20140901 நிறைய சார்ட்டுக்கள்!


ஹலோ!

இங்கே நிறைய சார்ட்டுக்களைப் போடுகின்றேன். ஒரு சில ஸ்டாக்குகள் சுமார் 100% வரை ஏற்றம் கண்ட பிறகு, தற்போது கரக்ஷனில் இருக்கின்றன. அவற்றில் ஃபிபோநாச்சி ரீட்ரேஸ்மெண்ட் (32%, 50% மற்றும் 68%) கோடுகளும் வரைந்துள்ளேன்.

அதிலேயும் ஒரு சில பங்குகள் டபுள் டாப், ஹெட் & ஷோல்டர் போன்ற அமைப்பில் கரெக்ஷன் ஆகி, தற்போது லோயர் ஹை, லோயர் லோ உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில ஸ்டாக்குகள் மேலே ஏறி, கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபாலிங்க் வெட்ஜ் (Falling wedge) அமைப்பில் உள்ளன. மேலேயிருக்கும் ரெஸிஸ்டென்ஸ் உடைத்து, விலை மேலே சென்றால் வாங்கலாம்.

இன்னும் சில, சேனல் அமைப்பினுள்ளே மேலும், கீழுமாக உலாவிக் கொண்டிருக்கின்றன.

என்ஜாய்!

பாபு கோதண்டராமன்

படம் 1: ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகி, நெக்லைன் உடைபட்டு தற்போது நெக்லைன் ரீடெஸ்ட் நடைபெறுகிறது.

படம் 1: ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகி, நெக்லைன் உடைபட்டு தற்போது நெக்லைன் ரீடெஸ்ட் நடைபெறுகிறது.

 

 

படம் 2: கீழ்நோக்கிச் செல்லுமொரு சேனலில் மேலும், கீழுமாக KTKBANK

படம் 2: கீழ்நோக்கிச் செல்லுமொரு சேனலில் மேலும், கீழுமாக KTKBANK

படம் 3: KOTAKBANK-இன் சமீபத்திய (கடந்த ஒரு வாரத்திய) கேண்டில் அமைப்புக்களைப் பார்த்தால், அடுத்து என்ன செய்யலாம் என்று காளைகளும், கரடிகளும் யோசிக்கிறார்கள் போல

படம் 3: KOTAKBANK-இன் சமீபத்திய (கடந்த ஒரு வாரத்திய) கேண்டில் அமைப்புக்களைப் பார்த்தால், அடுத்து என்ன செய்யலாம் என்று காளைகளும், கரடிகளும் யோசிக்கிறார்கள் போல

படம் 4: JPASSOCIAT-இல் உருவான ஹெட் & ஷோல்டர் ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸலை உருவாக்கியுள்ளது. 62 சதவீத பிபோ ரீட்ரேஸ்மெண்ட் லெவலில் சப்போர்ட் கிடைக்குமா?

படம் 4: JPASSOCIAT-இல் உருவான ஹெட் & ஷோல்டர் ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸலை உருவாக்கியுள்ளது

படம் 5: IOB-யும் 62% ரீட்ரேஸ்மெண்ட் லெவலில் சப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறது.

படம் 5: IOB-யும் 62% ரீட்ரேஸ்மெண்ட் லெவலில் சப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறது.

படம் 6: IDFC அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்டில் மேலே செல்வதைப் பாருங்கள்

படம் 6: IDFC அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்டில் மேலே செல்வதைப் பாருங்கள்

படம் 7: ஃபாலிங்க் வெட்ஜ் இன் IDBI

படம் 7: ஃபாலிங்க் வெட்ஜ் இன் IDBI

படம் 8: 68% லைனில் சப்போர்ட் கிடைக்குமா?

படம் 8: 68% லைனில் சப்போர்ட் கிடைக்குமா?

படம் 9: அப்ட்ரெண்ட்லைன் சப்போர்ட்டில் சமீபத்திய டௌன்ட்ரெண்ட்லைன் ரெஸிஸ்டென்ஸை உடைத்து மேலே செல்கிறது

படம் 9: அப்ட்ரெண்ட்லைன் சப்போர்ட்டில் சமீபத்திய டௌன்ட்ரெண்ட்லைன் ரெஸிஸ்டென்ஸை உடைத்து மேலே செல்கிறது

படம் 10: ஒரு டபுள் டாப் உருவாகிறது. கீழே விழுமா?

படம் 10: ஒரு டபுள் டாப் உருவாகிறது. கீழே விழுமா?

படம் 11: ஒரு டபுள் டாப்; பிறகு ஒரு கரெக்ஷன். தற்போது பிபோ 50% லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 11: ஒரு டபுள் டாப்; பிறகு ஒரு கரெக்ஷன். தற்போது பிபோ 50% லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 12:

படம் 12:

படம் 13: ஆண்ட்ரூஸ் பிட்ச் ஃபோர்க் ரெஸிஸ்டென்ஸ்

படம் 13: ஆண்ட்ரூஸ் பிட்ச் ஃபோர்க் ரெஸிஸ்டென்ஸ்

படம் 14: SBIN முந்தைய டிரிப்ள் டாப் சப்போர்ட் இப்போதைய ரெஸிஸ்டென்ஸ்

படம் 14: SBIN முந்தைய டிரிப்ள் டாப் சப்போர்ட் இப்போதைய ரெஸிஸ்டென்ஸ்

படம் 15: ஹெட் & ஷோல்டரின் கரெக்ஷன், தற்போது அப்ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 15: ஹெட் & ஷோல்டரின் கரெக்ஷன், தற்போது அப்ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்கிறது

படம் 16: டபுள் டாப் & கரெக்ஷன்

படம் 16: டபுள் டாப் & கரெக்ஷன்

படம் 17: டபுள் டாப் கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபிபோ லைன் சப்போர்ட்

படம் 17: டபுள் டாப் கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபிபோ லைன் சப்போர்ட்

படம் 18: RELIANCE அப்டீன்னா, RELCAPITAL எப்டீ?

