ஃபோகஸ் … ஃபோகஸ் …. ஆன் லீடர்ஸ்


இதுல என்ன சொல்றாங்கன்னா….

கெடைக்கப்போற பலாக்காய விட கையில இருக்குற கலாக்காயே மேல்! இதுல ரொம்ப முக்கியமான சொல் : லீடர்ஸ்!

செக்டார் லீடர்ஸ்ல இதுவரைக்கும் SIP ஆரம்பிச்சிருக்கீங்களா? என்ன நான் சொல்றது?

Trading card 395 buy more of what you have LEADERS

தை அமாவாசையில் …..


2015 01 20 ATH index nifty sensex Bears 05 sad

மேலே… அதுக்கும் மேலே…. அதுக்கும் மேலே…


ஹலோ!

என்னங்க! மார்க்கெட் “அதுக்கும் மேலே… அதுக்கும் மேலே”ன்னு சொல்லிக்கிட்டே இன்னமும் மேலே போய்க்கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது, “அடடா! இது வரைக்கும் விட்டுட்டோமே! இப்பத்தான், இதுலத்தான், பக்கத்து வீட்டுக்காரன் சொத்தையெல்லாம் வித்தாவது நம்ம முதலீடு செஞ்சிட்டு, நிறைய (கொழுத்த) இலாபம் பார்க்கலாமே!”ன்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்களா? அப்படியே, நனைச்சிக் காய வையுங்க; ஷேர் மார்க்கெட்டுல இந்த மாதிரி சமயத்துலதான் புதுசா முதலீடு செய்ய வர்றவங்க வந்து மாட்டிக்கிட்டு, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்களது முதலீட்டினை இலாபமாகக் கொடுத்து விடுகிறார்கள்.

புரியலைங்களா? கீழேயிருக்கும் கேள்விக்கு உங்களின் பதில் என்ன? அதுவும் நீங்க இப்போதான் பங்குச்சந்தை முதலீட்டுக்குப் புதியவரென்றால், கண்டிப்பா இந்தக் கேள்விக்கு நீங்க பதில் சொல்லோணும்! சரியா?

இவ்ளோ நாள் (வருஷம்) ஏறாத பங்குச்சந்தையா இப்போது ஏற்றத்திலிருக்கின்றது?

“அச்சம் தவிர்! உச்சம் தொடு!” என்பது போல காளைகளின் ஆதிக்கம் இப்போது 8500-8600 புள்ளிகளில் நிஃப்டியினைக் கொண்டு சென்றுள்ளது. கீழேயிருக்கும் படத்தினைப் பாருங்கள்!

Nifty movements

இத்தனை வருடங்களும் பங்குச்சந்தை உயிரோட்டமாக இருந்து கொண்டுதானிருந்திருக்கின்றது. (ஷ்…அப்பாடா! எப்படியோ இந்த ஒரு நீளமான வார்த்தையை எழுதி விட்டேன்) ஆனால், அது நமது கவனத்தினை ஈர்க்கவில்லையே! தற்போது நிஃப்டி 8600-ஐத் தொட்டுள்ள நிலையில்தான் நம்மில் பலரும் பங்குச்சந்தையினைப் பார்க்க ஆரம்பித்துள்ளோம். அதுவும், அக்கம் பக்கத்தினர் சொல்லக் கேட்டோ, அல்லது அலுவலக நண்பர்கள் சொல்லக் கேட்டோ, அதுவுமில்லாமல் வேறு வழிகளில் பார்த்தோ, கேட்டோ “எப்படியாவது இதிலே முதலீடு செய்யவேண்டும்; சீக்கிரமே லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் ஆகவேண்டும்” என்கின்ற எண்ணம் உங்களுக்கு வந்துள்ளதா? அதுவும் “கமாடிட்டி, கரன்சி (ஃபோரேக்ஸ் – Forex) மார்க்கெட்டில் அன்றாடம் ஒரு ஐந்நூறு அல்லது ஆயிரம் பார்க்க முடியுமாமே” என்று உங்கள் கைகள் நம,நமவென்று அரிக்கின்றனவா? “டிரேடிங்ல, அதுவும் ஆப்ஷன் டிரேடிங்ல கொஞ்சமா போட்டு, பெருசா பாக்கலாமாமே”ன்னு மனசு பட்டாம்பூச்சி மாதிரிப் பறந்துக்கிட்டேயிருக்கா?

