மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் IAP 2013 12 07


ஹலோ!

மாதமிருமுறை மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நடத்தும் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு முகாம்களின் ஒரு பகுதியான, வரும் சனிக்கிழமை 07/12/2013 அன்று மாலை, “சார்ட் பேட்டர்ன்களை எவ்வாறு பயன்படுத்துவது?” எனற தலைப்பினிலே நான் பேச இருக்கின்றேன்! இல்லையில்லை…. படம் காட்ட இருக்கின்றேன்!

நேரம்: மாலை 4:00 – 6:00

இடம்: எக்ஸ்சேஞ்ச் வளாகம், 30-செகண்ட் லைன் பீச், சென்னை – 600001 (சென்னை பீச் இரயில் நிலையம் எதிர்புறம் & GPO-விற்குப் பின்னால்)

அனுமதி இலவசம்! (முன்பதிவு செய்துகொள்ளுங்கள்)

Contact Details: 25228951/52/53

Email: mse.investoredu@gmail.com

 

தேநீர்: மாலை 3:30

 

 

 

 

MSE INSTITUTE OF CAPITAL MARKETS

of

MADRAS STOCK EXCHANGE LIMITED

 

Cordially invite you for the

 

INVESTORS AWARENESS & EDUCATION PROGRAMME

on

 

How to use Chart Patterns effectively?”

 

By

 

Mr. Babu Kothandaraman,

Investment Consultant

 

 

Date: Saturday, 7th December, 2013

Time:  04.00 p.m. to 06.00 p.m.

 

Venue: Exchange Building, IV Floor,

30, Second Line Beach,

Chennai-600 001.

 

Request confirmation of Participation

on or before 6th December, 2013

 

Contact Details: 25228951/52/53

Email: mse.investoredu@gmail.com

 

No Registration Fee                                                  Tea:  3.30 p.m.

 

Profile of Mr. Babu Kothandaraman

 

He holds Diploma in Hotel Management and Catering Technology from the Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition.

 

He is a system trader, an avid follower of technical analysis.  He writes about Technical Analysis in Tamil, on his blog “Kaalaiyum Karadiyum”.  He also writes articles in magazines.  He is also a visiting faculty at BSE.   He has conducted a couple of training sessions on technical analysis.

ரிஸ்க்கா? அது எனக்கு ரஸ்க் சாப்டற மாதிரி..!


நாம் அனைவரும் ஏதேனும் ஒரு மோட்டார் வாகனம் வைத்துள்ளோம். அவற்றின் கெபாஸிட்டிக்கேற்ப அதிக பட்ச வேகம் 100km, 140km, 200 km என்று ஸ்பீடோமீட்டரில் குறிக்கப்பட்டிருக்கும். நாம் தினசரி வேலைக்குச் செல்லும்போதோ, மார்க்கெட் அல்லது கிரவுண்டிற்குச் செல்லும்போதோ நம்மால் அந்த அளவு வேகத்திற்கு சென்று வருகிறோமா? அவ்வளவு ஏன், எப்போதாவது வெளியூர் போகும்போது ஹை-வேஸில்தான் அந்த அளவு வேகம் சென்றிருக்கிறோமா? சரி! நாம்தான் செல்லவில்லை. ஆனாலும் மற்ற வாகனங்கள் மிக,மிக அதிக பட்ச வேகத்தில் பறக்கின்றனவா? இல்லையே!

ஆனால், டிரேடர்கள் மட்டும் ஏன் உயர்ந்த பட்ச வேகத்திலேயே பறக்க ஆசைப்பட்டு ஆக்சிலரேட்டரில் வைத்த காலை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? (இல்லை முறுக்கிய throttle-ஐ முறுக்கியபடியே வைத்துக்கொண்டு பயணம் செய்ய எத்தனிக்கிறார்கள்?)

