SEBI செய்ய வேண்டியதென்ன? பாகம் 1


2014, டிசம்பர் 1-இலிருந்து அமலுக்கு வந்துள்ள புதிய விதியின் படி செபியிடம் பதிவு பெற்ற அனாலிஸ்ட்கள் மட்டுமே பங்குகளைப் பற்றி வாங்க, விற்க ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். இது மிகவும் நல்லதுதான். இதை விட செபி கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயமொன்று இருக்கின்றது. அதுதான் இன்சைடர் டிரேடிங் – அதுதாங்க “உள்குத்து வேலை” என்று நாம் செல்லமாகச் சொல்வது.

கடந்த 2014 இறுதியில் நடந்த இரண்டு பங்குகளின் விலை ஏற்ற, இறக்கங்கள் நமது இந்தியச் சந்தையிலும் இந்த மாதிரி இன்ஸைடர் டிரேடிங் இருக்கின்றனவா என்ற சந்தேகங்களை முதலீட்டாளர்களின் மனதில் எழுப்பியுள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

டெக் மஹிந்த்ரா (TECHMAHINDRA)

கடந்த 2014, நவம்பர் 20-ஆந் தேதியன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு (பங்குச்சந்தை அலுவல்கள் முடிவடைந்த பின்னர்), பிரஸ் மீட் வைக்கப்போவதாக டெக் மஹிந்த்ரா நிறுவனம் அறிவித்தது. கீழேயிருக்கும் ட்விட்டர் தகவலில் இதனை சி‌என்‌பி‌சி டி‌வி18-இன் தொகுப்பாளர் சோனியா ஷெனாய் தெரிவித்திருந்தார். (இது 20/11/2014 3:34PM-இல் ட்வீட் செய்யப்பட்டுள்ளது)

TechMahindra 4pm announcement TWEET by Sonia Shenoy

 

 

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சாதாரண மக்களாகிய நமக்கும், பிரஸ் மற்றும் மீடியாவிற்கும், 20/11/2014 மாலை 4 மணிக்கப்புறம்தான் டெக்மஹிந்த்ரா நிறுவனம் என்ன சொல்லப்போகிறதென்று தெரியவரும். இது ஒன்றும் பெரிய விஷயமேயில்லைதானே?

ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக, 2014 நவம்பர் 19-ஆந்தேதியன்று அப்பங்கின் விலையில் என்ன நடந்ததென்று பார்க்கலாம். நவ. 18 அன்று 2596.75-இல் முடிவடைந்த பங்கு, அடுத்தநாள் நவ. 19 அன்று 2627.25 என்ற விலையில் வர்த்தகமாகத் தொடங்கியது. இங்கே முக்கியமாக பங்கின் விலையினைப் பார்க்காமல், ஆப்ஷன் மார்க்கெட்டில் டெக்மஹிந்த்ரா நவம்பர் சீரிஸ் 2700 கால் ஆப்ஷன் சார்ட்டை கவனிக்கலாம். (கீழேயிருப்பது ஹவர்லி சார்ட்)

2014 11 20 TECHM14NOV2700CE OI buildup

19/11 – ஓபன் 12. 50 அன்றைய லோ: 7.95

அதுவும் அன்றைய தேதியில் பிற்பகல் மூன்று மணிக்கு மேலாக இந்தக் கால் ஆப்ஷனின் ஓபன் இண்டரெஸ்ட் (OI) உயர்ந்து, விலையும் மேலே ஏறியுள்ளதைப் பார்க்கலாம். (படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது)

20/11 – க்ளோஸ்: 51.40 அன்றைய ஹை: 61.00

ஆக இந்த இரண்டு நாட்களில் குறைந்த பட்ச விளையான 7.95-லிருந்து அடுத்த நாள் அதிக பட்சமாக 61.00 வரை சென்றதில், 20-ஆந்தேதி முக்கியமான அறிவிப்பு வரப்போகிறதென்று முன்னரேயே தெரிந்தவர்களுக்கு மட்டுமே முக்கியமான தொடர்பிருக்கலாம் அல்லவா? 20-ஆந்தேதி மாலை 4 மணிக்கு பிரஸ் மீட் இருக்கிறதென்று 20/11 அன்றுதான் கம்பெனியும் மீடியாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் 19-ஆந்தேதியே ஓபன் இண்டரெஸ்ட் உயர்ந்து, 2700 கால் ஆப்ஷன் விலையும் உயர்ந்ததை செபி கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும்.