அப்படின்னா….

Stop sign 01

அதுவும், புதுசா, நவீனமா, ஹாபி போல டிரேடிங் பண்ணலாமுன்னு ஐடியா உங்களுக்கிருக்குதா? அப்படியிருந்தா, இந்த மாதிரி எண்ணத்தையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு சும்மா, கம்னு இருங்க! ஆமாங்க! இது ரொம்ப ஆபத்தானது; அதனாலதான் சொல்றேன் “சும்மா, கம்னு இருங்க”!

சரி! வேற எப்படிங்க பங்குச்சந்தையில நான் “தொபூக்கடீர்”னு குதிக்கிறது?

பேஸ்ஸிவ் இன்வெஸ்டிங்க் ஸ்டைல் (Passive Investing Style)னு ஒண்ணு இருக்குதுங்க. அதுதாங்க நம்ம அப்பா, அம்மா போஸ்ட் ஆஃபிஸ்ல கட்டிட்டு வந்த ஆர் டி (RD) மாதிரி. அதாவது அதிகமா (ரூம் போட்டு) யோசிக்கத் தேவையில்லை; மாசம் பொறந்தா பணம் கட்டிடணும்.இதுக்கு இன்னொரு, நவீன காலப் பேருதான் SIP-எஸ் ஐ பி (சிஸ்டெமெடிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான்)

அதே மாதிரிதான் மாசா, மாசம் நம்மால முடிஞ்சத குறிப்பிட்டா நல்ல கம்பெனிகளா வாங்கிப் போட்டுக்கிட்டேயிருக்கணும். இன்னைக்கு வாங்கிட்டு நாளைக்கே 30 – 40 பர்சண்ட் எதிர்பார்க்கக்கூடாது. அதுவும் சும்மா ஒரு வருசத்துக்கு, இரண்டு வருசத்துக்கு வாங்கிட்டு நிறுத்திடக்கூடாது.

“அப்படின்னா? எவ்ளோ நாளைக்கு வாங்கணும்? மூணு வருஷம்?”

“அதுக்கும் மேலே….!”

“அஞ்சு வருஷம்?”

“அதுக்கும் மேலே…..!

” பத்து வருஷம்? ”

அதுக்கும் மேலே….!”

பதினஞ்சி வருஷம்?

“ஆமாம்!”

ஓ மை காட்! பதினஞ்சி வருசத்துக்கு மாசா, மாசம் வாங்கணுமா?

ஆமாங்க! அதுதாங்க டிசிப்ளின்! அப்புறம் கம்பெனி தர்ற டிவிடெண்ட்டை வைத்தும் அப்படியே அதே பங்கினை வாங்கிக்கோணும்.

உதாரணம்

டி‌வி‌எஸ் மோட்டார் (இது முன்னர் டி‌வி‌எஸ்-சுஸுகி என்றிருந்தது)

*2000 ஜனவரியிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) -திற்கு வாங்கினால் எப்படியிருக்கிறதென்று பார்க்கலாம். நான் கணக்கீடு செய்வதை சுலபமாக்க மாதக் கடைசியில் வாங்குவதாக அமைத்துள்ளேன். ஏனெனில், அமிப்ரோக்கரில் மாதக் கடைசியில் க்ளோஸிங் விலை என்னவென்று ஈசியாகக் கண்டுபிடிக்கலாம். எனவேதான் மாதக் கடைசியில் வாங்குகின்றேன்.

*டிசம்பர் 2014 வரை பதினைந்து வருடங்களுக்கு.

*வாங்கும்போது புரோக்கரேஜ், பல்வேறு வரிகளுக்காக 2% செலவீனங்களையும் கூட்டியுள்ளேன்.

*ஜனவரி 31, 2000 அன்று முடிவு விலை 490.85. இத்துடன் 2% செலவீனங்களைக் கூட்டிய பிறகு, நம்மால் 9 பங்குகளை மட்டுமே வாங்க முடியும். அதற்கான மொத்தச் செலவு ரூ. 4506/- அப்படி வாங்கிய பிறகு மீதமுள்ள தொகை 494.00

*இந்த மீதித் தொகையினை அப்படியே வைத்திருந்து அடுத்த மாதம் 5000+494=5,494/-க்கு எவ்வளவு பங்குகள் வாங்க முடியுமென்று பார்ப்பேன். இதில் வரும் மீதத் தொகையினை அதற்கடுத்த மாத 5,000/-த்துடன் சேர்த்துக் கொள்வேன்.