படம் 18: RELIANCE அப்டீன்னா, RELCAPITAL எப்டீ?

படம் 19:

படம் 19:

படம் 20:

படம் 20:

படம் 21: சேனல் பிரேக்அவுட்

படம் 21: சேனல் பிரேக்அவுட்

படம் 22: மறுபடியும் ஒரு ஃபாலிங்க் வெட்ஜ்

படம் 22: மறுபடியும் ஒரு ஃபாலிங்க் வெட்ஜ்

படம் 23: ட்ரெண்ட் ரெஸ்ட் எடுக்கிறதா?

படம் 23: ட்ரெண்ட் ரெஸ்ட் எடுக்கிறதா?

படம் 24: ஃபாலிங்க் வெட்ஜ் பிரேக்அவுட் ஆகியுள்ளது

படம் 24: ஃபாலிங்க் வெட்ஜ் பிரேக்அவுட் ஆகியுள்ளது

படம் 25: AB=CD என்ற பேட்டர்னுக்கு அருமையான எடுத்துக்காட்டு. என்னன்னு தெரியலைன்னா, கூகிள் பாபாகிட்ட கேட்டுப் பாருங்களேன்! :)

படம் 25: AB=CD என்ற பேட்டர்னுக்கு அருமையான எடுத்துக்காட்டு. என்னன்னு தெரியலைன்னா, கூகிள் பாபாகிட்ட கேட்டுப் பாருங்களேன்! 🙂

படம் 26

படம் 26

படம் 27: ஹெட் & ஷோல்டர் கரெக்ஷனுக்கப்புறம் தற்போது ஒரு ரெக்டாங்கிள் பேட்டர்ன்

படம் 27: ஹெட் & ஷோல்டர் கரெக்ஷனுக்கப்புறம் தற்போது ஒரு ரெக்டாங்கிள் பேட்டர்ன்

20140725 ஒரு சில ஸ்டாக்குகளின் சார்ட்டுகள்


MCDOWELL மேலே டபுள் டாப் ரெஸிஸ்டன்ஸ் (தற்போது இது முக்கியமல்ல); கீழேயிருக்கும் தற்போதைய விலை, முந்தைய சப்போர்ட்டில் உள்ளது. மேலே செல்ல வாய்ப்புள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

MCDOWELL ஃப்யூச்சர் சப்போர்ட் அருகிலுள்ளது.

 

APOLLOTYRE டபுள் டாப்பின் சப்போர்ட் அதற்கு முன்னும், பின்னும் எவ்வாறு ரெஸிஸ்டன்ஸாக இருக்கிறதென்று பாருங்கள்!

APOLLOTYRE ஃப்யூச்சர்

APOLLOTYRE ஃப்யூச்சர்

AXISBANK முந்தைய ரெஸிஸ்டன்ஸ் தற்போது சப்போர்ட்டாக மாறியுள்ளதா? பார்க்கலாம்.

AXISBANK ஃப்யூச்சர்

AXISBANK ஃப்யூச்சர்

BANKNIFTY நீங்களே யோசியுங்கள்! புரிய வில்லையென்றால், இந்தக் கட்டுரையினை ஓரிரு முறை படித்து விட்டு, மறுபடியும் பாருங்கள். ஈசியாகப் புரியுமென்று நினைக்கின்றேன். குட் லக்!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

BankNifty தலைக்கு மேலே ஒரு தடை!

HINDALCO

ஜாக்கிரதை! ஒரு பெயரிஷ் என்கல்ஃபிங்க் கேண்டில், அதுவும் இந்த அப்டிரெண்டில். (மேலும் விபரங்களுக்கு, 2010 நவம்பர் தீபாவளியன்று SBIN கேண்டில் என்னவென்று ஒரு தடவை செக் செய்து கொள்ளுங்கள்)

HINDALCO ஃப்யூச்சர்

HINDALCO ஃப்யூச்சர்

HINDPETRO (HPCL)

அப்ட்ரெண்டில் காணப்படும் இந்த fallling wedge அமைப்பின் ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு மேலே சென்றால், BUY

HPCL Falling Wedge

HPCL Falling Wedge

ICICIBANK

முந்தைய ரெஸிஸ்டன்ஸ் லெவல் தற்போது ஸ்ட்ராங்க் சப்போர்ட்டாக இருக்கின்றது. (வட்டமிடப்பட்டுள்ள பகுதிகள்)

ICICIBANK

ICICIBANK

LT டபுள் டாப் சப்போர்ட்டை உடைத்து மீண்டும் அதன் மேலேயே இருக்கின்றது. (மதில் மேல் பூனை)

LT டபுள் டாப்

LT டபுள் டாப்

NMDC ஃப்யூச்சர் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் அமைந்து, நெக்லைன் உடைபட்டு முந்தைய சப்போர்ட் (நெக்லைன்) இப்போது ரெஸிஸ்டன்சாக மாறி ஒரு ரீடெஸ்ட் நடக்கிறது. அதுவும் இன்றைய கேண்டில் அந்த ரெஸிஸ்டன்ஸ் லெவலில் பெயரிஷ் என்கல்ஃபிங்க்காக இருப்பதால், நல்லதொரு ஷார்ட் டிரேட் போக வாய்ப்புள்ள அமைப்பிது

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

NMDC ஹெட் அண்ட் ஷோல்டர்

JPASSOCIAT ஃப்யூச்சர் லோயர் ஹை, லோயர் லோ அமைந்து ஒரு தெளிவான டவுன்டிரெண்டைக் காட்டுகிறது.