அஹ்மத்நகர் ஃபோர்ஜிங்க்ஸ் (AHMEDFORGE)

இது ஒருபக்கமிருக்க, ரிலையன்ஸ் போன்று, சந்தை முடிந்த பின்னர்தான் தங்களது நிதிநிலை அறிக்கையினை வெளியிடும்  வழக்கம் பல நிறுவனங்களுக்கு உண்டு. 2014, நவம்பர் 24 அன்று அஹ்மத்நகர் ஃபோர்ஜிங்க்ஸ் (AHMEDFORGE) நிறுவனமும் சந்தை முடிந்த பின்னர் தனது நிதிநிலை அறிக்கையை அறிவிப்பதாய் செய்தி வெளியானது. ஆனால், 24-ஆந்தேதியன்றே அந்தப் பங்கின் விலை 8.7% குறைந்து 452.45 என்ற அளவிலே முடிந்தது. அன்றைய நிதிநிலை அறிக்கையும் மார்க்கெட் முடிந்த பின்னர்தான் வெளியிடப்பட்டது. அதுவும் மோசமாக இருந்த காரணத்தால், அடுத்த நாளிலிருந்து மேலும் விலை கீழேயிறங்கத் தொடங்கி (19/12/2014 நிலவரப்படி) 353.55 என்று வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றது.

2014 11 24 AHMEDFORGE result day 8 p 74 pc fall

சில்லறை வர்த்தகர்களாகிய நமக்கு இதிலேயிருக்கும் பாதகமான விஷயமென்ன? 2014, நவ. 24-இல் சந்தை நடந்துகொண்டிருக்கும்போதே ஏற்பட்ட விலைச்சரிவிற்கு என்ன/யார் காரணம்? கண்டிப்பாகச் சில்லறை வர்த்தகர்களால் அந்த அளவிற்கு விலையினைக் கீழே கொண்டு வரமுடியாது. மார்க்கெட் முடிந்தபின்னர் வரவிருக்கும் மோசமான நிதிநிலையறிக்கையினைப் பற்றி நன்கு தெரிய வந்தவர்களால் மட்டுமே மார்க்கெட் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த நிறுவனப் பங்குகளை விற்று, வெளியேற அதிக வாய்ப்புகள் உண்டு.

இன்ஸைடர் டிரேடிங் என்பது பங்குகளை வாங்கி அல்லது விற்று இலாபம் சம்பாதிப்பது மட்டுமல்ல. டெக்மஹிந்த்ரா2700 கால் ஆப்ஷன் போன்று ஆப்ஷன் மார்க்கெட்டிலும் இலாபம் சம்பாதித்துப் போய்க்கொண்டேயிருக்கலாம்.

அது சரி! இந்த உள்குத்து வேலைகளை யார் செய்திருக்கலாம்? நிறுவன அதிபர்களோ, மேலிருந்து கீழ் வரை உள்ள நிறுவன ஊழியர்களோ, அவர் தம் உறவினர்களோ, நண்பர்களோ, அல்லது நிறுவனம் வெளியில் தொடர்பு வைத்திருக்கும் தணிக்கை நிறுவனம் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றைத்தான் செபி அதிக கவனம் செலுத்தி, விசாரணைகள் நடத்தி, தவறுதல் செய்யும் நிறுவனகளின் மீதும் நிறுவன அதிபர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்து தகுந்த தண்டனை வழங்கினால்தான் சில்லறை வர்த்தகர்களின் நம்பகத்தன்மையைப் பெறமுடியும். இவை போன்று மேலும் நடக்காமலும் தடுக்க முடியும்.

செய்யுமா செபி?

Linear சார்ட்டில் ட்ரெண்ட்லைன் பிரேக்அவுட்; Log-இல்?


சிம்பிள்தான்!

நிஃப்டி 8800FebPE சார்ட்

2015 02 13 tamil NF8800pe will u trade this bo with divergence

 

 

2015 02 13 tamil NF8800pe log scale will u trade this bo with divergence

2015 02 06 HAVELLS ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன்


என்ஜாய்!

2015 02 06 HAVELLS HnS

2015 02ALBK ஃப்யூச்சர் 30 நிமிட சார்ட்டில் ஒரு காஜு கட்லி இருக்கின்றது!