*எவ்வெப்போதெல்லாம் டிவிடெண்ட் (ஈவுத்தொகை) கொடுக்கிறார்களோ, அதனையும் 5,000/-த்துடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

*ஸ்ப்லிட் மற்றும் போனஸ் பங்குகளும் இந்தக் கணக்கிலடங்கும்.

*டி‌வி‌எஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 2000 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் NSE-யில் வர்த்தமாகவில்லை போலும். அப்போதுதான் டி‌வி‌எஸ் நிறுவனம், சுஸுகி நிறுவனத்திடமிருந்து பிரிந்து வந்தது. அந்த 2 மாதம் x 5,000/-த்தினை ஆகஸ்ட் மாதம் உபயோகித்துள்ளேன்.

*கண்டிப்பாக இது ஓர் ஆய்வுக் கட்டுரைதான். டி‌வி‌எஸ்மோட்டார் பங்கினை வாங்கப் பரிதுரைக்கவில்லை. பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க்குகள் நிறைந்தது.

SIPping Stocks TVSMOTOR

என்னங்க? இதைப் பார்த்தவுடன், “நா……. ன்…. மெரசலாயிட்டேன்….”னு பாடத் தோணுதா? 2000-த்திலிருந்து 2014 வரை எத்தனை பாராளுமன்றத் தேர்தல்கள்? எத்தனை மாநிலத் தேர்தல்கள்? எத்தனை ஆட்சி மாற்றங்கள்? குரூட் ஆயில், டாலர், யூரோ, மெட்டல் விலைகளில் எத்தனையெத்தனை மாற்றங்கள்? ஆனால், இந்த SIP முறை முதலீட்டின் பலன்களை/பலங்களைப் பாருங்கள்!

இந்த மாதிரியான ஒரு கட்டுப்பாடான முதலீட்டாளராக உருவாக முயற்சி செய்யுங்கள்! புதியவர்களுக்கு டிரேடிங் வேண்டாமே!

அடுத்த கட்டுரையில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் SIP முதலீடு எவ்வாறு இருந்திருக்குமென்று பார்க்கலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

 

 

 

 

வாவ்! சைண்டிஸ்ட்டா? டிரேடரா?


டிரேடிங் ரூம்!

 

பி.கு: நெசமாலுமே என்னோடதில்லை. இந்த போட்டோவுல இருக்குறது நானுமில்லை. அவங்க ரெண்டு பேர் தலையிலும் வழுக்கையேயில்லையே! ஹி..ஹி…ஹி…ஹீ…! (வாயில குச்சி இருந்தாத்தான் …… ராஜூ பாய்)

Trading 4 living pic 03

2013-இன் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் எப்படி?


இந்தப் பதிவிற்கு நண்பர் திரு பிரசாந்த் கிருஷ்ணா அவர்களின் ஆராய்ச்சிதான் காரணம். Thanks to Prashanth Krishna, Founder – Yahoo Technical inverstor Group

2012 டூ 2013-இன் டாப் பத்து மற்றும் பாட்டம் பத்து ஸ்டாக்குகளிலே, ஒவ்வொன்றிலும் ரூ.10,000/- என்று (2014 ஆரம்பத்தில்) முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டு, மொத்தம் ரூ. 2,00,000/- போர்ட்ஃபோலியோ உருவாக்கியிருந்தால், அதனுடைய இலாப, நஷ்டக் கணக்கு எப்படியிருக்கும்?

டாப் பத்து பங்குகளில் ஒரு லட்சம் முதலீடு, 50% இலாபமீட்டியுள்ளது.

Prashanth 1A 2013 best n worst 10 stocks growth in 2014 end

 

 

 

 

 

 

 

 

 

பாட்டம் பத்து பங்குகளின் முதலீடு 20% இலாபமீட்டியுள்ளது.

Prashanth 1B 2013 best n worst 10 stocks growth in 2014 end

2013 – ஒரு டஜன் வழுக்கல்கள்!


ஹலோ!