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

JPASSOCIAT ஹெட் & ஷோல்டர்

SAIL ஃப்யூச்சர் சார்ட்டில் தெரியும் டவுன்ட்ரெண்ட் லைனில் பெயரிஷ் என்கல்ஃபிங்க் பேட்டர்ன் தெரிவதால், குறைந்த ரிஸ்க் ஷார்ட் டிரேட் எடுக்கலாம்.

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

SAIL பெயரிஷ் என்கல்ஃபிங்க்

TATASTEEL தலைக்கு மேலே இருக்கும் ரெஸிஸ்டன்ஸ், RSI-யின் நெகட்டிவ் டைவர்ஜென்சால் வலிமையாகக் காணப்படுகிறது

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

டாடாஸ்டீல் ஃப்யூச்சர்

க்வீன் SBIN ஃப்யூச்சர் 3 தடவை சப்போர்ட்டாக இருந்த லைன் நான்காவது முறை உடைபட்டுள்ளது. இப்போது அது ரெஸிஸ்டன்சாக இருக்கிறது. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்

20140725 SBIN S n2 R

கிங் ரிலையன்ஸ்

ஒரு டபுள் டாப் பேட்டர்ன் அமைந்து, சப்போர்ட் உடைபட்டு, தற்போது அந்த லெவல் ரெஸிஸ்டன்சாகத் தெரிகிறது

20140725 RELIANCE dbl top S n2 R

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

 

 

 

 

 

நாணயம் விகடன் டாட் காமில் EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன்


ஹலோ!
நாணயம் விகடன் டாட் காமில் எனது EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் அண்ட் ஷோல்டர் கட்டுரை.

புதியவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள், கட்டுரையின் இறுதிப்பகுதியிலே கேட்கப்பட்டிருக்கும் ரிஸ்க் எவ்வளவு? ரிவார்ட் எவ்வளவு? ரிஸ்க்:ரிவார்ட் ரேஷியோ எவ்வளவு? என்றெல்லாம் அங்கேயே (கீழ்ப்பகுதியிலிருக்கும் “உங்கள் கருத்து” என்ற இடத்திலே) எழுதவும்.

மேலும் அனுபவசாலிகள் இந்தக் கட்டுரையின் நிறை, குறைகளையும் அங்கேயே எழுதவும். அப்போதுதான் என்னால் இனி வரும் கட்டுரைகளிலே மேலும் பல பயனுள்ள தகவல்களை எழுத உதவிகரமாக இருக்கும்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

ரீல் 4: EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்


ஹலோ!

டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…… என்ற தலைப்பினை ஈஸி TA என்று மாற்றி விட்டேன். உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை!

இன்றைய ஸ்டாக் LT

முதலில் மாத வரைபடத்தைப் பார்த்தால், ஒரு ஹெட் & ஷோல்டர் (HnS) தெரிகிறது. அதன் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு, மறுபடியும் விலை மேலேயேறி வந்து அந்த நெக்லைன் சப்போர்ட்டில் ரீ-டெஸ்ட் நடத்தியுள்ளது. முந்தைய நெக்லைன் சப்போர்ட், இப்போது ரெஸிஸ்டன்ஸாக மாறியுள்ளதால், விலை மறுபடியும் கீழேயிறங்குகிறது.

இதிலே கவனிக்க வேண்டியவை: 2009 ஏப்ரல் – 2010 நவம்பர் வரை ஒரு அப்ட்ரெண்ட்; மே 2009 – செப்டம்பர் 2011 வரை ஒரு HnS அமைப்பு உருவாகியுள்ளது. 2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் 1020 என்ற லெவலில் இந்த HnS அமைப்பின் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு விலை கீழேயிறங்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு இறங்கிய இறக்கத்தின் போது, அதிகமாகும் வால்யூம் அளவும் இந்த அமைப்பின் வலிமையைக் காட்டுகிறது.

சரி! 1020 என்ற லெவலில் நெக்லைன் உடைபட்டுள்ளதென்பதனை நோட் செஞ்சிக்கோங்க! ஓகே-வா? இப்போது எவ்ளோ தூரம் (எத்தனை புள்ளிகள் வரை) கீழேயிறங்கும் என்பதனைக் கணக்கிடலாம்!

இந்த அமைப்பின் தலைப் பகுதியின் ஹை 1475. அதற்கு நேர்கீழேயிருக்கும் நெக்லைனின் மதிப்பு 985. எனவே, இந்த அமைப்பின் நெக்லைன் உடைபட்டால், 1475 – 985 = 490 புள்ளிகள் வரை கீழேயிறங்க (உடைபட்ட இடத்திலிருந்து) வாய்ப்புள்ள அமைப்பிது. (அதாவது தலைப்பகுதியின் ஹை – அதற்கு நேர் கீழுள்ள நெக்லைனின் அளவு)

சோ, டார்கெட் = 1020 – 490 = 530 என்ற அளவு வரை LT ஸ்டாக் இறங்க வாய்ப்புள்ளது.

ரிஸ்க் = (ரைட் ஷோல்டரின் ஹை 1245) – 1020 = 225 புள்ளிகள்.

RR ரேஷியோ (ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்று சொல்வார்கள். அதாவது நாமெடுக்கும் ரிஸ்க்குக்குத் தகுந்த ஆதாயம் கிடைக்கிறதாவென்று பார்க்கும் ஒரு கணக்கு) = 225 : 490 => 1 : 2.17

அதாவது நாமெடுக்கும் ஒவ்வொரு ரூபாய் ரிஸ்க்குக்கும் 2.17 ரூபாய் ஆதாயமிருக்கும் டிரேட் இது.

