#TC2013: கட்டணச்சலுகை


ஹலோ!

கட்டணச் சலுகை விபரங்கள் பற்றி திரு. DJ (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) மிகவும் விபரமாகக் கூறியுள்ளார். ஒரு நபருக்கு ரூ. 12,000/- என்பதை, நமது காளையும் கரடியும் வாசகர்களுக்காக, 5 நபர்களுக்கு ரூ.50,000/- என்ற செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் இருக்கும் ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால், இந்த ஐவரும் ஒரே சமயத்தில் பதிவு செய்தால்தான் இந்தச் சலுகை கிடைக்குமென்று கூறியுள்ளார்.

எனவே, விருப்பமுள்ளவர்கள், என்னை babukothandaraman@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டால், மேற்படி பதிவிற்கான நாளை ஒருங்கிணைத்து, அனைவரும் ஒன்றாகப் பதிவு செய்து, இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அன்புடன்

பாபு கோதண்டராமன்

டிரேடர்ஸ் கார்னிவல் 2013, புனே

நாள்: ஆகஸ்ட் 15, 16 & 17

இடம்: Marriott Hotels & Resorts, Pune.

கட்டணம்: ரூ.12,000/- (தங்குமிடம் மற்றும் உணவு, தேநீர் சிற்றுண்டிகள் உட்பட)

#TC2013, Pune: நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!


டிரேடர்ஸ் கார்னிவல் 2013, புனே (கிளிக், கிளிக், கிளிக்குங்க!)

நாள்: ஆகஸ்ட் 15, 16 & 17

இடம்: Marriott Hotels & Resorts, Pune.

கட்டணம்: ரூ.12,000/- (தங்குமிடம் மற்றும் உணவு, தேநீர் சிற்றுண்டிகள் உட்பட)

இந்த மூன்று நாட்களிலும் பல்வேறு நிபுணர்களும் அவரவர்களுடைய டெக்னிக்கல் டிரேடிங் முறைகள், டிரேடிங் ஸ்ட்ராடஜிக்கள், டிரேட் மானேஜ்மென்ட் திட்டங்கள், ஃப்யூச்சர்ஸ்&ஆப்ஷன்ஸ் (F&O) வணிக முறைகள், Neely எலியட் வேவ் தியரி பற்றியெல்லாம் விளக்கிக் கூறவிருக்கிறார்கள். இரவு 9, 10 மணி வரையிலும் கலந்துரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த ரெஸிடென்ஷியல் ப்ரோக்ராம்.

இந்த மூன்று நாள் பயிற்சியில் கலந்து கொள்வோருக்காக இருக்கும் சலுகைகள்:

1. முதலில் Traderjini என்ற discount broker-இடமிருந்து ரூ. 2000/- மதிப்புக்கான brokearage இலவசம்.
2. மேலுமிரண்டு சலுகைகளை, Global Data Feeds Limited,Mumbai என்ற ஸ்பான்சர் கொடுக்கிறார்கள். அவர்களுடைய datafeed-க்கு வருடாந்திர சந்தாத்தொகையிலிருந்து. ரூ. 11,800/ வரையிலும் கொடுக்கும் சலுகை மற்றும்

3. அமிப்ரோகர் (Amibroker) வாங்கினால், ரூ. 2250-லிருந்து ரூ. 4492 வரையிலும் சலுகை கொடுக்கிறார்கள். கீழேயிருக்கும் அட்டவணைகளைப் பாருங்கள்.

 

nimbleDataPlusLite

nimbleDataPro

nimbleDataProPlus

Subscription Period

NSE F&O

MCX

F&O

+ MCX

NSE F&O

MCX

F&O

+ MCX

NSE F&O

MCX

F&O + MCX

GFDL Pricing

15950

19550

30175

21125

24725

38975

28750

32350

51925

Traders CarnivalParticipants

12375

14625

22950

16500

18750

29975

22470

24750

40125

Consumption Period

Need to consume the Procured License by 31st December’2013.