முந்தைய பதிவுகளிலே (2013 – ……) எக்ஸெல் ரிபோர்ட்டில் பார்த்த பங்குகளில் (2013 – இல்) மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த 12 பங்குகளின் வரைபடங்கள்!

இந்தப் படங்களைப் பார்த்தால், ஆவரேஜிங் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

2013 1a PRAKASHCON 2013 1b NET4 2013 1c CHROMATIC 2013 1d COREEDUTEC2013 1e OMNITECH 2013 1f DHANUS 2013 1g MMTC 2013 1h DRDATSONS 2013 1i AQUA 2013 1j MICROTECH 2013 1k VISESHINFO 2013 1l VKSPL

நாணயம் விகடன் டாட் காமில் EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன்


ஹலோ!
நாணயம் விகடன் டாட் காமில் எனது EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் அண்ட் ஷோல்டர் கட்டுரை.

புதியவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள், கட்டுரையின் இறுதிப்பகுதியிலே கேட்கப்பட்டிருக்கும் ரிஸ்க் எவ்வளவு? ரிவார்ட் எவ்வளவு? ரிஸ்க்:ரிவார்ட் ரேஷியோ எவ்வளவு? என்றெல்லாம் அங்கேயே (கீழ்ப்பகுதியிலிருக்கும் “உங்கள் கருத்து” என்ற இடத்திலே) எழுதவும்.

மேலும் அனுபவசாலிகள் இந்தக் கட்டுரையின் நிறை, குறைகளையும் அங்கேயே எழுதவும். அப்போதுதான் என்னால் இனி வரும் கட்டுரைகளிலே மேலும் பல பயனுள்ள தகவல்களை எழுத உதவிகரமாக இருக்கும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

செஸ், கிரிக்கெட் மற்றும் காளையும் கரடியும் 2013


ஹலோ!

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் செஸ் சாம்பியன்ஷிப் 3 மற்றும் 4-ஆம் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்துள்ளன. டி‌வி வர்ணனையாளர்கள் கம்ப்யூட்டர்களை வைத்து சொல்லும் ஒரு சில மூவ்களையே ஒரு சில சமயங்களில் இவர்கள் (ஆனந்தும், கார்ல்சனும்) ஆடினாலும், பல சமயங்களில் புது வித வேரியேஷன்களை ஆடி நம்மைப் பரவசப் படுத்துகிறார்கள். மூன்றாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்பு நிறக்காய்களுடன் விளையாடியபோது, “இப்போது ரெபெட்டிவ் மூவ் (மூன்று முறை ஒரே மாதிரியான நகர்த்துதல்கள்) ஆடி டிரா செய்யும் நிலைதான் இருக்கிறது” என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீண்ட யோசனைக்குப் பிறகு கார்ல்சனின் ராணியை h1 கட்டத்திற்கு நகர்த்தி ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார். நான்காவது ஆட்டத்திலே ஒன்டே கிரிக்கெட் போன்றதொரு ஆட்டத்தினை ஆடினார்கள். அத்தனை சுவாரஸ்யம்!

யார் சொன்னது செஸ் ஒரு விறுவிறுப்பில்லாத ஆட்டமென்று? விஷி ஆனந்த் வெற்றியடைய நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்!

Vishy with mom

அடுத்ததாக நமது மண்ணின் மைந்தர் இன்னொருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் நமது சச்சின்! அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள்! அவரும் ஒரு சரித்திர நாயகன்தான்! ஆனந்த் மற்றும் சச்சின் ஆகியோரின் கால கட்டதில்தான் நாமும் இருக்கின்றோம் என்பதில் பெருமைப்படுகின்றேன்!

SRT200 2 SRT200 1

அடுத்ததாக நமது பாண்டிச்சேரி “காளையும் கரடியும் 2013” நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற ஞாயிறு வெளிவந்த நாணயம் விகடனிலும் மறுபடியும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கின்றேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் பணம் செலுத்தி பதிவும் செய்து கொண்டுள்ளனர்.

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

நாணயம் டாட் காமில் எனது ரிலையன்ஸ் அலசல்!


ஹலோ!

படித்துப் பார்த்து, எவ்வளவு தேறுமென்று அங்கேயே மார்க் போடுங்களேன்!