படம் 1: LT - மாத வரைபடத்தில் தெரியும் ஹெட் & ஷோல்டரும், ரீ-டெஸ்டும்

படம் 1: LT – மாத வரைபடத்தில் தெரியும் ஹெட் & ஷோல்டரும், ரீ-டெஸ்டும்

ஓகே! 530 வரை இறங்குமென்றால், ஒரே நேர்க்கோட்டில், ஒரு சில மாதங்களில் இறங்கினாலும் இறங்கலாம். இல்லையென்றால், நமது பொறுமையை சோதித்து மேலும், கீழும் சென்றும் இறங்கலாம். அதுவும் இல்லையென்றால், இறங்காமல் மேலேயும் செல்லலாம்.

18 மாதங்களாக உருவான இந்த அமைப்பு, செப்டம்பர் 2011-இல் நெக்லைன் சப்போர்ட்டை உடைத்துக்கொண்டு கீழே இறங்கிய விலை, 650 வரை கீழே வந்து மறுபடியும் மேலேயேறி, 2012 டிசம்பர்-2013 ஜனவரியில் நெக்லைன் சப்போர்ட் கோட்டினை ரீ-டெஸ்ட் செய்துள்ளது. அந்த (முந்தைய சப்போர்ட்) லைன் தற்போது ரெஸிஸ்டன்ஸாக மாறி, மறுபடியும் விலையினைக் கீழே தள்ளுகிறது. (இதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸின் ப்யூடி!)

இதைத்தான் டெக்னிக்கல் அனாலிசிஸில் சொல்வார்கள், “மார்க்கெட் எப்போதுமிருக்கும்; சான்ஸ்கள் வந்து கொண்டேயிருக்கும். ஒன்றைத் தவறவிட்டால், அதனைத் துரத்தக்கூடாது; பொறுமையுடன் அடுத்த வாய்ப்புக்குக் காத்திருக்கணும்” என்று! செப்டம்பர் 2011-இல் தவற விட்டிருந்தால், ஜனவரி 2013-இல் ஷார்ட் பொசிஷன் எடுக்க அருமையான வாய்ப்பு. (ஸ்டாப்லாஸ் எது தெரியுமா? ரைட் ஷோல்டரின் ஹை-யான 1245-தான்)

சரி! அடுத்ததாக, இந்த ரீ-டெஸ்ட் நடக்குமிடத்தை வார வரைபடத்தில் கொஞ்சம் zoom போட்டுப் பார்க்கலாம். மாத வரைபடத்தில் பார்த்த ரீ-டெஸ்ட் நடந்த அதே இடத்தில் ஒரு சிறிய ஹெட் & ஷோல்டர் தெரிவதையும், அதன் நெக்லைன்(நீல நிறக் கோடு) 905 லெவலில் உடைபட்டு, விலை கீழேயிறங்கி, தற்போது மீண்டும் மேலே ஏறி நெக்லைன் ரீ-டெஸ்ட் நடைபெறுவதையும் பார்க்கலாம்  இது ரெஸிஸ்டன்ஸாக மாற வாய்ப்புள்ளதால், இங்கே ஷார்ட் சென்று (905-915 லெவலில்தான் போகவேண்டும். தற்போதைய 830 லெவல்களில் ஷார்ட் போகக்கூடாது. ஏன் தெரியுமா? ரிஸ்க் ரொம்ப அதிகம்)

படம் 2: LT வார வரைபடத்தில் இன்னுமொரு குட்டி HnS! அதுவும் மாத வரைபடத்தில் ரீ-டெஸ்ட் நடந்த இடத்திலேயே!

படம் 2: LT வார வரைபடத்தில் இன்னுமொரு குட்டி HnS! அதுவும் மாத வரைபடத்தில் ரீ-டெஸ்ட் நடந்த இடத்திலேயே!

ஏனென்றால், ஸ்டாப்லாஸ் 1090 (ரிஸ்க் = 1090 – 905 = 185 புள்ளிகள்)

ரிவார்ட் புள்ளிகள் தலையின் ஹை 1145 – அதற்கு நேர் கீழே இருக்கும் நெக்லைன் லெவல் 885 = 260 புள்ளிகள்.

சோ, இத டார்கெட் = 905 – 260 = 645 வரை கீழே செல்லும் வாய்ப்புள்ள அமைப்பிது.

(குறிப்பு: ரீ-டெஸ்ட் என்றால் என்னவென்று இப்போது புரிகிறதல்லவா? இதன் ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்னவென்றும் நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்களேன்!)

இந்த வார வரைபடத்தின் டார்கெட் முதலில் வருகிறதாவென்று பார்ப்போம். அதன் பிறகுதான், மாத வரைபடத்தில் பார்த்த 530 டார்கெட்டைப் பற்றி யோசிக்கவேண்டும். இங்கே நாம் எழுதிவிட்டதால் மட்டுமே அந்த டார்கெட்கள் எல்லாம் வரவேண்டுமென்ற அவசியமில்லையே! ஏனென்றால்,

மார்க்கெட்தான் மாஸ்டர்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

பி.கு: “என்னங்க சார்? EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்-னு ஹெடிங்க் போட்டுட்டு, 20 மார்க் கொஸ்டீன்னுக்கு ஆன்சர் எழுதி வச்சிருக்கீங்களே!”ன்னு கேக்குறீங்களா? என்ஜாய்!

ரீல் 3: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…..


ரீல் 2 இங்கே

மேலும் ஒரு சில படங்களை இணைக்கின்றேன்.

ASIANPAINT-இன் வார வரைபடத்தில் ஒரு அப்ட்ரெண்ட் தெரிந்தாலும், ஒரு லோயர் லோ உருவாகியுள்ளதால், புல்லிஷ் நிலையில் இந்தப் பங்கு தற்சமயம் இல்லை. 525 என்ற ஸ்விங்க் ஹை-யை உடைத்து மேலே சென்றால்தான் மறுபடியும் புல்லிஷ் நிலையைப் பற்றிப் பேச வேண்டும்.