Kaju katli      இது டைமண்ட் பேட்டர்ன் என்று சொல்வார்கள். மேலே சென்றால், மேலேயும், சப்போர்ட்டை உடைத்துக் கீழே சென்றால், கீழேயும் செல்லலாம்!

2015 02 06 ALBK Fut 30 min diamond pattern

ஃபோகஸ் … ஃபோகஸ் …. ஆன் லீடர்ஸ்


இதுல என்ன சொல்றாங்கன்னா….

கெடைக்கப்போற பலாக்காய விட கையில இருக்குற கலாக்காயே மேல்! இதுல ரொம்ப முக்கியமான சொல் : லீடர்ஸ்!

செக்டார் லீடர்ஸ்ல இதுவரைக்கும் SIP ஆரம்பிச்சிருக்கீங்களா? என்ன நான் சொல்றது?

Trading card 395 buy more of what you have LEADERS

தை அமாவாசையில் …..


2015 01 20 ATH index nifty sensex Bears 05 sad

மேலே… அதுக்கும் மேலே…. அதுக்கும் மேலே…


ஹலோ!

என்னங்க! மார்க்கெட் “அதுக்கும் மேலே… அதுக்கும் மேலே”ன்னு சொல்லிக்கிட்டே இன்னமும் மேலே போய்க்கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது, “அடடா! இது வரைக்கும் விட்டுட்டோமே! இப்பத்தான், இதுலத்தான், பக்கத்து வீட்டுக்காரன் சொத்தையெல்லாம் வித்தாவது நம்ம முதலீடு செஞ்சிட்டு, நிறைய (கொழுத்த) இலாபம் பார்க்கலாமே!”ன்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்களா? அப்படியே, நனைச்சிக் காய வையுங்க; ஷேர் மார்க்கெட்டுல இந்த மாதிரி சமயத்துலதான் புதுசா முதலீடு செய்ய வர்றவங்க வந்து மாட்டிக்கிட்டு, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்களது முதலீட்டினை இலாபமாகக் கொடுத்து விடுகிறார்கள்.

புரியலைங்களா? கீழேயிருக்கும் கேள்விக்கு உங்களின் பதில் என்ன? அதுவும் நீங்க இப்போதான் பங்குச்சந்தை முதலீட்டுக்குப் புதியவரென்றால், கண்டிப்பா இந்தக் கேள்விக்கு நீங்க பதில் சொல்லோணும்! சரியா?

இவ்ளோ நாள் (வருஷம்) ஏறாத பங்குச்சந்தையா இப்போது ஏற்றத்திலிருக்கின்றது?

“அச்சம் தவிர்! உச்சம் தொடு!” என்பது போல காளைகளின் ஆதிக்கம் இப்போது 8500-8600 புள்ளிகளில் நிஃப்டியினைக் கொண்டு சென்றுள்ளது. கீழேயிருக்கும் படத்தினைப் பாருங்கள்!

Nifty movements

இத்தனை வருடங்களும் பங்குச்சந்தை உயிரோட்டமாக இருந்து கொண்டுதானிருந்திருக்கின்றது. (ஷ்…அப்பாடா! எப்படியோ இந்த ஒரு நீளமான வார்த்தையை எழுதி விட்டேன்) ஆனால், அது நமது கவனத்தினை ஈர்க்கவில்லையே! தற்போது நிஃப்டி 8600-ஐத் தொட்டுள்ள நிலையில்தான் நம்மில் பலரும் பங்குச்சந்தையினைப் பார்க்க ஆரம்பித்துள்ளோம். அதுவும், அக்கம் பக்கத்தினர் சொல்லக் கேட்டோ, அல்லது அலுவலக நண்பர்கள் சொல்லக் கேட்டோ, அதுவுமில்லாமல் வேறு வழிகளில் பார்த்தோ, கேட்டோ “எப்படியாவது இதிலே முதலீடு செய்யவேண்டும்; சீக்கிரமே லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் ஆகவேண்டும்” என்கின்ற எண்ணம் உங்களுக்கு வந்துள்ளதா? அதுவும் “கமாடிட்டி, கரன்சி (ஃபோரேக்ஸ் – Forex) மார்க்கெட்டில் அன்றாடம் ஒரு ஐந்நூறு அல்லது ஆயிரம் பார்க்க முடியுமாமே” என்று உங்கள் கைகள் நம,நமவென்று அரிக்கின்றனவா? “டிரேடிங்ல, அதுவும் ஆப்ஷன் டிரேடிங்ல கொஞ்சமா போட்டு, பெருசா பாக்கலாமாமே”ன்னு மனசு பட்டாம்பூச்சி மாதிரிப் பறந்துக்கிட்டேயிருக்கா?