எது நன்றாக இருந்தது; எது நன்றாக இல்லை என்றெல்லாம் கொஞ்சம் சொன்னீர்களேயானால், அடுத்து வரும் கட்டுரைகளுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க இங்கே கிளிக்கடவும்

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: பேட்டர்ன்களும் டிரேடுகளும் YESBANK


ஹலோ!

YESBANK-இல் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு தலைகீழ் ஹெட் & ஷோல்டர் (I HnS) பேட்டர்னை கவனித்து வருகிறேன்.

இதிலே கவனிக்க வேண்டியவை:

1. இருக்கும் டிரெண்டோ கீழ்த்திசையிலே.

2. இந்த அமைப்போ ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸல் பேட்டர்ன்.

3. சோ, BUY சிக்னல் கன்ஃபர்மேஷன் கிடைக்கும் போது, தகுந்த stoploss வைத்து லாங் பொசிஷன் எடுக்கவேண்டும்.

4. இந்த பேட்டர்ன் ஃபெய்லியர் ஆகி, டிரெண்டின் திசையிலேயே தனது பயணத்தைத் தொடருமானால், நமது பொசிஷனை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மேலும் பல விபரங்கள் படங்களிலேயே!

படம் 1: YESBANK-இல் தெரியும் ஒரு டௌன்ட்ரெண்ட்
படம் 1: YESBANK-இல் தெரியும் ஒரு டௌன்ட்ரெண்ட்

1. 17/05/13 அன்றைய ஹை 517.70 என்ற லெவலிலிருந்து 28/08/13 அன்றைய லோ 225.85 என்ற லெவல் வரை கீழே இறங்கியுள்ளது. சுமார் மூன்று மாதம் 10 நாட்களில் விலையானது சுமார் 43% வரை கீழே இறங்கியுள்ளது. படத்திலே தெரியும் படத்தினிலே குறிப்பிடப்பட்டுள்ள லோயர் லோ (LL – Lower Low), லோயர் ஹை (LH – Lower High)-க்களும் தற்போதிருக்கும் டௌன்ட்ரெண்டினை உறுதி படுத்துகின்றன.

 

2. இந்த இரண்டாவது படத்திலே முந்தைய படத்திலிருக்கும் குறிப்புகளையெல்லாம் நீக்கிவிட்டு, தற்போது ஒரு தலைகீழ் ஹெட் & ஷோல்டர் (I-H&S: Inverted Head & Shoulders) அமைப்பினைக் குறித்துள்ளேன். இதிலே LS = லெஃப்ட் ஷோல்டர்; RS= ரைட் ஷோல்டர். நெக்லைன் என்பது தலைப் பகுதி ஷோல்டர்களுடன் சேரும் இடங்களை இணைத்து வரையப்பட்டுள்ள கழுத்துப்பகுதியாகும்.

படம் 2: தலைகீழ் ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன் - Inverted Head & Shoulder pattern (I HnS)

படம் 2: தலைகீழ் ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன் – Inverted Head & Shoulder pattern (I HnS)

 இந்த சார்ட் பேட்டர்னிலே, நெக்லைன்  313-318 என்ற லெவல்களிலேயிருந்து, ஒரு ரெஸிஸ்டன்ஸாக இருக்கின்றது. நமக்குத் தேவை என்ன தெரியுமா? இந்த ரெஸிஸ்டன்ஸ் உடை(தை)பட்டு, விலை மேலே செல்ல வேண்டும். அதுவும் மிகுந்த வால்யுமுடன் இந்த ரெஸிஸ்டன்ஸ் உடைக்கப்பட வேண்டும். ஒரு டிரேட் சும்மா எடுத்து விடலாமா? கூடாது.3. “ரிஸ்க் எவ்வளவு? ரிவார்ட் எவ்வளவு?” என்று கணக்கிட வேண்டும்: சப்போஸ் நெக்லைன் உடைபட்டு விலை மேலே சென்றால், எதுவரை செல்லும்? எங்கே ஸ்டாப்லாஸ் வைப்பது? டார்கெட் கணக்கிடும் முறை பற்றியும் இப்போது பார்க்கலாம்.