No. of Symbols that can be tracked simultaneously

5

5

10

200

200

400

200

200

400

Compatibility

AmiBroker, Metastock, AdvancedGET, NinjaTrader, Ensign, ELWave

AmiBroker

AmiBroker, Metastock, AdvancedGET, NinjaTrader, Ensign, ELWave

Additional Symbols

Rs. 100/- per 10 symbols per month per segment

Rs. 250/- per 50 symbols per month per segment

Rs. 250/- per 50 symbols per month per segment

Complimentary License for

2nd Computer

Free for Annual clients, Rs. 200/- pm per additional computer

Free for Annual clients, Rs. 200/- pm per additional computer

Free for Annual clients, Rs. 200/- pm per additional computer

IEOD Data after market hours

Free for Annual clients, Rs. 300/- pm per segment for others

FREE

FREE

அமிப்ரோகர் (amibroker) வாங்கினால், 

AmiBroker Pricing

Validity

Price (INR)

Traders Carnival

Pricing

Standard Edition

Lifetime

INR 15,000/-

INR 12,750/-

Professional Edition

Lifetime

INR 20,500/-

INR 17,425/-

AmiBroker Ultimate Pack Pro

Edition

Lifetime

INR 29,950/-

INR 25,458/-

“என்னங்க பாபு? அரைச்ச மாவையே அரைச்சிக்கிட்டிருக்கீங்க”ன்னு கேக்குறீங்களா? சோழியன் குடுமி சும்மா ஆடுங்களா? ஹி…ஹி… J

நம்முடைய blog நண்பர்களில் சிலர் என்னிடம் “இந்த 12,000/- ரூபாய் கட்டணம் ரொம்ப அதிகமாச்சுங்களே? ஒரே சமயத்துல இந்த அளவு செலவா? அப்புறம் பயணச் செலவுகளும் இருக்கே”ன்னு சொன்னாங்க! நாமதான் ஒரு copy, paste மெஷின் ஆச்சிங்களே! அதை அப்படியே நண்பர் திரு. DJ(#TC 2013 ஒருங்கிணைப்பாளர்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னதுதான் ரொம்ப நல்ல பதிலுங்க. “உங்க காளையும்கரடியும் blog-இலிருந்து யார், யார் கலந்து கொள்கிறார்களோ (என்னையும் சேர்த்துதான்), அவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணச் சலுகை கொடுக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

எவ்வளவு சலுகையென்பது நாம் எத்தனை பேர் சேர்கிறோம் என்பதைப் பொறுத்துதானிருக்கிறது.

Disclaimer: இதில் எனக்கு எந்தவொரு பண மற்றும் பொருள் ஆதாயமும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர் கணக்கிடும் சலுகை நாம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கிடைக்கும்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

#TC 2013 டிரேடர்ஸ் கார்னிவல், பூனா! Pune


ஹலோ!

ஆகஸ்ட் 15, 16 & 17 தேதிகளில் Pune-வில் நடைபெறவிருக்கும் டிரேடர்ஸ் கார்னிவல் பற்றிய லிங்க் இதோ!

என்ஜாய்!

பாபு கோதண்டராமன்

 

#TC2013 டிரேடர்ஸ் கார்னிவல், Pune


ஹலோ!

நீங்கள் ஓரளவு டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்தவரா? பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் அல்லது ஸ்விங்க் (swing) டிரேடிங் செய்து கொண்டிருக்கின்றீர்களா? உங்களது டிரேட்களை மேலும் எப்படி மேம்படுத்துவதென்று எண்ணமிருக்கிறதா? அல்லது எப்படி வர்த்தகம் செய்வது என்றே தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கின்றீர்களா? புதிய ஸ்ட்ராடஜி மற்றும் எண்ணங்களைக் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா?

இதில் ஏதேனும் ஒரு கேள்விக்காவது “ஆம்” என்று நீங்கள் பதில் சொல்லியிருந்தால், உங்களுடைய காலண்டரில் ஆகஸ்ட் மாதம் 15, 16 & 17 தேதிகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். “எட்றா வண்டிய! விட்ரா புனேவுக்கு (Pune)” என்று உங்கள் பயண அட்டவனையைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

ஆமாம்! #TC2013 புனே நகரத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்/ரிசார்ட்டில் நடைபெற இருக்கிறது. #TC2013=டிரேடர்ஸ் கார்னிவல் (Traders Carnival) 2013.

நாம் நமது வாழ்க்கையிலே, பல்வேறு வகையான வகுப்புகளில் பங்கேற்றிருப்போம். அவையனைத்தும் ஒரு இரண்டு மணி நேரமோ, அல்லது அரை நாளோ, அல்லது காலை சென்று மாலையில் வீடு திரும்பி வருவதாகவே அமைந்திருக்கும்.