படம் 1: ASIANPAINT நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம் 1: ASIANPAINT நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்

 

 

AXISBANK-இல் ஒரு கோடு காட்டும் சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ்

படம் 2: AXISBANK-இல் ஒரு கோடு காட்டும் சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படம் 3: BHEL-இன் டௌன்ட்ரெண்ட்

படம் 3: BHEL-இன் டௌன்ட்ரெண்ட்

 

 

 

என்ஜாய்!

பாபு கோதண்டராமன்

ACC ஹெட் & ஷோல்டர் – பாகம் 2


ஹலோ!

கடந்த ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று எழுதியதன் தொடர்ச்சி.

தொடர்ச்சி மட்டுமல்ல; எவ்வாறு டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்தால், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளமுடியுமென்றும் இந்த சார்ட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, இந்த ஸ்டாக் நெக்லைனை உடைத்துக்கொண்டு கீழே சென்றபோது, நாம் ஷார்ட் போக மிஸ் பண்ணியிருந்தாலும், ரீடெஸ்ட் நடக்கும் இந்த நேரத்தில் மார்க்கெட் நமக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறதென்று புரிந்து கொள்ளவேண்டும்.

மற்றவை படத்தில்!

ACC-யில் ஹெட்&ஷோல்டரின் ரீடெஸ்ட் நடக்கும் நேரமிது!

ACC-யில் ஹெட்&ஷோல்டரின் ரீடெஸ்ட் நடக்கும் நேரமிது!

ACC-யில் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் 20130830


விளக்கங்கள் படத்திலேயே!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

ஹெட் அண்ட் ஷோல்டர்: ACC

ஹெட் அண்ட் ஷோல்டர்: ACC

20130418 நிஃப்டியின் அலசல்


நாம் முன்னர் பார்த்துள்ள ஹெட் & ஷோல்டர் அமைப்பின்படி 5200 வரை கீழே செல்லக்கூடிய ஒரு அமைப்பாக இருக்கிறதென்று எழுதியிருந்தேன்.

20130418 NIFTY 1 Daily

நெக்லைன் உடைந்தபிறகு, ஏப்ரல் 3 அன்று நெக்லைனை ஒரு ரீடெஸ்ட் செய்த பிறகு, 5477 வரை வந்தது இன்டெக்ஸ்.

— x x — x x — x x —

ஜனவரி 29, ’13 ஹையைப் பார்த்தால் அது 6111.80 என்ற லெவலிலே இருக்கிறது. இந்த 6111.80 டோ 5477.20 வரையிலான இறக்கம் 634.60 புள்ளிகளாகும். இந்த இறக்கத்தின் Fibonacci retracements லைன்கள் கீழேயிருக்கும் மற்றொரு சார்ட்டில் வரைந்து பார்த்தால்,

 38.2% retracement = 5720

50.0% retracement = 5795

61.8% retracement = 5870

என்ற லெவல்களிலிருப்பதைப் பாருங்கள்.  ஆக, தற்சமயம் 5870 லெவல்கள் ஒரு ரெஸிஸ்டென்சாக அமைய ஒரு வாய்ப்பிருக்கிறது.

20130418 NIFTY 2 Fib levels

இதே சார்ட்டிலேயே DTL என்று குறிப்பிட்டு, ஒரு கோட்டினை சுட்டிக்காட்டியுள்ளேன். இது ஜனவரி மற்றும் மார்ச் “ஹை” விலைகளை இணைத்து வரையப்பட்டுள்ள ஒரு டௌண்ட்ரெண்ட் லைன். இந்த லைனும் ஒரு ரெஸிஸ்டென்சாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். இது சாய்வாக இருப்பதால், ஒரு 5820-5840 லெவல்களை இந்த DTL லைன் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, நிஃப்டியின் தற்போதைய ஏற்றமானது ஒரு ரெஸிஸ்டென்ஸ் லெவல்களுக்கு மிக அருகிலிருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

— x x — x x — x x —

மூன்றாவதாக உள்ள இந்த வார வரைபடத்தைப் பாருங்கள்.

படம் 3: நிஃப்டி வார வரைபடம். அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்

படம் 3: நிஃப்டி வார வரைபடம். அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்

அதிலே, 2009 மார்ச் “லோ”வையும், (ஜெனிஃபர் லோபஸ் – Jennifer Lopez – “ஜே லோ” இல்லைங்க! J) 2011 மார்ச் லோ”வையும் (கட்டம் கட்டி ஹைலைட் செய்யபட்டுள்ள இடங்கள்) சேர்த்து ஒரு லைன் வரைந்து, அதனை அதே திசையிலேயே மேலே நோக்கி நீட்டி வரைந்தால், அந்த அப்ட்ரெண்ட் லைன், ஜனவரி 2012-இலும், ஏப்ரல் 2013-இலும் (அட! போன வாரந்தாங்க!) சப்போர்ட்டாக இருந்திருக்கிறது. இந்த சப்போர்ட் தொடருமா? காளைகள் வலிமை பெறுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

20130325 LICHSGFIN ஒரு டெக்னிக்கல் பார்வை


20130325 LICHSGFIN ஒரு டெக்னிக்கல் பார்வை

ஹலோ!

நேற்றைய பதிவிலே, LIC Housing Finance-இன் சார்ட்டைப் போட்டு, அதைப் பற்றி இன்று எழுதுகிறேனென்று சொல்லியிருந்தேன். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இதுதாங்க அந்தப் படம்.

படம் 1: LICHSGFIN - சும்மா! ஒரு glance விடுங்க!

படம் 1: LICHSGFIN – சும்மா! ஒரு glance விடுங்க!

