20130905 CANBK டெய்லியில் 34 EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி டிரேடுகள்


ஹலோ!

இந்த டெய்லி சார்ட்டில் என்னுடைய விளக்கங்களைக் குறித்துள்ளேன். டிரெண்டில் இருக்கும் ஸ்டாக்குகளில் சரியான நேரத்தில் என்ட்ரி ஆக, இந்த ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜிகள் நன்கு துணை புரியும். டிரெண்டின் போது டிரேடுகள் எடுப்பதையும், ட்ரெண்ட் ரிவர்ஸல் நடக்கும்போது டிரேட் எடுக்காமலிருப்பதையும் கவனியுங்கள்!

அதாவது, மேஜர் சுந்தரராஜன் ஸ்டைல்ல சொல்லனும்னா,”Such systems make you a disciplined trader; அதாவது, இந்த மாதிரி ஸ்ட்ராடஜிகள்தான் உங்களை ஒரு கட்டுப்பாடான டிரேடராக உருவாக்கும்”. என்ஜாய்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

படம்: CANBK டெய்லி சார்ட் - பிளீஸ் நோட் தி "நோ டிரேட் ஏரியா" யுவர் ஆனர். :)

படம்: CANBK டெய்லி சார்ட் – பிளீஸ் நோட் தி “நோ டிரேட் ஏரியா” யுவர் ஆனர். 🙂

 

20130816 நிஃப்டியில் ஒரு முக்கோணம்….


ஹலோ!

நிஃப்டியில் ஒரு ட்ரையாங்கில் (triangle – முக்கோணம்) அமைப்பு தெரிகிறது. அது உடைபட்டு, ஒரு ரீ-டெஸ்ட் நடந்து மறுபடியும் உடைபட்டுள்ளது.

உடைபட்ட இடம்: 5650 லெவல்.

அதிலிருந்து இன்னமும் 450 புள்ளிகள் மற்றும் 700 புள்ளிகள் கீழே செல்ல வாய்ப்புள்ள அமைப்பிது.

டார்கெட் 1: 5650-470 = 5180

டார்கெட் 2: 5650-700 = 4950

பொறுத்திருந்து பார்க்கலாம்!

படம்: நிஃப்டியில் தெரியும் முக்கோணம்!

படம்: நிஃப்டியில் தெரியும் முக்கோணம்!

 

 

 

 

பயிற்சி வகுப்பின் தாக்கம்!


ஹலோ!

உங்களுக்கெல்லாம் தெரியும் கடந்த ஞாயிறன்று (4/8/2013) என்னுடைய பயிற்சி வகுப்பு  நடந்து முடிந்ததென்று. ஒரு சில புதிய முதலீட்டாளர்களுக்கு இது கொஞ்சம் ஓவர்டோஸ் போலத்தானிருந்ததாம்.

ஒரு சில லாங் டெர்ம் முதலீட்டாளர்கள் 34EMA -வை வைத்து குறுகிய கால ஸ்விங்க் டிரேட் பொசிஷன்கள்  எடுக்கலாமேவென்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

ஒரு சில டேடிரேடர்கள் 3×5 EMA- எக்ஸெல் முறையை வைத்து இன்டெக்ஸ்-இல் பொசிஷன் டிரேட் எடுக்கலாமேவென்றும் நினைக்கிறார்களாம்.

எனக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நமது காளையும் கரடியும் வாசகர்களில் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு ஊக்கம் கொடுத்ததால்தான் (ஊக்கம் மட்டும்தாங்க! ஊக்க மருந்து இல்லீங்க!) இது வெற்றியடைய காரணமாக இருந்தது என்று சொல்லலாம்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

நண்பர் ஸ்ரீநிவாசன் DM அவர்களின் பாங்க் நிஃப்டி 34இ‌எம்‌ஏ ரிஜக்ஷன் ஷார்ட். சபாஷ்!

SriniDM பாங்க் நிஃப்டி 20130806 34EMA ரிஜக்ஷன் குறிப்புகள்

SriniDM பாங்க் நிஃப்டி 20130806 34EMA ரிஜக்ஷன் குறிப்புகள்

Dan Chesler-இன் Stoch-Trap pullback ஸ்ட்ராடஜி (தமிழாக்கம்)


ஹலோ!

எந்தவொரு ஸ்டாக் மார்க்கெட் நியூஸ் சேனலிலும் சரி, எந்தவொரு பங்குச்சந்தை நிபுணரும் சரி, இல்லை பங்குச்சந்தை பற்றிய புத்தகங்களிலும் சரி, நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் வாசகம் என்னவென்றால்,Buy on dips in an uptrend; and sell on rallies in a downtrend”.