இந்த டிரேடர்ஸ் கார்னிவல் இதிலிருந்தெல்லாம் மாறுபட்டது. எப்படியெனில், இது residential program (ரெஸிடென்ஷியல் ப்ரோக்ராம்) எனப்பட்டு, இந்த மூன்று நாட்களும் பயிற்சி நடைபெறும் இடத்திலேயே தங்கி, பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி, நமக்கொரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் வகையிலே அமைக்கப் பெற்றிருக்கின்றது. பயிற்சியாளர்களைப் பற்றிச் சொல்வதென்றால், அவர்களெல்லாம் நம்மைப் போன்ற டிரேடர்கள்தான்; முதலீட்டாளர்கள்தான். அவர்களின் எண்ணங்களை, வெற்றி பெற்ற ஸ்ட்ராடஜிக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த #TC2013 இரண்டாவது முறையாக, அகில இந்திய அளவிலே நடைபெறும் நிகழ்ச்சியாகும். இதற்கு முன், முதல் முறையாக #TC2012 பெங்களூருவில் கடந்த 2012 அக்டோபரில் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. அதைப் பற்றிய செய்திகளுக்கு இங்கே கிளிக்கிடவும். சென்ற வருடத்தைய #TC2012-இல் அறிமுகப் படுத்தப்பட்ட 3x5EMA க்ராஸ்ஓவர் சிஸ்டம் மற்றும் 34EMA ரிஜக்ஷன் டிரேடிங் சிஸ்டம் முதலியன, கடந்த ஒரு வருடமாக நல்ல இலாபத்தை அளித்து வந்ததை பல்வேறு டிரேடர்களும் உணர்ந்துள்ளனர்.

#TC2013 நிகழ்ச்சி நிரல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இப்போது தெரிவதெல்லாம் ஆகஸ்ட் 15,16 தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்; 17-ஆந்தேதியன்று முன்பகல் நேரத்தில் கலந்துரையாடலுடன் முடிவடைவதாகத் தெரிகிறது.

பயிற்சிக் கட்டணம் எவ்வளவென்றும் தெரியவில்லை. ஆனால், கட்டணத்தில் இந்த மூன்று நாட்களுக்கான தங்குமிடமும் (5 நட்சத்திர ஹோட்டல்/ரிசார்ட்), உணவு மற்றும் சிற்றுண்டிகளும் அடக்கமாகுமென்று தெரிகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் தகவல்கள் கிடைக்கப் பெறும்போது மீண்டும் இதைப் பற்றி எழுதுகின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் DJ-வை நீங்கள்  J Dharmaraj<dharmarajj@gmail.com> அல்லது @ra1nb0w என்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130603 TATASTEEL RCOM TATAHONEY அலசல்கள்


TATAHONEY

இது 2005 மார்ச் வரையிலும் டிரேட் ஆகிக்கொண்டிருந்த ஒரு ஸ்டாக்; இப்போது டிரேட் ஆகவில்லை. இருந்தாலும் அதன் சார்ட்டை நான் இங்கே உதாரணமாகக் கொடுக்கக் காரணம் என்னவாக இருக்குமென்று யோசிக்கிறீர்களா? நான் கொஞ்ச நாட்களுக்கு முன் Speculator அவர்களின் 34EMA ரிஜக்ஷன் (Rejection) பற்றி ஒரு டிரேடிங் ஸ்ட்ராடஜியின் லிங்க் ஒன்றை கொடுத்திருந்தேன் அல்லவா? அதில் குறிப்பிட்டுள்ளபடி bullish rejection எடுத்துக்காட்டுக்காக ரொம்பப் பொருத்தமாக இருக்குமென்று தோன்றியதால்தான் இந்த பழைய சார்ட்டை இங்கே போடுகிறேன். என்ஜாய்!

BK 20130603 TATAHONEY 34EMA bul rej candidate

 

RCOM

இந்த வார வரைபடத்தில் இருப்பது ஒரு ஏறுமுகமான கொடி (bullish flag) அமைப்பாகும். மார்ச் கடைசி வாரத்திலிருந்து மே இரண்டாம் வாரம் வரை உயர்ந்து வந்த இந்தப்பங்கின் விலை ஒரு கொடிக்கம்பம் போல இருக்கிறது. பிறகு, ஒரு 20 புள்ளிகள் அளவிலேயே டிரேட் ஆகிக் கொண்டிருப்பது ஒரு கொடியைப் போல இருக்கிறது. கொடியைச் சுட்டிக்காட்ட நான் இரண்டு சிறிய இணைக்கோடுகளை வரைந்துள்ளேன். அதன் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு மேலே சென்றால், இப்போதைய கொடிக்கம்பம் அளவிற்கு (அதாவது சுமார் 70 புள்ளிகள் வரை) மேலும் உயர்ந்து, மேலே செல்லும் வாய்ப்புள்ள ஒரு புல்லிஷ் அமைப்பு. அதனால், 112-114 என்ற மேலேயிருக்கும் தடை நிலை, மிகுந்த வால்யூமுடன் உடைபட்டால் “லாங்” செல்லலாம். ஸ்டாப்லாஸ் என்பது கொடியின் கீழே வரைந்துள்ள கோடாகும். உடனடித் தடைநிலையாக 200MA @ 118 மற்றும் 200EMA @ 145 லெவல்கள் இருக்கின்றன.