அப்படின்னா….

Stop sign 01

அதுவும், புதுசா, நவீனமா, ஹாபி போல டிரேடிங் பண்ணலாமுன்னு ஐடியா உங்களுக்கிருக்குதா? அப்படியிருந்தா, இந்த மாதிரி எண்ணத்தையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு சும்மா, கம்னு இருங்க! ஆமாங்க! இது ரொம்ப ஆபத்தானது; அதனாலதான் சொல்றேன் “சும்மா, கம்னு இருங்க”!

சரி! வேற எப்படிங்க பங்குச்சந்தையில நான் “தொபூக்கடீர்”னு குதிக்கிறது?

பேஸ்ஸிவ் இன்வெஸ்டிங்க் ஸ்டைல் (Passive Investing Style)னு ஒண்ணு இருக்குதுங்க. அதுதாங்க நம்ம அப்பா, அம்மா போஸ்ட் ஆஃபிஸ்ல கட்டிட்டு வந்த ஆர் டி (RD) மாதிரி. அதாவது அதிகமா (ரூம் போட்டு) யோசிக்கத் தேவையில்லை; மாசம் பொறந்தா பணம் கட்டிடணும்.இதுக்கு இன்னொரு, நவீன காலப் பேருதான் SIP-எஸ் ஐ பி (சிஸ்டெமெடிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான்)

அதே மாதிரிதான் மாசா, மாசம் நம்மால முடிஞ்சத குறிப்பிட்டா நல்ல கம்பெனிகளா வாங்கிப் போட்டுக்கிட்டேயிருக்கணும். இன்னைக்கு வாங்கிட்டு நாளைக்கே 30 – 40 பர்சண்ட் எதிர்பார்க்கக்கூடாது. அதுவும் சும்மா ஒரு வருசத்துக்கு, இரண்டு வருசத்துக்கு வாங்கிட்டு நிறுத்திடக்கூடாது.

“அப்படின்னா? எவ்ளோ நாளைக்கு வாங்கணும்? மூணு வருஷம்?”

“அதுக்கும் மேலே….!”

“அஞ்சு வருஷம்?”

“அதுக்கும் மேலே…..!

” பத்து வருஷம்? ”

அதுக்கும் மேலே….!”

பதினஞ்சி வருஷம்?

“ஆமாம்!”

ஓ மை காட்! பதினஞ்சி வருசத்துக்கு மாசா, மாசம் வாங்கணுமா?

ஆமாங்க! அதுதாங்க டிசிப்ளின்! அப்புறம் கம்பெனி தர்ற டிவிடெண்ட்டை வைத்தும் அப்படியே அதே பங்கினை வாங்கிக்கோணும்.

உதாரணம்

டி‌வி‌எஸ் மோட்டார் (இது முன்னர் டி‌வி‌எஸ்-சுஸுகி என்றிருந்தது)

*2000 ஜனவரியிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) -திற்கு வாங்கினால் எப்படியிருக்கிறதென்று பார்க்கலாம். நான் கணக்கீடு செய்வதை சுலபமாக்க மாதக் கடைசியில் வாங்குவதாக அமைத்துள்ளேன். ஏனெனில், அமிப்ரோக்கரில் மாதக் கடைசியில் க்ளோஸிங் விலை என்னவென்று ஈசியாகக் கண்டுபிடிக்கலாம். எனவேதான் மாதக் கடைசியில் வாங்குகின்றேன்.

*டிசம்பர் 2014 வரை பதினைந்து வருடங்களுக்கு.

*வாங்கும்போது புரோக்கரேஜ், பல்வேறு வரிகளுக்காக 2% செலவீனங்களையும் கூட்டியுள்ளேன்.

*ஜனவரி 31, 2000 அன்று முடிவு விலை 490.85. இத்துடன் 2% செலவீனங்களைக் கூட்டிய பிறகு, நம்மால் 9 பங்குகளை மட்டுமே வாங்க முடியும். அதற்கான மொத்தச் செலவு ரூ. 4506/- அப்படி வாங்கிய பிறகு மீதமுள்ள தொகை 494.00

*இந்த மீதித் தொகையினை அப்படியே வைத்திருந்து அடுத்த மாதம் 5000+494=5,494/-க்கு எவ்வளவு பங்குகள் வாங்க முடியுமென்று பார்ப்பேன். இதில் வரும் மீதத் தொகையினை அதற்கடுத்த மாத 5,000/-த்துடன் சேர்த்துக் கொள்வேன்.