அதாவது, ஒரு ஸ்டாக் அப்ட்ரெண்டில் இருக்கும்போது, எப்போதெல்லாம் விலை குறைகிறதோ அப்போது வாங்கி, விலை உயரும்போது விற்று இலாபம் பார்க்கவேண்டும்; அதேபோல, ஒரு டௌண்ட்ரெண்டில் ஏற்றத்தின்போது விற்று, மறுபடியும் விலை குறைந்து வரும்போது வாங்கி இலாபம் பார்க்கவேண்டும்.

இந்த ஸ்ட்ராடஜியை “entering on pullbacks” என்று சொல்வார்கள். (Pullback= அப்ட்ரெண்டில் விலை சிறிதளவு கீழே இறங்குவது; அதேபோல டௌண்ட்ரெண்டில் சிறிதளவு மேலே செல்வது)

இதை ஈசியாகச் சொல்கிறார்களே தவிர, அப்ட்ரெண்டில் எந்த அளவு வரை கீழே இறங்கிவந்தால், நாம் அதனை pullback என்றெடுத்துக்கொண்டு என்ன விலையில் வாங்கலாம்? அதேபோல, டௌன்ரெண்டில் எந்த அளவு வரை மேலே சென்றால், நாம் அதன pullback என்று கணக்கில் கொண்டு விற்று விட்டு, பிறகு விலை கீழேயிறங்கி வரும்போது marupadiyum வாங்கி இலாபம் பார்க்கலாம்?

இந்த சந்தேககங்களுக்கு, கீழேயிருக்கும் கட்டுரை உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன்.

A Technique For Trapping Pullbacks

November 12, 2002 By Dan Chesler

http://www.tradingmarkets.com/recent/A_Technique_For_Trapping_Pullbacks-659752.html

இக்கட்டுரையிலே இவர் (Dan Chesler) இரண்டு விதமான டெக்னிக்கல் சமாச்சாரங்களை உபயோகிக்கிறார்.

முதலில் என்ன டிரெண்டில் இருக்கிறது என்பதற்கு, 50 நாள் மூவிங்க் ஆவரேஜ் (அல்லது 5/35 MACD) உபயோகிக்கிறார்.

50MA உபயோகிக்கும்போது, முடிவு விலை (அதாவது குளோஸ்) 50MA-க்கு மேலேயிருந்தால் அப்ட்ரெண்ட்; கீழேயிருந்தால் டௌண்ட்ரெண்ட் (இந்த சிஸ்டத்தின் படி)

இவ்வாறு ட்ரெண்டை கணித்தபிறகு, அடுத்த டெக்னிக்கல் இன்டிகேட்டர் இவர் உபயோகிப்பது STOCH %K (4 period).இது ஜீரோவிலிருந்து (குலாப் ஜாமூன் ஜீராவிலிருந்து இல்லைங்க! J) நூறு வரை (0-100) ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு ஆசிலேட்டர்.

இவர் கணக்குப்படி, அப்ட்ரெண்டில் இந்த ஆசிலேட்டர் 21க்குக் கீழேயிருக்கும்போது அது ஒரு BUY setup-ஐக் காட்டுகிறது.

அதேபோல, டௌண்ட்ரெண்டில, இது 79-க்கு மேலேயிருக்கும்போது ஒரு SELL setup-ஐக் காட்டுகிறது.

இதுவரை பார்த்தது!

Stoc-Trap BUY setup:

1. முடிவு விலை (close) 50MA-விற்கு மேலேயிருக்க வேண்டும்.

2. STOCH4 ஆசிலேட்டர் 21 லெவலுக்குக் கீழேயிருக்க வேண்டும்.

Stoc-Trap SELL setup:

1. முடிவு விலை (close) 50MA-விற்கு கீழேயிருக்க வேண்டும்.

2. STOCH4 ஆசிலேட்டர் 79 லெவலுக்குக் மேலேயிருக்க வேண்டும்.

இதெல்லாம் ஒரு setup விதிமுறைகள்தான். இந்த விதிமுறைகளுக்குட்பட்டு டெய்லி சார்ட்டில் நமக்கு சிக்னல்கள் கிடைக்கும்போது எப்படி BUY அல்லது SELL டிரேட்களை எடுக்க வேண்டுமென்று பார்க்கலாம். இங்கே அவர் உபயோகப்படுத்திய சார்ட்டுகளையே தமிழாக்கம் செய்துள்ளேன்.

முதலில் அவருக்கு IBM டெய்லி சார்ட்டில் இந்த STOCH TRAP விதிகளின் படி, ஒரு sell setup கிடைத்திருக்கிறது.