BK 20130603 RCOM weekly flag

TATASTEEL

அடி மேல் அடிவாங்கிக் கொண்டிருக்கும் மெட்டல் செக்டாரில் இருக்கும் ஒரு பங்கிது. சார்ட்டில் RSI-யில் a, b, c என்று மூன்று லோக்களைக் குறித்துள்ளேன். C என்பது சமீபத்தைய RSI ஹையர் லோ. a-தான் RSI-யின் லோயர் லோ. ஆனால் விலையைப் பார்த்தால், a-விற்கு நேராக இருக்கும் லோவை விட c-க்கு நேராக இருக்கும் சமீபத்திய லோ மேலும் கீழேயிறங்கி, குறைவாக உள்ளது. அதாவது விலை குறைந்துள்ளது; ஆனால், RSI வலிமையாக இருந்து, மேலேயே உள்ளது. இது வலிமையைக் குறிக்கும் classic டைவர்ஜென்ஸ்..ரிஸ்க் எடுக்கலாமென்றிருப்பவர்கள் இந்த விலையில் லாங் பொசிஷன் எடுத்து, ஸ்டாப்லாஸ் ஆக சமீபத்திய லோ-வான 290-க்குக் கீழே வைத்துக்கொள்ளலாம்.

BK 20130603 TATASTEEL classic div

//

Dan Chesler-இன் Stoch-Trap pullback ஸ்ட்ராடஜி (தமிழாக்கம்)


ஹலோ!

எந்தவொரு ஸ்டாக் மார்க்கெட் நியூஸ் சேனலிலும் சரி, எந்தவொரு பங்குச்சந்தை நிபுணரும் சரி, இல்லை பங்குச்சந்தை பற்றிய புத்தகங்களிலும் சரி, நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் வாசகம் என்னவென்றால்,Buy on dips in an uptrend; and sell on rallies in a downtrend”.

அதாவது, ஒரு ஸ்டாக் அப்ட்ரெண்டில் இருக்கும்போது, எப்போதெல்லாம் விலை குறைகிறதோ அப்போது வாங்கி, விலை உயரும்போது விற்று இலாபம் பார்க்கவேண்டும்; அதேபோல, ஒரு டௌண்ட்ரெண்டில் ஏற்றத்தின்போது விற்று, மறுபடியும் விலை குறைந்து வரும்போது வாங்கி இலாபம் பார்க்கவேண்டும்.

இந்த ஸ்ட்ராடஜியை “entering on pullbacks” என்று சொல்வார்கள். (Pullback= அப்ட்ரெண்டில் விலை சிறிதளவு கீழே இறங்குவது; அதேபோல டௌண்ட்ரெண்டில் சிறிதளவு மேலே செல்வது)

இதை ஈசியாகச் சொல்கிறார்களே தவிர, அப்ட்ரெண்டில் எந்த அளவு வரை கீழே இறங்கிவந்தால், நாம் அதனை pullback என்றெடுத்துக்கொண்டு என்ன விலையில் வாங்கலாம்? அதேபோல, டௌன்ரெண்டில் எந்த அளவு வரை மேலே சென்றால், நாம் அதன pullback என்று கணக்கில் கொண்டு விற்று விட்டு, பிறகு விலை கீழேயிறங்கி வரும்போது marupadiyum வாங்கி இலாபம் பார்க்கலாம்?

இந்த சந்தேககங்களுக்கு, கீழேயிருக்கும் கட்டுரை உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன்.

A Technique For Trapping Pullbacks

November 12, 2002 By Dan Chesler

http://www.tradingmarkets.com/recent/A_Technique_For_Trapping_Pullbacks-659752.html

இக்கட்டுரையிலே இவர் (Dan Chesler) இரண்டு விதமான டெக்னிக்கல் சமாச்சாரங்களை உபயோகிக்கிறார்.