 முதலில் எனக்குத் தெரிவது ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் பேட்டர்ன்தான்

ஹி..ஹி..ஹீ. எங்கே போனாலும் நான் அதை விட மாட்டேனுங்க! இந்தப் படத்திலிருந்து உங்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கிறேன்.

படம் 2: LICHSGFIN - தெரியுதா ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் வடிவமைப்பு?

படம் 2: LICHSGFIN – தெரியுதா ஒரு ஹெட் & ஷோல்டர்ஸ் வடிவமைப்பு?

அ) தலைப்பகுதியின் உச்சத்திலிருந்து, அதற்கு நேர்கீழே நெக்லைன் வரை ஒரு செங்குத்துக்கோடு (vertical line) வரையுங்கள். அந்தக்கோடு நெக்லைனை எந்த ப்ரைஸ் லெவலில் தொடுகிறது என்று பாருங்கள். பிறகு, டார்கெட் சோன் (target zone), அதாவது எத்தனை புள்ளிகள் இறங்க வாய்ப்பிருக்கிறது எனக் கண்டுபிடிக்கவும்.

ஆ) இந்த H&S பேட்டர்ன், நெக்லைனை எந்த இடத்தில் உடைத்துக்கொண்டு கீழே சென்றுள்ளது (neckline breakdown area)? அதன் அளவு என்ன?

இ) இந்த நெக்லைன் பிரேக்டௌன் அளவிலிருந்து, டார்கெட் சோன் அளவைக் கழித்தால் உங்களுக்கு டார்கெட் கிடைத்து விடும்.

என்னங்க! டார்கெட் கண்டுபிடிக்கிறீங்களா? (“என்னங்க சார்! அதுதான் அந்த பேட்டர்னில் இருந்து நன்றாகக் கீழே இறங்கிவிட்டதே! இங்க்கா எந்துக்கு கண்டுபிடிக்கவால?”ன்னு தெலுங்குல கேக்குறீங்களா? சும்மா! ஒரு பயிற்சிக்குன்னுதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேனுங்களே!

இருங்க, இருங்க! முதல்ல இந்தப் பாட்ட கும்க்கி ஸ்டைல்ல பாடிப் பாருங்க!

 சொல்லிட்டேனே….

   ஒரு பயிற்சின்னு…

சொல்லும்போதே….

   ஒரே ஜாலிதான்..

“பாபு! போதும்யா…! அவங்கெல்லாம் தாங்க மாட்டாங்கய்யா..! நிறுத்திடுங்கப்பு….!” அப்படீன்னும் பரவை முனியம்மா அவர்களின் ஸ்டைலிலும் சொல்லிப் பாத்துடுங்க.

ஈ) அட சொல்ல மறந்துட்டேனுங்க! நான் மறந்தாலும், இனிமே நீங்க மறக்காதீங்க! TA-விலே ஸ்டாப்லாஸ் முக்கியமுங்க! இந்த H&S-க்கு, ரைட் ஷோல்டர் டாப்தான் ஸ்டாப்லாஸ். அதுவும் என்னன்னு பாருங்க!

உ) அப்டீயே இந்த டிரேடுக்கு ரிஸ்க் எவ்வளவு; ரிவார்ட் எவ்வளவுன்னும் கணக்குப் போட்டுப் பாத்து, நமக்கேத்த டிரேடான்னும் பாத்துக்கோணும். (ரிஸ்க் அதிகமாயிருந்து, ரிவார்ட் கொஞ்சம்தான்னா அந்த மாதிரியான டிரேட் எல்லாம் எடுக்காதீங்க!)

சரிங்க! அடுத்த அலசல்!

அடுத்தது நாம் கொஞ்ச நாட்களாகப் பார்த்துவந்த டைவர்ஜென்சுகளில் ஒன்றான பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்தாங்க! 2013 ஆரம்பிச்சத்திலிருந்தே விலையானது குறைந்துகொண்டேயிருக்கின்றது. மார்ச் ஆரம்பத்தில் 234 என்ற “லோ” விலை. அதற்கப்புறம் மார்ச் கடைசி வாரத்தில் (தற்போது) அதைவிடக் குறைந்து ஒரு 215 என்ற அளவில் மற்றொரு “லோ” லெவல். ஆனால், MACD histogram மற்றும் RSI, இந்த இரண்டு “லோ” விலைகளுக்கும் சம்மந்தமில்லாமல் மேலே செல்வதைப் பாருங்கள். கரடிகள் வலிமை இழக்கிறார்களோ என எண்ணத்தோன்றும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் அமைப்பு இது.

படம் 3: எல்‌ஐ‌சி‌எச்‌எஸ்‌ஜி‌எஃப்‌ஐ‌என் -  பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

படம் 3: எல்‌ஐ‌சி‌எச்‌எஸ்‌ஜி‌எஃப்‌ஐ‌என் – பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்

அடுத்த அலசல் மிகவும் முக்கியமான ஒரு நியதி

இது டெக்னிக்கல் அனாலிசிஸில் அடிக்கடி நிகழ்வது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். “ரீடெஸ்ட்” என்கிற டெக்னிக்கல் அனாலிசிஸின் ஒரு மிகப்பெரிய உண்மைக்கும், இதற்கும் மிகவும் நெருங்கிய உறவிருக்கிறது. “என்னங்க பாபு! மறுபடியும் நீங்க கன்னா, பின்னான்னு எழுத ஆரம்பிக்கிறீங்களே” அப்டீன்றீங்களா? என்னங்க செய்றது? நான் சின்ன வயசிலேயிருந்தே அப்படிதாங்க!

சரிங்க! படத்துக்குள்ளாற போலாமா?

படம் 4: LICHSGFIN - S, R-ஆக மாறுவது!

படம் 4: LICHSGFIN – S, R-ஆக மாறுவது!