வெறும் 30-40 ஆயிரம் வைத்துக்கொண்டு, ஸ்டாக் புரோக்கர் கொடுக்கிறார் என்பதற்காக 7-8 மடங்கு leverage எடுத்து, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலே வர்த்தகம் செய்வது எதற்காக? நாம் டே-டிரேடிங் செய்கிறோம் என்பதற்காக நமக்கு என்ன கொம்பு முளைத்து விட்டதா? நாம் மட்டும்தான் வணிகர்களா என்ன?

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே, நாமும் பல வணிகர்களைச் சந்திக்கின்றோம். மளிகைக்கடை, அரிசிக்கடை வியாபாரிகள், பூ, பழம் விற்பவர்கள், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்பவர்கள் எல்லாம் நம்முடைய ஏரியாவில் நம் கண் முன்னாலேயே வளர்ந்திருப்பார்கள்; வளர்ந்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இவர்களுக்கெல்லாம் என்னதான் வாடிக்கையாளர்கள் ஆதரவு, லொகேஷன் அட்வாண்டேஜ், தரமான சேவை முதலியன நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், நாம் பார்க்க மறப்பது (மறுப்பதும் கூட) அவர்களின் money management எனப்படும் பண மேலாண்மைத் திறன்தான்.

நாம் ஈசியாகச் சொல்லிவிடலாம், “என்ன சார்! அவங்க கையிலே எப்பவுமே பணம் புழங்கிக் கிட்டேயிருக்கு. என்ன பிரச்னை வந்தாலும் சமாளிச்சுடலாமே”ன்னு. அது கரெக்ட்தான்; ஆனாலும் அது மட்டுமே அவர்களின் வெற்றிக்குச் சரியான காரணமில்லை. கையில் பணம் புழங்குவதென்பது வேறு: பிசினசுக்குத் தக்கவாறு, இருக்கும் பணத்தை வைத்துத் தகுந்த அளவு ரிஸ்க் எடுப்பதென்பது வேறு. அவர்களுக்கும் பிஸினஸில் சில, பல சமயங்களில் கஷ்ட, நஷ்டங்கள் வந்திருக்கும். அப்போதெல்லாம் அவர்களின் ரிஸ்க் மானேஜ்மென்ட் எவ்வாறாக இருந்திருக்குமென்று நாம் யோசிக்க வேண்டும்.

மளிகைக்கடைக்காரருக்கு ஒரு சில பிராண்ட் (brand) சரக்குகள் தேங்கிப் போகலாம். பூக்கடைக்காரருக்கும், பழக்கடைக்கடைக்காரருக்கும் சரக்குகள் விற்காமல் அழுகிப் போகலாம்.  இதைத் தவிர்க்கவே அவர்களின் பொசிஷன் சைஸிங் (position sizing- நம்முடைய பாஷையில்) கிருத்திகை, அமாவாசை போன்ற விசேச நாட்களுக்கும், ஏனைய சாதாரண நாட்களுக்கும் வேறுபடும்.

அவர்களுக்குத் தெரியும் எப்போது அதிக ரிஸ்க் எடுக்கலாம்; எப்போது ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்ளவேண்டுமென்று!

இந்தத் தத்துவத்தை டிரேடர்கள் புரிந்து கொண்டார்களேயானால் பங்குச்சந்தையில் நிலைத்திருக்கலாம்; இலாபம் ஈட்டலாம்.

புரிந்து கொள்வோமே!

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

தமிழ்நாடு இன்வெஸ்டார் அசோசியேஷன்


அன்புடையீர்,
நேற்று (7 ஆகஸ்ட்,2011-ஞாயிறு) நடைபெற்ற TNIA-வின் கூட்டத்தில் (பார்வையாளராக) கலந்து கொள்ளுமாறு நண்பர் திரு.ஸ்ரீநிவாசன் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. சென்று கலந்து கொண்டேன். இந்த அமைப்பின் வழக்கமான கூட்டங்கள் நடைபெறும் விவரத்தை http://www.tiaindia.com/tia_meeting.htm என்ற லிங்க்-கிலிருந்து எடுத்து அதன் தமிழாக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.
– பாபு கோதண்டராமன்
REGULAR MEETINGS
Every 1st Sunday and 3rd Sunday at 10.00 am
Venue : Vivekananda Hall,
P.S.Higher Secondary School,
215, R.K.Mutt Road, Mylapore,Chennai-600 004.