முதலில் என்ன டிரெண்டில் இருக்கிறது என்பதற்கு, 50 நாள் மூவிங்க் ஆவரேஜ் (அல்லது 5/35 MACD) உபயோகிக்கிறார்.

50MA உபயோகிக்கும்போது, முடிவு விலை (அதாவது குளோஸ்) 50MA-க்கு மேலேயிருந்தால் அப்ட்ரெண்ட்; கீழேயிருந்தால் டௌண்ட்ரெண்ட் (இந்த சிஸ்டத்தின் படி)

இவ்வாறு ட்ரெண்டை கணித்தபிறகு, அடுத்த டெக்னிக்கல் இன்டிகேட்டர் இவர் உபயோகிப்பது STOCH %K (4 period).இது ஜீரோவிலிருந்து (குலாப் ஜாமூன் ஜீராவிலிருந்து இல்லைங்க! J) நூறு வரை (0-100) ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு ஆசிலேட்டர்.

இவர் கணக்குப்படி, அப்ட்ரெண்டில் இந்த ஆசிலேட்டர் 21க்குக் கீழேயிருக்கும்போது அது ஒரு BUY setup-ஐக் காட்டுகிறது.

அதேபோல, டௌண்ட்ரெண்டில, இது 79-க்கு மேலேயிருக்கும்போது ஒரு SELL setup-ஐக் காட்டுகிறது.

இதுவரை பார்த்தது!

Stoc-Trap BUY setup:

1. முடிவு விலை (close) 50MA-விற்கு மேலேயிருக்க வேண்டும்.

2. STOCH4 ஆசிலேட்டர் 21 லெவலுக்குக் கீழேயிருக்க வேண்டும்.

Stoc-Trap SELL setup:

1. முடிவு விலை (close) 50MA-விற்கு கீழேயிருக்க வேண்டும்.

2. STOCH4 ஆசிலேட்டர் 79 லெவலுக்குக் மேலேயிருக்க வேண்டும்.

இதெல்லாம் ஒரு setup விதிமுறைகள்தான். இந்த விதிமுறைகளுக்குட்பட்டு டெய்லி சார்ட்டில் நமக்கு சிக்னல்கள் கிடைக்கும்போது எப்படி BUY அல்லது SELL டிரேட்களை எடுக்க வேண்டுமென்று பார்க்கலாம். இங்கே அவர் உபயோகப்படுத்திய சார்ட்டுகளையே தமிழாக்கம் செய்துள்ளேன்.

முதலில் அவருக்கு IBM டெய்லி சார்ட்டில் இந்த STOCH TRAP விதிகளின் படி, ஒரு sell setup கிடைத்திருக்கிறது.

படம் 1: Stoch Trap SELL setup IBM daily

படம் 1: Stoch Trap SELL setup IBM daily

பிறகு அடுத்த நாளைய 15நிமிட சார்ட்டில் எங்கே “ஷார்ட்” என்ட்ரி எடுப்பது, எங்கே ஸ்டாப்லாஸ் வைப்பது பற்றி விளக்கியுள்ளதை தமிழாக்கம் செய்துள்ளேன்.

படம் 2: Stoch Trap sell SETUP: ENTRY & STOPLOSS

படம் 2: Stoch Trap sell SETUP: ENTRY & STOPLOSS

 

Setup கிடைத்தபிறகு எப்படி என்ட்ரி எடுத்து, எங்கே ஸ்டாப்லாஸ் வைக்க வேண்டுமென்று புரிகிறதா? இதேபோலத்தான் BUY setup-பிற்கும் நீங்களே எப்படி என்ட்ரி மற்றும் ஸ்டாப்லாஸ் வைப்பது பற்றி ஒரு கணக்கு பண்ணிப் பாருங்களேன்.

அவரின் மற்றைய சார்ட்டுக்கள்!

படம் 4: Stoch-Trap SELL setup

படம் 3: Stoch-Trap SELL setup

படம் 3: Stoch Trap Buy SETUP

படம் 4: Stoch Trap Buy SETUP

5/35 MACD உபயோகிக்கும் முறை!

படம் 5: MACD 5/35 உபயோகிக்கும் முறை

படம் 5: MACD 5/35 உபயோகிக்கும் முறை

 

இந்த Stoch-Trap முறையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து, இலாப நஷ்டக் கணக்குகளைப் போட்டு, நல்லபடியாக முடிவெடுத்து வெற்றி காணுங்கள்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

//