியரி.

சப்போஸ் விலையானது மேல் நோக்கி ஏறுகிறதென்றால், அதிலிருந்து கணக்கிடப்படும் இ & ஆ-வும் மேல் நோக்கித்தான் செல்ல வேண்டுமென்பது நியதி. அதேபோல, விலையானது இறங்குமுகத்திலிருந்தால், இ & ஆ-வும் அதனைப் பின்பற்ற வேண்டும்.

1. பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் (Positive divergence)

சப்போஸ் ஒரு பங்கின் விலையானது, கீழ்நோக்கி டௌன்டிரெண்டில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு கால கட்டத்திலே அது வலிமை பெற்று மேலே செல்ல யத்தனிக்கும் போதோ (அல்லது) அந்த டௌன்ட்ரெண்ட் முடிவுக்கு வரும் காலங்களிலோ இ&ஆ-க்களில் வலிமை கூடி, மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலையின் போக்கு டௌன்டிரெண்டாக இருந்தாலும், இது வலிமையைக் காட்டுவதால் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.

2. நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (Negative divergence)

பாசிட்டிவ்வுக்கு நேரெதிர் நெகட்டிவ் (ஆ! என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா?) J.

ஒரு பங்கின் விலை அப்ட்ரெண்டில் இருக்கும்போது, இ&ஆ-க்களில் டௌன்ட்ரெண்ட் தெரிந்தால் அது அந்த அப்டிரெண்டின் வலிமை குறைந்து வருவதைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. என்னதான் விலை மேலே சென்றுகொண்டிருந்தாலும், இது நெகட்டிவ் நியூஸ் ஆதலால், நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.

நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

இப்போது இந்த நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள். டிச’12-ஜன’13 என்ற இந்த இரண்டு மாத காலகட்டத்திலே, இன்டெக்ஸ் அப்ட்ரெண்டில் பயணிக்கிறது.

அதற்கு நேர்கீழே, MACD, RSI மற்றும் STOC போன்ற இ&ஆ-க்கள் டௌன்டிரெண்டில் (சிகப்பு நிறப் புள்ளிக் கோடுகள்) செல்வதைப் பாருங்கள்.

படம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

இந்நிலை காளைகளின் குன்றி வரும் வலிமையைக் காட்டும் அளவுகோலாக கணக்கிடப்படுகிறது.

“சரிங்க! நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லி, காளைகளின் வலிமை குறைந்து கொண்டே வருதுன்னு சொல்றீங்க! நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம்?” அப்படீன்னு கேக்குறீங்களா? அடுத்த படத்தைப் பாருங்கள்!

படம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)

படம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)

1. மேலே விலையானது டிச’12-ஜன’13 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கொண்டு கீழே செல்கிறது.

2. அதேபோல MACD, RSI மற்றும் STOC-க்கள் தங்களின் சப்போர்ட் லைன்களை உடைத்துக்கொண்டு கீழே செல்வதையும் பாருங்கள்.

இதிலே, மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளான 1 மற்றும் 2 உடைபடுதல்கள், இரண்டு மாத கால நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கப்புறம்தான் நடக்கிறது.

இந்த நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் என்பது சிக்னல். பிப்’13-இல் உடைபடுதல்தான் கன்ஃபர்மேஷன் (confirmation). இந்தக் கன்ஃபர்மேஷன் கிடைத்த பிறகுதான் நீங்கள் பிராஃபிட் எடுப்பதோ அல்லது/மற்றும் மேலும் ஷார்ட் போவதோ செய்ய வேண்டும்.

என்னங்க! ஏதாவது புரியுதுங்களா? ரொம்பக் குழப்பிட்டேனா? என்னங்க செய்யறது? அதே டயலாக்தானுங்க! “குழம்பின குட்டையிலதாங்க மீன் பிடிக்க முடியுமுங்க”

சரி! ஒரு ஹோம்வொர்க்!

ஹ.ஹ..ஹா… பயந்துட்டீங்களா? சும்மா….! J

1. நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கு உதாரணமா ஒரு சார்ட் போட்டுட்டேன். பாசிட்டிவ் டைவர்ஜென்சுக்கு LICHousingFinance டெய்லி சார்ட் பாருங்க! ஏதாவது தெரியுதான்னு சொல்லுங்க.

2. இப்ப சொல்றதுதான் ரொம்ப முக்கியமானது. இவ்ளோ நாளா பயங்கர அப்டிரெண்டில இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுங்களா? அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க! எதுலேயாவது வலிமை குறையுதான்னு சொல்லுங்க!

 

பாருங்க! பாருங்க! நல்லாப் பாருங்க! பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்!

சரிதானுங்களே? J

அன்புடன்,

பாபு கோதண்டராமன்