புள்ளி 1 மற்றும் 2-ஐச் சேத்து, அப்டீயே ஒரு ரெட் கலர் லைன் வரைஞ்சேனா? “என்னாச்சி?” (ந.கொ.ப.கா படம் பாத்துட்டீங்களா? :)) அந்த லைன் அப்படியே 3 அப்புறம் 4-ன்ற இடங்கள்ள அருமையா ஒரு சப்போர்ட்டா (அட! சப்போட்டா பழம் இல்லீங்க; Support = ஆதரவு நிலை) இருக்குறதப் பாருங்க.

பிப்’13 இரண்டாவது வாரத்துல இந்த சப்போர்ட் உடைபட்டு, விலை கீழேயிறங்கிடிச்சி. அப்புறம் ஒரு வாரத்துக்குள்ள (#5 என்ற இடத்தில்) மறுபடியும், முன்னே சப்போர்ட்டாக இருந்த அந்த லைனைப் போய்த் தொட்டுத் திரும்பற ப்யூடி(beauty)-யைப் பாருங்க. இதைத்தான் ரீடெஸ்ட் அப்டீன்னு சொல்றது. மார்க்கெட் கொடுக்கும் ஒரு சான்ஸ். (மார்க்கெட்டில் பொறுமை அவசியம்னு நான் முதல்ல பல தடவை எழுதியிருக்கேனுங்களே!). அதாவது முன்னாடி சப்போர்ட்டா இருந்த அந்த லைன், இப்போ ரெசிஸ்டன்ஸா மாறுவதுதான் இந்த ரீடெஸ்ட்.

நான் ஏன் beauty அப்டீன்ற வார்த்தையை பயன்படுத்தினேனென்றால், ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாமல் 3 மற்றும் 4 என்ற இடங்களில் சப்போர்ட் எடுப்பதும், அதேபோல #5 மற்றும் #6 ஆகிய இடங்களில் ரெஸிஸ்டன்சாக மாறுவதும், இந்த டைனமிக் (dynamic) மார்க்கெட்டில் எப்படி சாத்தியமாகிறது?

மார்க்கெட் இன்னுமொரு சான்ஸ்-ஐ, மார்ச் இரண்டாவது வாரத்துல அழகா கொடுக்குது பாருங்க. இன்னொரு தடவை ரீடெஸ்ட் நடக்குது; இன்னொரு தடவை முந்தைய சப்போர்ட், இப்போதைய ரெஸிஸ்டன்ஸா மாறுது. (முன்னாளில் காதலி; இப்போதைய மனைவி!) ஹ…ஹ..ஹா… என்ன ஒரு அருமையான உவமையோட இந்த கட்டுரையை முடிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெற்றுக்கொள்வது ….

அன்பு நண்பன்,

பாபு கோதண்டராமன்

இந்தச் சார்ட்டக் கொஞ்சம் டெக்னிக்கலாப் பாருங்க – பாகம் 2


ஹலோ!

நேற்றைய புதிரான இந்தப் பதிவின் தொடர்ச்சி.

நிஃப்டி ஸ்பாட்.

இதுதாங்க அந்த மிஸ்டரி (mystery) சார்ட்

படம் 1: நிஃப்டி டெய்லி - ஒரு பொதுவான அலசல்

படம் 1: நிஃப்டி டெய்லி – ஒரு பொதுவான அலசல்

இதோட லெவல்களைப் பார்க்கலாம்.

நீல நிறக் கோடான 200 EMA 5,671 என்ற லெவலில் உள்ளது.

நிஃப்டி இன்டெக்ஸ் இந்த 200EMA-வினை மேலிருந்து உடைத்துக் கொண்டு, அதற்குக் கீழே 5,651.35 என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.

அடுத்த சப்போர்ட்டாக 200SMA (பச்சை நிறக் கோடு) 5616 என்ற லெவல் இருக்கிறது.

இந்த இரண்டு (200EMA & 200SMA) லெவல்களுமே ஒரு முக்கியமான இடமாக கவனிக்கப் படுகிறது. ஏனென்றால், கடந்த 2012 ஜூலையில், இவ்விரண்டு லெவல்களும் கீழ் நோக்கி உடைபட்டாலும், இன்டெக்ஸ் மறுபடியும், உடனே மேல்நோக்கிச் சென்றது.

மறுபடியும், 2012 செப்டம்பரில் கரடிகள் இண்டெக்ஸை கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால், காளைகள் இந்த மூவிங்க் ஆவரேஜ்களின் அருகினில் நல்லதொரு சப்போர்ட் கொடுத்து, இன்டெக்ஸ்ஸின் அப்ட்ரெண்டை தக்க வைத்தனர்.

அதற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் இந்த 200EMA-வை கரடிகள் உடைத்துள்ளனர். எனவேதான், இப்போது ஒரு முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, அப்ட்ரெண்டில் இருக்கும்போது “சப்போர்ட்டில் அல்லது சப்போர்ட்டிற்கு அருகில்” வாங்கி மறுபடியும் மேலே செல்லும்போது இலாபத்தில் விற்கவேண்டுமென்பது விதி. அப்படியானால் இப்போது வாங்கலாமா? இது ஒரு அனாலிசிஸ்.

அடுத்த அனாலிசிஸ் கீழே!

நிஃப்டி இன்டெக்ஸ் Dec’11-லிருந்து, ஒரு அப்ட்ரெண்டில் இருந்து வருகிறது. கீழேயிருக்கும் அட்டவணையைப் பாருங்கள்.