*எவ்வெப்போதெல்லாம் டிவிடெண்ட் (ஈவுத்தொகை) கொடுக்கிறார்களோ, அதனையும் 5,000/-த்துடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

*ஸ்ப்லிட் மற்றும் போனஸ் பங்குகளும் இந்தக் கணக்கிலடங்கும்.

*டி‌வி‌எஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 2000 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் NSE-யில் வர்த்தமாகவில்லை போலும். அப்போதுதான் டி‌வி‌எஸ் நிறுவனம், சுஸுகி நிறுவனத்திடமிருந்து பிரிந்து வந்தது. அந்த 2 மாதம் x 5,000/-த்தினை ஆகஸ்ட் மாதம் உபயோகித்துள்ளேன்.

*கண்டிப்பாக இது ஓர் ஆய்வுக் கட்டுரைதான். டி‌வி‌எஸ்மோட்டார் பங்கினை வாங்கப் பரிதுரைக்கவில்லை. பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க்குகள் நிறைந்தது.

SIPping Stocks TVSMOTOR

என்னங்க? இதைப் பார்த்தவுடன், “நா……. ன்…. மெரசலாயிட்டேன்….”னு பாடத் தோணுதா? 2000-த்திலிருந்து 2014 வரை எத்தனை பாராளுமன்றத் தேர்தல்கள்? எத்தனை மாநிலத் தேர்தல்கள்? எத்தனை ஆட்சி மாற்றங்கள்? குரூட் ஆயில், டாலர், யூரோ, மெட்டல் விலைகளில் எத்தனையெத்தனை மாற்றங்கள்? ஆனால், இந்த SIP முறை முதலீட்டின் பலன்களை/பலங்களைப் பாருங்கள்!

இந்த மாதிரியான ஒரு கட்டுப்பாடான முதலீட்டாளராக உருவாக முயற்சி செய்யுங்கள்! புதியவர்களுக்கு டிரேடிங் வேண்டாமே!

அடுத்த கட்டுரையில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் SIP முதலீடு எவ்வாறு இருந்திருக்குமென்று பார்க்கலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

 

 

 

 

வாவ்! சைண்டிஸ்ட்டா? டிரேடரா?


டிரேடிங் ரூம்!

 

பி.கு: நெசமாலுமே என்னோடதில்லை. இந்த போட்டோவுல இருக்குறது நானுமில்லை. அவங்க ரெண்டு பேர் தலையிலும் வழுக்கையேயில்லையே! ஹி..ஹி…ஹி…ஹீ…! (வாயில குச்சி இருந்தாத்தான் …… ராஜூ பாய்)

Trading 4 living pic 03

கூட்டு வட்டி


ஒரேயொரு படம் மட்டுமே!

Albert Einstein compound interest

2014-இன் வெற்றிகளும், சறுக்கல்களும்!


ஹலோ!

2015 ஆண்டிற்கான எனது புத்தாண்டு வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது வழக்கமான, வருடாந்திர பெர்ஃபார்மன்ஸ் அறிக்கையினைக் கீழே கொடுத்துள்ளேன்.

டிஸ்கி: இது வாங்க அல்லது/மற்றும் விற்பதற்கான பங்குப் பரிந்துரை அல்ல. நான் ஒரு பதிவு பெற்ற அனாலிஸ்ட்டும் அல்ல. ஒரு சில பங்குகள் விடுபட்டிருக்கலாம். இது 2013 டிசம்பர் 31 மற்றும் 2014 டிசம்பர் 31-ஆந்தேதிகளில் வர்த்தகம் நடைபெற்ற பங்குகளின் அடிப்படையில் மட்டுமே உருவான பட்டியல் இது.

இலாபமீட்டிய பங்குகளின் ஒரு பகுதி மற்றும் வீழ்ச்சியடைந்த பங்குகளின் ஒரு பகுதி பட்டியல்.

2014 Gainers 012014 Gainers 022014 Gainers 032014 Gainers 042014 Gainers 052014 Gainers 62014 Gainers 82014 Gainers 8