முதலில் டார்கெட் சோன் (target zone) கணக்கிடுவோம். அதாவது, எத்தனை புள்ளிகள் வரை மேலே உயர வாய்ப்பிருக்கிறதென்று பார்ப்போம். தலைப்பகுதி அமைப்பின் லோ 225.85. இதிலிருந்து ஒரு செங்குத்துக் கோட்டினை மேல் நோக்கி வரைந்தால், அது 315 என்ற லெவலிலே நெக்லைனைத் தொடுகிறது. இந்த இரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாடு = 315-225 = 90 புள்ளிகள். ஆக, விலையானது இந்த நெக்லைனை உடைத்துக்கொண்டு மேலே செல்ல ஆரம்பித்தால். அந்த பிரேக்அவுட் இடத்திலிருந்து 90 புள்ளிகள் வரை மேலே செல்ல வாய்ப்பிருக்கும் அமைப்பாகக் கருதப்படுகிறது.

சரிங்க! இந்த 90 புள்ளிகள் இலாபத்திற்கு நாம் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும்? நெக்லைன் பிரேக்அவுட் ஆகுமிடத்திலிருந்து, ரைட் ஷோல்டரின் லோ வரைக்குமான வேறுபாடுதான் நமது ரிஸ்க்கின் அளவு. ரைட் ஷோல்டரின் லோ 274.20 ஆகும் நெக்லைன் பிரேக்அவுட் ஆகுமிடமாக நாம் 315 என்ற லெவலையே எடுத்துக் கொள்ளலாம். சோ, ரிஸ்க் = 315 – 274 = 41 புள்ளிகள்.

ரிஸ்க்:ரிவார்ட் = 41:90 = சுமார் 1: 2-1/4 (அதாவது நாமெடுக்கும் ஒவ்வொரு புள்ளி ரிஸ்க்கிற்கும் நமக்கு சுமார் இரண்டே கால் புள்ளிகள் வரை இலாபம் கிடைக்கக்கூடிய அமைப்பு. இது RR ரேஷியோ நமக்குச் சரிப்பட்டு வந்தால் மட்டுமே டிரேட் எடுக்க வேண்டும். இல்லையென்றால், சும்மா வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். எப்படி கட்டுப்பாடான டிரேடராக உருவாக சார்ட் பேட்டர்ன்கள் உதவி புரிகின்றன என்பதனைப் பாருங்கள்)

டார்கெட் கணக்கிடும் முறை: இது பிரேக்அவுட் லெவலுடன், டார்கெட் சோன், என்று கணக்கிட்டுள்ளோமே 90 புள்ளிகள் அதைக் கூட்டிக் கொள்ளவேண்டும். அதாவது டார்கெட் = 315 + 90 = 405 லெவல்கள் வரையிலும் செல்லக்கூடிய அமைப்பிது.

ஸ்டாப்லாஸ்: ரைட் ஷோல்டரின் லோ-வான 274.20-க்கும் கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.

4. இருக்குது.. ஆனால் இல்லை!: 18/09/2013 அன்று விலையானது நாம் 315 என்ற கணக்கிட்டுள்ள நெக்லைன் பிரேக்அவுட் லெவலை உடைத்துக்கொண்டு 319.40 வரை மேலே சென்ற பங்கானது, 315.85 என்ற அளவிலே முடிவடைந்தது.  வால்யூம் அப்படியொன்றும் பிரமாதமாக இருந்துவிடவில்லை. எனவே, சும்மாயிருப்பதே மேல் என்று டிரேட் எடுக்காமல் இருந்துவிட வேண்டும். அடுத்த நாள் கேப் அப் ஓபன் ஆகி 347.40-இல் ஆரம்பித்த விலை நமக்கொரு என்ட்ரி சான்ஸே கொடுக்கவில்லை. ஏனெனில், நமது பிரேக்அவுட் சோன் 315 என்ற லெவல்கள். விலையிருப்பதோ 347 மற்றும் அதற்கும் மேலே. ஆக, நமது ரிஸ்க்கான 41 புள்ளிகளுடன், இப்போது மேலும் 32 (347-315 = 32) புள்ளிகள் சேர்ந்து 73-ஆக உயர்கிறது. ஆக 73 புள்ளிகள். ஆக இந்தளவு அதிகரிக்கப்பட்ட ரிஸ்க்கில் டிரேட் என்ட்ரி செய்யாமலிருப்பதே உத்தமம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! “அடடா! நேற்றே வால்யூம் இல்லையென்று டிரேட் எடுக்காமல் விட்டோமே! எடுத்திருந்தால் இன்றே கொஞ்சம் இலாபம் பார்த்திருக்கலாமே” என்று மனம் அலை பாயத்தான் செய்யும்: குறைபடத்தான் செய்யும். ஆனால், அதற்காக நாம் தப்பும், தவறுமான டிரேடுகளை எடுக்கக்கூடாது. மார்க்கெட்டில் பொறுமை மிக அவசியம். மார்க்கெட் என்றுமிருக்கும். வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அந்தத் தருணங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