 

Dec’11 Low

Jan’13 High

Up move points

%

4531.15

6111.8

1580.65

34.88%

 

இவ்வாறாக 35% உயர்ந்திருக்கும் இன்டெக்ஸ், காளைகளின் கட்டுப்பாட்டில்தான் இப்போதிருக்கிறதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல! மேலும் கரடிகளின் ஆதிக்கம் அதிகரிக்கலாமென்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், கீழேயிருக்கும் வரைபடத்தைப் பார்த்தால், ஒரு ஹெட்&ஷோல்டர் (இனிமேல் H&S-ன்னு சுருக்குகிறேன்) வடிவமைப்பாக இருப்பதைப் பார்க்கலாம்.

படம் 2: நிஃப்டி டெய்லி - கரடிகளின் ஆதிக்கம் இந்த ஹெட் & ஷோல்டர்ஸ் பேட்டர்னில் தெரிகிறதா?l

படம் 2: நிஃப்டி டெய்லி – கரடிகளின் ஆதிக்கம் இந்த ஹெட் & ஷோல்டர்ஸ் பேட்டர்னில் தெரிகிறதா?l

இந்த H&S அமைப்பு, Sep’12-லிருந்து தற்போது வரையில் ஏழு மாதங்களில் உருவாகியிருக்கிறது. தலையின் உச்சப்பகுதியில் 6110 என்ற அளவிலும், அதற்கு நேர் கீழே நெக்லைன் (சிகப்பு நிறத்திலிருக்கும் சாய்கோடு) 5640 என்ற அளவிலும் உள்ளது. எனவே,

டார்கெட் அளவு: 6110 – 5640 = 470 புள்ளிகள் வரை (பிரேக்டௌன் இடத்திலிருந்து) கீழே இறங்க வாய்ப்புள்ளது.

இப்போது டார்கெட் கண்டுபிடிக்கலாம் வாங்க!

இந்த வடிவமைப்பு, நெக்லைனை எங்கே உடைத்திருக்கிறதென்றால், அது கடந்த 20/03/13 அன்று 5720 என்ற அளவிலே உடைத்துக்கொண்டு கீழே சென்றுள்ளது. நாம் டார்கெட் கண்டுபிடிப்பதற்கு இந்த பிரேக்டவுன் லெவலைத்தான் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

டார்கெட்: 5720 – 470 = 5250 என்ற லெவல் வரையிலும் கீழே செல்ல வாய்ப்புள்ளது.

ஸ்டாப்லாஸ்: வலது ஷோல்டரின் உச்ச அளவான 5950 லெவல்.

என்ட்ரி: “சரிங்க! நான் அந்த நெக்லைன் உடைபடும்போது ஷார்ட் என்ட்ரி போக மிஸ் பண்ணிட்டேன். இப்போது போகலாமா?”ன்னு கேட்டீங்கன்னா, மார்க்கெட் “ரீடெஸ்ட், ரீடெஸ்ட்”ன்னு மறுபடியும் ஒரு சான்ஸ் கொடுக்கும். (ஆனால் இந்த ரீடெஸ்ட் நிச்சயமில்லை). அதாவது இது வரையிலும் சப்போர்ட்டாக இருந்த நெக்லைன் இந்த ரீடெஸ்ட்டின் போது, ரெஸிஸ்டன்சாக மாற வாய்ப்புள்ளது. அப்போதும் ஷார்ட் என்ட்ரி செய்யலாம்.

ரீடெஸ்ட் என்றால் என்ன?

ரொம்ப சிம்பிள்தாங்க! உடைபட்ட லெவலை மறுபடியும் தொட முயற்சிப்பதுதான் ரீடெஸ்ட். அதாவது இங்கே, இதுவரை சப்போர்ட்டாக இருந்த லெவலை உடைத்துக்கொண்டு கீழே சென்றால், கொஞ்சம் மேலே திரும்ப வாய்ப்புள்ளது. அவ்வாறு மேலே திரும்பினால், முந்தைய சப்போர்ட்டானது ரெஸிஸ்டன்சாக மாறுமென்பது டெக்னிக்கல் அனாலிசிஸின் ஒரு கூற்று. இதைப் போலவே முந்தைய ரெஸிஸ்டன்சும் சப்போர்ட்டாக மாறுமென்பது இன்னொரு கூற்று.

சரி! இது ஒரு வலிமையான நெக்லைன் பிரேக்டௌனா?

இந்த ரைட் ஷோல்டரில் (RS என்று குறிப்பிடப்பட்டுள்ள இடம்), விலை மேலே ஏறும்போது வால்யூம் குறைந்து கொண்டே வந்ததையும், கரடிகளின் கை ஓங்கி, விலை குறைந்துகொண்டே வந்து, பிரேக்டௌன் ஆனபோது, வால்யூம் அதிகரித்துள்ளதையும் பார்க்கும்போது, இது ஒரு வலிமையான கரடிகளின் ஆதிக்கத்தைத்தான் நன்கு காட்டுகிறது.

ரைட் ஷோல்டரின் போது மட்டுமல்லாமல், தலைப்பகுதியிலும் (Head என்று குறிப்பிடப்பட்டுள்ள இடம்) விலை உச்சத்தைத் தொடும்போது, வால்யூம் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. இதுவும் காளைகள் வலிமையிழக்கிறார்கள் என்றே காட்டுகிறது.

“என்னங்க நீங்க! காளைகள் பக்கமும் சாதகமா எழுதிட்டு, 5250 வரையிலும் கீழே செல்லவும் வாய்ப்பிருக்குதுன்னு குழப்புறீங்களே”ன்னு கேக்குறீங்களா? அதுதாங்க லைஃப்!

அதெல்லாம் இருக்கட்டுங்க! இதுலேயே ஒரு நெகட்டிவ் டைவர்ஜென்சும் இருக்குது. அதனாலதான் MACD, RSI மற்றும் STOC-க்களையும் கொடுத்திருக்கேன். அதைப் பத்தி நாளைக்கு எழுதறேன்.

 

அதுவரை அன்புடன்,

பாபு கோதண்டராமன்