வழக்கமான கூட்டங்கள் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறுகளில் காலை 10:00 மணிக்கு நடைபெறும்

இடம்: விவேகானந்தா ஹால், P.S. ஹையர் செகண்டரி ஸ்கூல், 215-R.K.மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-600004.

சிறப்புக் கூட்டம் 

செபி-யால் ஸ்பான்சர் செய்யப்படும் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

திரு. நித்தின் ரஹேஜா, முதலீட்டு மேலாளர், “சில்லறை (சிறு) முதலீட்டாளர்களுக்கான வியூகம்” என்ற தலைப்பில் பேச உள்ளார்.

நாள்: 12-ஆகஸ்ட்-2011, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:45  (தேநீர்-5:15 மணிக்கு)

இடம்: வாணி மகால், மினி ஹால், 103-G N செட்டி சாலை, தி. நகர், சென்னை-600017

அனைவரும் வருக!

FUTURE PROGRAMME

Tamil Nadu Investors Association (Regd.)

(SEBI Recognised), Chennai- 600 034


cordially invites you with your investor friends for an

An Investors Awareness Programme
(Sponsored by SEBI)

SPEAKS ON

STRATEGY FOR RETAIL INVESTORS

by

Mr. Nitin Raheja
Investment Manager

On

12th August 2011 (Friday)

Venue

Vani Mahal Mini Hall
103, G. N. Chetty Road,
T. Nagar, Chennai – 600 017

Date & Time : Friday, the 12th August 2011 at 5.45 P.M.

  INVESTORS ARE WELCOME


Contact Us at  
Tamilnadu Investors’ Association,
Registered Office,
‘Anna Illam’
No. 10 – D  Avenue Road
Nungambakkam
Chennai – 600034.
Tamil Nadu India.
Telephone : 2831 2538
Telefax: 2831 2539
E-mail :president@tiaindia.com, secretary@tiaindia.com

சென்னைப் பங்குச்சந்தை (MSE)-யின் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்


சென்னைப் பங்குச்சந்தை (Madras Stock Exchange), முதலீட்டாளர்களுக்கான இலவச விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்களை, பிரதி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஜூலை 16-ஆந்தேதியன்று  மாலை 4 மணியளவில் அடுத்த முகாம் நடக்க இருக்கிறது.

இடம்: சென்னைப் பங்குச்சந்தை, 4-வது மாடி, எண்-30, செகண்ட் லைன் பீச் (Second Line Beach), சென்னை – 600001. சென்னை பீச் இரயில் நிலையம் & பர்மா பஜார் அருகில், தலைமைத் தபால்நிலையம் பின்புறம்.

தொடர்புக்கு: 044-2521 8100

உரையாற்றுபவர்கள்:

திரு. M. பழனியப்பன், உறுப்பினர், செ.ப.ச – “தற்போதைய சந்தையின் போக்கும், அதற்கான வழிமுறைகளும்”

Mr. M. Palaniappan, Member, Madras Stock Exchange, will speak on “CURRENT MARKET
SENTIMENT AND ITS STRATEGIES”.

திரு. S. ஜெயாமஞ்சு, செபி, எஸ்.ஆர்.ஓ, சென்னை

Ms. S. Jayamanju, SEBI, SRO, Chennai, will address the participants.

திரு. V. நாகப்பன், இயக்குனர், செ.ப.ச

Mr. V. Nagappan, Director, MSE, will also interact with the participants.