படம் 3: கேப் அப் ஓபனில் நோ சான்ஸ்! ஆனால், ரீ-டெஸ்ட் நடக்குதுங்க!

படம் 3: கேப் அப் ஓபனில் நோ சான்ஸ்! ஆனால், ரீ-டெஸ்ட் நடக்குதுங்க!

 

5. மறு வாய்ப்பு: முன்னர் ரெஸிஸ்டன்சாக இருந்த நெக்லைன் தற்போது (27/09) சப்போர்ட்டாக மாறும் வாய்ப்பிருப்பதைக் கவனியுங்கள். டெக்னிக்கல் அனாலிசிஸில் இதனை ரீ-டெஸ்ட் என்று சொல்வார்கள். முந்தைய ரெஸிஸ்டன்ஸை சப்போர்ட்டாக எடுதுக்கொள்ள சந்தை முயற்சி செய்கிறது. இது சந்தை நமக்களிக்கும் இன்னொரு வாய்ப்பாக நாம் பார்க்கவேண்டும். விலையானது 302 என்ற லோ வரை வந்துள்ளது. இங்கேயிருந்து மறுபடியும் 315 என்ற நெக்லைன் லெவலினை உடைத்துக் கொண்டு மேலே சென்றால் நாம் முன்னர் சொன்ன ஸ்டாப்லாஸ் லெவல் வைத்து பங்கினை வாங்கலாம். சப்போஸ், நமது ஸ்டாப்லாஸ் லெவலான 274-க்கும் கீழே சென்று விட்டால், இந்த அமைப்பினை, தோல்வியடைந்த அமைப்பாகக் கருதி (Pattern failure – பேட்டர்ன் ஃபெய்லியர்) நாம் முன்னர் இருந்துவரும் டௌன்டிரெண்டின் திசையிலேயே டிரேட் எடுக்கக் வேண்டும். 

6. தற்போதைய நிலவரம் (4/10/2013):  iஇதுவரையிலும் நாம் பார்த்துக் கொண்டிருந்தது 27/9/2013 வரையிலான நிலவரத்தினை மட்டுமே. 4/10/2013 (கடந்த வார) முடிவு வரையினிலே, விலை நெக்லைன் சப்போர்ட்டுக்குக் கீழே வர்த்தகமாகி, மறுபடியும், அதன் மேலேயே முடிந்துள்ளது. ஸ்டாப்லாஸ்-உம் அடிபடவில்லை. எனவே, தற்போது BUY நிலையிலுள்ளது. (நெக்லைனை வலது பக்கமாகக் கொஞ்சம் நீட்டி வரைந்து பார்த்தால், விலை நெக்லைனுக்கு மேலே முடிந்துள்ளதால், க்ளோஸிங் விலையியான 315-இல் BUY பொசிஷன் எடுத்துள்ளோம்) 

படம் 4: YESBANK தற்போதைய (4/10) நிலவரம்

படம் 4: YESBANK தற்போதைய (4/10) நிலவரம்

 

ஸ்டாப்லாஸ், ரிஸ்க், ரிவார்ட் எல்லாம் என்னன்னு புரியுதுங்களா? என்னது? புரியலையா? “நான் ரொம்ப ஷாக் ஆயிட்டேன்!” மறுபடியும் இந்தக் கட்டுரையை ரண்டு, மூணு தபா படிச்சிப் பாருங்க! புரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம்தான், டிரேட் எடுக்கவேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்திலேயே இந்தக் கட்டுரையானது “படம் வரைந்து, பாகங்களைக் குறி” என்று 15மார்க் கொஸ்டீன் போல வடிவமைத்துள்ளேன்.

இன்னமும் புரியலைன்னா………….. எனக்கொரு லைன் பதில் எழுதுங்க! சரியா?

அன்புடன்,

பாபு கோதண்டராமன்