படம் 1: Stoch Trap SELL setup IBM daily

படம் 1: Stoch Trap SELL setup IBM daily

பிறகு அடுத்த நாளைய 15நிமிட சார்ட்டில் எங்கே “ஷார்ட்” என்ட்ரி எடுப்பது, எங்கே ஸ்டாப்லாஸ் வைப்பது பற்றி விளக்கியுள்ளதை தமிழாக்கம் செய்துள்ளேன்.

படம் 2: Stoch Trap sell SETUP: ENTRY & STOPLOSS

படம் 2: Stoch Trap sell SETUP: ENTRY & STOPLOSS

 

Setup கிடைத்தபிறகு எப்படி என்ட்ரி எடுத்து, எங்கே ஸ்டாப்லாஸ் வைக்க வேண்டுமென்று புரிகிறதா? இதேபோலத்தான் BUY setup-பிற்கும் நீங்களே எப்படி என்ட்ரி மற்றும் ஸ்டாப்லாஸ் வைப்பது பற்றி ஒரு கணக்கு பண்ணிப் பாருங்களேன்.

அவரின் மற்றைய சார்ட்டுக்கள்!

படம் 4: Stoch-Trap SELL setup

படம் 3: Stoch-Trap SELL setup

படம் 3: Stoch Trap Buy SETUP

படம் 4: Stoch Trap Buy SETUP

5/35 MACD உபயோகிக்கும் முறை!

படம் 5: MACD 5/35 உபயோகிக்கும் முறை

படம் 5: MACD 5/35 உபயோகிக்கும் முறை

 

இந்த Stoch-Trap முறையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து, இலாப நஷ்டக் கணக்குகளைப் போட்டு, நல்லபடியாக முடிவெடுத்து வெற்றி காணுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

//

நிஃப்டி மற்றும் பாங்க் நிஃப்டியின் மூவிங் ஆவரேஜ்கள்: ஒரு பார்வை! ரீல்-2


ரீல்-1-ஐப் படிப்பதற்கு இதிலே கிளிக்கிடவும்

அதிலே சொல்லியிருந்தது போல நான் இரண்டு சார்ட்டுக்குமே விளக்கம் சொல்லப் போவதில்லை. ஏனெனில், எனக்கு நன்றாகத்தெரியும், நீங்களெல்லாம் சும்மாவே ஒரு கோடு போட்டிருந்தால், அதிலேயே ரோடு போடக்கூடிய வல்லமை படைத்தவர்களென்று! (எப்படி! சைக்கிள் gap-பில நான் உங்களுக்கு “ஜில்”ல்லுன்னு ஐஸ் வச்சிட்டேன்! 🙂 இந்த சம்மருக்கு நல்லா இருக்கா?),

நான் போட்டிருந்த நிஃப்டி சார்ட்!

படம் 1: நிஃப்டி 20130411

படம் 1: நிஃப்டி 20130411

நான் நிஃப்டி சார்ட் மட்டும் விளக்கங்களுடன் கீழே தருகிறேன். இதைப் பார்த்து, பார்த்து நீங்களே பாங்க்நிஃப்டி மற்றும் உங்களுக்குப் பிடித்த ஸ்டாக்குகளில் பயிற்சி செய்து பாருங்களேன்!

படம் 2: திரிவேணி சங்கமம்!

படம் 2: திரிவேணி சங்கமம்!

 

படம் 3: 34EMA-வா? கொக்கா?

படம் 3: 34EMA-வா? கொக்கா?

 

படம் 4: தூரத்துச் சொந்தம்!

படம் 4: தூரத்துச் சொந்தம்!

 

படம் 5: அதெல்லாம் சரிங்க! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா? பாங்க் மேனேஜர் என்னைப் பார்த்துச் சிரிப்பாரா?

படம் 5: அதெல்லாம் சரிங்க! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா? பாங்க் மேனேஜர் என்னைப் பார்த்துச் சிரிப்பாரா?

 

இன்று மூவிங் ஆவரேஜ்கள் எப்படி சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டன்ஸாக இருக்கின்றன;  அவற்றை வைத்து எப்படி டிரெண்டின் வலிமையைச் சொல்வது; எப்படி ஒரு சிம்பிள் டிரேடிங் ஸ்ட்ராடஜி அமைப்பது; அதை டெஸ்ட் செய்வதெப்படி என்றெல்லாம் பார்த்திருக்கிறோம்.

இதெல்லாம் என் சைடிலிருந்து ஒரு சில இன்ஃபர்மேஷன்தானுங்க! முதலீடும், முடிவும் உங்களுடையதாகவே இருக்கட்டும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

தனிமரம் தோப்பாகுமா? 🙂